Home » Entries posted by Shankar U (Page 154)
Entries posted by Shankar

தோனி ரசிகரிடம் கூறியதன் பின்னணி என்ன?

Comments Off on தோனி ரசிகரிடம் கூறியதன் பின்னணி என்ன?

தோனி இந்திய அணியில் 2004ம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார். தன்னுடைய திறமையான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி 2007ம் ஆண்டே இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின் படிப்படியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியையும் பெற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். 2019ம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அவர் இப்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இப்போது துபாயில் நண்பர்களோடு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தோனியின் வீடியோ ஒன்று […]

Continue reading …

முருகதாஸூடன் இணையும் சிவகார்த்திகேயன்!

Comments Off on முருகதாஸூடன் இணையும் சிவகார்த்திகேயன்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “தர்பார்” திரைப்படத்தின் தோல்வியால் சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வருகிறார். அவர் அக்‌ஷய் குமார் மற்றும் ஒரு குரங்கை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. இதனால் மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை “ஸ்பைடர்” படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க […]

Continue reading …

சபாநாயகன் படத்தின் அப்டேட்!

Comments Off on சபாநாயகன் படத்தின் அப்டேட்!

சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் ‘சபா நாயகன்’. மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை உள்ளிட்டவர்கள் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளதை டீசர் மற்றும் டிரெயிலர் கோடிட்டு காட்டியது. இத்திரைப்படம் “சலார்” ரிலீசான நாளில் டிசம்பர் 22ம் தேதி ரிலீசானது. தமிழகத்தில் 180 திரையரங்குகளில் மட்டுமே ரிலீசான இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இப்போது இரண்டாவது வாரத்தில் இப்படத்துக்கு […]

Continue reading …

அரசுப் பள்ளிகளுக்கு கலைஞர் பெயர்!

Comments Off on அரசுப் பள்ளிகளுக்கு கலைஞர் பெயர்!

தமிழக அரசு தமிழகத்திலுள்ள 6,218 அரசுப் பள்ளிகளில் செயல்படும் தமிழ் மன்றங்களுக்கு கலைஞர் பெயர் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பில், “ஓங்கலிடைப் பிறந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் தன்னேரிலாத தமிழின் ஆற்றலையும், ஆகச் சிறந்த இளமைத் திறத்தையும் பச்சிளம் பயிர்களாகிய பள்ளிப் பிள்ளைகள் அறியவும்; நினையவும், தமிழார்வமும், தமிழுணர்வுமுடையோர் தங்கள் தமிழாற்றலை வெளிப்படுத்தவும் வாய்ப்பாகத் தமிழ் மன்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் பேருள்ளப் பெருந்தகைமையால் தமிழ்நாட்டு அரசு உயர்நிலைப் […]

Continue reading …

“இந்தியன் 2” படக்குழு கொண்டாட்டம்!

Comments Off on “இந்தியன் 2” படக்குழு கொண்டாட்டம்!

“இந்தியன் 2” திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். […]

Continue reading …

“அயலான்” சேட்டிலைட் உரிமை பெற்றது சன் டிவி!

Comments Off on “அயலான்” சேட்டிலைட் உரிமை பெற்றது சன் டிவி!

ரவிகுமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீசாக உள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினரோடு சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். […]

Continue reading …

“பார்க்கிங்” படம் ஓடிடியில் ரிலீஸ்!

Comments Off on “பார்க்கிங்” படம் ஓடிடியில் ரிலீஸ்!

கடந்த டிசம்பர் 1ம் தேதி ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் “பார்க்கிங்” படம் ரிலீசானது. இத்திரைப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி தயாரித்திருந்தது. படம் ரிலீசாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. நகர்ப்புறங்களில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் கிடைத்தது. ஒரு கார் பார்க்கிங் பிரச்சனையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக […]

Continue reading …

சென்னை வானிலை மையத்தின் தகவல்: மீண்டும் புயலா?

Comments Off on சென்னை வானிலை மையத்தின் தகவல்: மீண்டும் புயலா?

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு புயல் மிக்ஜாம் புயலாக மாறி சென்னை உள்பட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. தற்போது இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 […]

Continue reading …

திருமலையில் மீண்டும் சிறுத்தை!

Comments Off on திருமலையில் மீண்டும் சிறுத்தை!

சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் காட்டுப் பகுதியில் மீண்டும் இருப்பதால் வனத்துறையினர் திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்தனர். மீண்டும் திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கண்காணிப்பு கேமராவில் இருந்து பதிவான காட்சிகளை வெளியிட்டு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Continue reading …

பாலத்தில் சிக்கிக்கொண்ட விமானம்!

Comments Off on பாலத்தில் சிக்கிக்கொண்ட விமானம்!

லாரியில் வைத்து பழுதடைந்த விமானத்தை எடுத்துச் சென்றபோது பாலத்தில் திடீரென சிக்கிக் கொண்டது. இதையடுத்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழைய ஏர் இந்தியா விமானத்தை மும்பையிலிருந்து அசாம் மாநிலத்திற்கு லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்தின் அடியில் திடீரென விமானம் சிக்கிக் கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டதாகவும் லாரி டிரைவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடிப்படை அறிவு […]

Continue reading …