
சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான “அன்னபூரணி” திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. ஆனால் இப்படம் ஓடிடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் 75வது படம் “அனனப்பூரணி.” இத்திரைப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கியிருந்தார். தமன் இசையமப்பில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில், நயன்தாரா நடிப்பில் உருவான “அன்னப்பூரணி” […]
Continue reading …
15வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமான பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த ஆறு மாதங்களாக சிறையில் உள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து காணொளி மூலம் […]
Continue reading …
ஆளுநர் சேலம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஆளுநர் ஆர்.என் ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார். துணை வேந்தர் ஜெகநாதனக்கு ஆளுநர் ஆதரவு தருவதை கண்டித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் திரண்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக ஆளுநரை கண்டித்தும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன […]
Continue reading …
தமிழ்நாடு அரசு பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை செய்கிறது என்று செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்து இந்த அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஜூஜூபி என்றும் பழைய தகரத்திற்கு பாலிஷ் போடும் வேலையை தான் தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது என்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தமிழக அரசை […]
Continue reading …
கேரளம் மாநில சுகாதாரதுறை அமைச்சர் ஆயுஸ்மான் ஆயோக்யா மந்தி என்று இந்தியில் பெயர் மாற்றாததால் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, ஆயுஸ்மான் ஆயோக்யா மந்தி என்று பெயர் மாற்றாததால் மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை என கேரளம் மாநில சுகாதாரதுறை அமைச்சர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். தேசிய சுகாதார இயக்கம் (National Health Misson) திட்டத்தின் மருத்துவ மையங்களை ஆயுஸ்மான் […]
Continue reading …
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. முன்கூட்டியே இன்று வெளியாகியுள்ளதை அடுத்து விண்ணப்பதாரர்கள் முடிவுகளை பார்த்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்கள் மற்றும் குரூப் 2ஏ பதவிகளில் சுமார் 6000 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. இதற்கான முதன்மை முதல் நிலை தேர்வுகள் முடிந்து, கடந்த ஆண்டு 25ம் தேதி முதனிலை தேர்வுகள் நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ […]
Continue reading …
மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான வழக்கு ஒன்றிற்காக அவரது மரணத்திற்கு பிறகு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பர்வேஸ் முஷாரப்பிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அறிமுகம் செய்தார். இதையடுத்து அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இத்தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச […]
Continue reading …
மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவஹருல்லா சிறுபான்மை மக்களின் நலன்கள் குறித்து ஈபிஎஸ் கூறுவதை நம்ப மாட்டோம் என பேசியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பயணித்தால் நாடாளுமன்றம் செல்லலாம் என சிலர் தப்பு கணக்கு போட்டு வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களின் நலன்களை பற்றி கூறும் வார்த்தைகளில் உண்மை துளியும் இருந்ததில்லை. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை […]
Continue reading …
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்தாண்டு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், “கட்சியிலிருந்து நீக்கிய பிறகும் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொண்டு ஓ.பி.எஸ் கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த கூடாது’’ என எடப்பாடி பழனிசாமி […]
Continue reading …
மணிப்பூர் மாநில அரசு ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஜனவரி 14ம் தேதி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. மணிப்பூர் அரசு யாத்திரைக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என மணிப்பூர் அரசு கருதுகிறது என்றும், யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாது […]
Continue reading …