Home » Entries posted by Shankar U (Page 149)
Entries posted by Shankar

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கமல் வாழ்த்து!

Comments Off on ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கமல் வாழ்த்து!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1992ம் ஆண்டு, மணிரத்னம் இயக்கிய “ரோஜா” படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தேசிய விருதை வென்றார். “ஜெண்டில்மேன்,” “தில்ஷே,” “ஜீன்ஸ்,” “ராவணன்,” “எந்திரன்,” “2.0,” “மாமன்னன்” உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி, பல பாடல்கள் மற்றும் படங்களின் பின்னணி இசையை ஹிட் செய்துள்ளார். “ஸ்லம்டாக் மில்லியனார்” என்ற படத்தின் இசையமைப்பிற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்று சாதித்தார். இன்று ஏ.ஆர்.ரஹ்மான் தன் 57வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் […]

Continue reading …

‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி!

Comments Off on ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி!

பல்வேறு பொருட்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் கோவையில் தொடங்கிய பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள், நகைகள் என அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி. இந்த ஆண்டின் முதல் சிறப்பு விற்பனை கண்காட்சியை கோவை […]

Continue reading …

கிளாம்பாக்கம் மெட்ரோ பணி தொடங்க அன்புமணி கோரிக்கை!

Comments Off on கிளாம்பாக்கம் மெட்ரோ பணி தொடங்க அன்புமணி கோரிக்கை!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாததால் பயணிகள் அவதி அடைந்து வருவதாகவும், உடனடியாக மெட்ரோ பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

Continue reading …

‘கலைஞர் 100 விழா’!

Comments Off on ‘கலைஞர் 100 விழா’!
‘கலைஞர் 100 விழா’!

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி தமிழ் சினிமாவில் “பராசக்தி” உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு புரட்சிகரமான வசனங்களையும், பாடல்கள், திரைக்கதை, தயாரிப்பு எனப் பன்முகக் கலைஞராக பணியாற்றியவர். கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி அரசியல், மற்றும் திரைத்துறையில் பல முன்னெடுப்புகள் எடுத்துள்ள அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழாவிற்கு […]

Continue reading …

“லால் சலாம்” படத்தின் புதிய போஸ்டர்!

Comments Off on “லால் சலாம்” படத்தின் புதிய போஸ்டர்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லால் சலாம்’ திரைப்படக்குழு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” படத்திற்குப் பின் “தலைவர் 170” படத்தில் நடித்து வருகிறார். அவர் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில், ‘லால் சலாம்‘ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோருடன் இணைந்து, மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் ரஜினி சம்மந்தமான சில காட்சிகள் மும்பை உள்ளிட்ட இடங்களில் சில மாதங்களுக்கு முன் படமாக்கப்பட்டது. இப்படத்தின் […]

Continue reading …

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்!

Comments Off on வானிலை ஆய்வு மையத்தின் தகவல்!

வானிலை ஆய்வு மையம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (06.01.2024) […]

Continue reading …

காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கோரிக்கை!

Comments Off on காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கோரிக்கை!

மேற்கு வங்கத்தில் உடனடியாக குடியசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மேற்குவங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகிய வலியுறுத்தியுள்ளனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி மேற்கு வங்கம் மாநிலத்தில் நடந்து வருகிறது. இங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டத்தைக் கண்டித்து மேற்கு வங்கம் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேற்குவங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் […]

Continue reading …

சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கிய வணிகத்துறை அதிகாரிகள்!

Comments Off on சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கிய வணிகத்துறை அதிகாரிகள்!

சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஜிஎஸ்டி வரி வசிலிப்பில் முறைகேடு செய்த இரு அதிகாரிகள் சிக்கினர். நேற்று மாலை புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள வணிகவரி வளாகத்தில் சென்னையிலிருந்து 3 கார்களில் வந்த சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் பெண் அதிகாரி ஒருவரை சென்னை சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி வசூலிப்பில் முறைகேடு செய்ததாக வணிக வரித்துறை அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம் […]

Continue reading …

ஈரோட்டில் ரவுடிகளால் பரபரப்பு!

Comments Off on ஈரோட்டில் ரவுடிகளால் பரபரப்பு!

தலைமறைவாக இருந்த ரவுடிகளை பிடிக்க போலீசார் முயற்சித்தபோது அவர்கள் அரிவாளால் தாக்கியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிவசுப்ரமணியன் மீது களக்காட்டில் நடந்த கொலை தொடர்பான வழக்கு உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தலைமறைவாக உள்ள ரவுடி சிவசுப்ரமணியனை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் சிவசுப்ரணியன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து திருநெல்வேலி தனிப்பிரிவு போலீசஸார் இன்று […]

Continue reading …

கோவையில் பழங்கால கார் கண்காட்சி!

Comments Off on கோவையில் பழங்கால கார் கண்காட்சி!

பழங்கால கார் கண்காட்சி கோவையில் நடைபெற்றது. இக்கண்காட்சியை காண பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கண்காட்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் காட்சி படுத்தப்பட்டன. கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில், உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில் பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து கார்களில் அமர்ந்து […]

Continue reading …