Home » Entries posted by Shankar U (Page 139)
Entries posted by Shankar

மக்கள் இயக்க நிர்வாகிகள் டெல்லியில் முகாம்?

Comments Off on மக்கள் இயக்க நிர்வாகிகள் டெல்லியில் முகாம்?

நடிகர் விஜய், சினிமாவில் நடிப்பதுடன் மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில், தமிழகம் முழுவதும் விஜய் நூலகம், விஜய் பயிலகம், விஜய் இலவச சட்ட மையம் ஆகியவற்றை அமைத்து வருகிறார். அரசியலில் விஜய் நுழைவதற்கு ஆன முதல்கட்டமாக தன் மக்கள் இயக்க மாணவரணி, மகளிரணி, இளைஞரணி, ஐடி அணி ஆகியோரை தனித்தனியே அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். கடந்தாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்தது, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவி அளித்தது மக்களிடையே அதிகம் பேசப்பட்டது. விஜய் […]

Continue reading …

இந்தி திணிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Comments Off on இந்தி திணிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இன்று இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய உயிர் நீத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘அண்ணா கலைஞர் கழகத்தலைவர் அவர்களின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்தி ஆதிக்கமெனும் நெருப்பு தமிழ்நாட்டை உரசாமல் இருக்க, தங்களையே தீக்கிரையாக்கிக் கொண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவாக, தமிழ்நாடெங்கும் இன்றைய தினம் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க […]

Continue reading …

தேனிலவுக்கு ராமர் கோவிலா? விவாகரத்து கேட்ட மனைவி!

Comments Off on தேனிலவுக்கு ராமர் கோவிலா? விவாகரத்து கேட்ட மனைவி!

இளம் மனைவி தேன் நிலவுக்கு கோவா அழைத்து செல்வதாக தன்னிடம் கூறிவிட்டு அதன் பிறகு தனது கணவர் தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்ற ராமர் கோவிலுக்கு அழைத்துச் சென்றதால் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் போபாலை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி தனது கணவரிடம் தேன்நிலவுக்கு கோவா அழைத்துச் செல்லுமாறு கூறியிருந்தார். கணவரும் அதற்கு ஒப்புக்கொண்டிருந்தார். அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கணவரின் தாயார் கூறியதாக […]

Continue reading …

ஜெயகுமார் பேட்டியால் பரபரப்பு!

Comments Off on ஜெயகுமார் பேட்டியால் பரபரப்பு!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அரசியலில் எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியலில் எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என பலர் கூறுவார்கள் என்பதும் அதற்கு பொருள் எதிரி போல் இருந்தவர்கள் திடீரென நண்பராகி விடுவார்கள் என்பதும் நண்பராக இருந்தவர்கள் திடீரென எதிரி ஆகி விடுவார்கள் என்பதும் இதெல்லாம் அரசியலில் சகஜம் என்றும் கூறப்படுவது உண்டு. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி குறித்த கேள்விக்கு அரசியலில் எதிரிகளும் […]

Continue reading …

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட திமுக மகன் & மருமகள்!

Comments Off on ஆந்திராவில் கைது செய்யப்பட்ட திமுக மகன் & மருமகள்!

பணிப்பெண்ணை சித்திரவதை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கருணாநிதி. இவரது மகன் ஆண்டோ வீட்டில், 18 வயது இளம் பெண் ஒருவர், பணிபுரிந்து வந்தார். அப்பெண்ணை ஆண்டோவும், அவரது மனைவி மெரலினாவும் சேர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். அந்தப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியும், கைகளில் சிகரெட்டால் சூடு வைத்தும், துன்புறுத்திய […]

Continue reading …

போதுமான பயணிகள் இல்லை மூடப்படும் ரயில் நிலையம்!

Comments Off on போதுமான பயணிகள் இல்லை மூடப்படும் ரயில் நிலையம்!

ரயில்வே துறை போதுமான பயணிகள் வரவில்லை என்பதால் தமிழகத்திலுள்ள ஒரு ரயில் நிலையத்தை மூடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள கரூர் சேலம் வழித்தடத்தில் வாங்கல் என்ற ரயில் நிலையம் இயங்கி வருகிறது. இந்த ரயில் நிலையம் இன்று முதல் அதாவது ஜனவரி 25ம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் போதிய பயணிகள் இல்லை என்றும் அதன் காரணமாக இந்த ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. எனவே இன்று முதல் […]

Continue reading …

அமைச்சர் எல் முருகனின் கேள்வி!

Comments Off on அமைச்சர் எல் முருகனின் கேள்வி!

நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் “பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பில்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு […]

Continue reading …

மேரி கோம் ஓய்வு..!

Comments Off on மேரி கோம் ஓய்வு..!

பிரபல இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேரி கோம் 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்று வெண்கலம் வென்று சாதனை படைத்தவர். அதுமட்டுமல்லாமல் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர். 2014ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றார். இவ்வாறு குத்து சண்டையில் பல சாதனைகளை படைத்து […]

Continue reading …

முதலமைச்சர் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை!

Comments Off on முதலமைச்சர் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெற்றியை தவறவிடும் அமைச்சர்கள் பதவி பறிபோகும் என எச்சரித்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல் பாஜகவும் பல்வேறு கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா […]

Continue reading …

விநாயகர் சிலை கரைக்க இனி கட்டணம்!

Comments Off on விநாயகர் சிலை கரைக்க இனி கட்டணம்!

இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகளை ஆறு, கடல் உள்ளிட்ட நீர்ப்பகுதியில் மக்கள் கரைத்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல்துறை செயலாளர் தலைமையிலான குழுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அனுபமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர் நிலைகள் பராமரிப்புக்கு செலவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அறிவிக்கப்படாத நீர் நிலைகளில் […]

Continue reading …