Home » Entries posted by Shankar U (Page 140)
Entries posted by Shankar

இலங்கை அரசின் புதிய சட்டம்!

Comments Off on இலங்கை அரசின் புதிய சட்டம்!

இலங்கை அரசு சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள மக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் சமூக வலைதளங்களை முக்கிய கருவியாக பயன்படுத்தினர். இதனால் அப்போதைய அதிபர் ராஜபக்சேவை பதவி விலகச் செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்தியது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் சமூக ஊடகங்களில் பதிவிடும் தனி நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் […]

Continue reading …

ஹெச்.வினோத் படம் டிராப்!

Comments Off on ஹெச்.வினோத் படம் டிராப்!

ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருந்தது. அந்த படம் கிட்டத்தட்ட டிராப் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அந்நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் “தக்லைப்,” அன்பறிவி இயக்கும் “கமல் 237” திரைப்படம் மற்றும் சிம்பு, சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களை குறிப்பிட்டுள்ளது. இப்பட்டியலில் ஹெச். வினோத்தின் திரைப்படம் குறித்த அறிவிப்பு இல்லை. இதனால் கமல்ஹாசனின் […]

Continue reading …

மதுரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!

Comments Off on மதுரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த பேசியதாவது, “ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராடியவர்களை அதிமுக அரசு அடித்து விரட்டியது, ஜல்லிக்கட்டு போட்டிக்காக இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு அதிமுக அடி பணிந்தது அதிமுக அரசு. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடைகள் அனைத்தையும் உடைத்தது திமுக அரசுதான். தை மாதம் வந்தாலே மூர்த்தி ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறி விடுவார். தமிழர்’ என்ற அடையாளத்துடன் ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு திருவிழாவை ஒற்றுமையாக நடத்துவோம்! ஏறு தழுவுதல் […]

Continue reading …

திரையரங்கில் வெளியாக உள்ள 7 தமிழ் படங்கள்!

Comments Off on திரையரங்கில் வெளியாக உள்ள 7 தமிழ் படங்கள்!

இந்த வாரத்தில் மட்டும் தமிழ் சினிமாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு 7 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “புளூ ஸ்டார்.” இப்படத்தை இயக்குனர் எஸ். ஜெயகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேசன் மற்றும் நீலம் புரடக்சன் தயாரித்துள்ளன. இப்படம் ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வாரம் தியேட்டரில் வெளியாகவுள்ளது. அதேபோல் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி […]

Continue reading …

மீனவர்களை பாராட்டிய உதயநிதி!

Comments Off on மீனவர்களை பாராட்டிய உதயநிதி!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புயல்,  மழை, வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தாலும், மக்களை காக்க முதலில் களத்திற்கு வருபவர்கள் நம் மீனவ நண்பர்கள் என்று தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அரசு சார்பில் தூத்துக்குடியில் அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஒருங்கிணைத்த அரசு அலுவலர்களுக்கு, மீன்வளத்துறை சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் இன்று பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சமீபத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தூத்துக்குடி நெல்லை […]

Continue reading …

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததே திமுகதான்; அண்ணாமலை!

Comments Off on ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததே திமுகதான்; அண்ணாமலை!

தமிழக பாஜக அண்ணாமலை “ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தமிழகத்தில் தடை விதித்ததே ஒட்டுண்ணி மாடல் திமுகதான்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: “பொய் சொல்வதை மட்டுமே முழு நேரப் பிழைப்பாகக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த முறை ஆளுங்கட்சியாக இருக்கும்போது, யார் எதை நீட்டினாலும் கையெழுத்து போட்டுவிட்டு, டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க, தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று மன்னிப்பு கோரிய ஸ்டாலின் தற்போது, துண்டுச் சீட்டில் யார் எதை எழுதிக் கொடுத்தாலும் அப்படியே வாசித்து […]

Continue reading …

நீதிபதி தொடர்ந்த வழக்கு!

Comments Off on நீதிபதி தொடர்ந்த வழக்கு!

நீதிபதி ஒருவர் சமீபத்தில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக கொண்டாட்டத்தால் முடங்கிய சாலைகளின் போக்குவரத்தால் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். அயோத்தியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராமர் கோவில் திறக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ராமர் கோவிலில் கொண்டாட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றது. இந்த ஊர்வலங்களால் ஒரு சில நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது. ராமர் கோவில் திறப்பு விழாவின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தினால் நீதிமன்றத்திற்கு செல்லும் சாலை முடக்கப்பட்டது குறித்து தாமாக முன்வந்து ராஜஸ்தான் […]

Continue reading …

ஆளுநர் தேநீர் விருந்து காங்கிரஸ் -கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

Comments Off on ஆளுநர் தேநீர் விருந்து காங்கிரஸ் -கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. வருகிற 26ம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆளுநர் மாளிகை சார்பாக தேநீர் விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு […]

Continue reading …

பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

Comments Off on பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

பட்டாசு ஆலை ஏற்பட்ட விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கும் நிலையில் அவைகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சில இடங்களை அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. விருதுநகர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து காரணமாக ஆலையில் இருந்த […]

Continue reading …

ராஜேஷ் தாஸ்க்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

Comments Off on ராஜேஷ் தாஸ்க்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

விழுப்புரம் நீதிமன்றம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வரும் 29ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது. இதனிடையே விழுப்புரம் முதன்மை அமர்வு […]

Continue reading …