சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அவ்வகையில் இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு மழை பெய்யும் 30 மாவட்டங்களின் பெயர்கள் பின் வருமாறு: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]
Continue reading …இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமாரின் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் […]
Continue reading …டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவை தேர்தலின் போது பரப்புரை மேற்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. தேர்தல் நிறைவடைந்த பிறகு ஜூன் 2ம் […]
Continue reading …இசை ரசிகர்களுக்கு எப்போதும் எவர் கிரீன் ஹிட் கொடுப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ‘ஹி1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் […]
Continue reading …திமுக எம்.பி. கனிமொழி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த இயக்கத்திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி தமிழக அரசு திட்ட அறிக்கை அளித்துள்ளது என மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணையமைச்சர் தோக்கன் சாஹூ பதில் அளித்துள்ளார். திமுக எம்.பி.கனிமொழி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதி நிலையின் விபரங்கள் குறித்து இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் தோக்கன் சாஹூ, ‘மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த இயக்கத் […]
Continue reading …தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கே துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் இன்று மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூந்தமல்லி பகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்குப் பின் […]
Continue reading …இன்று 2019ம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. தேசிய தேர்வு முகமையிடம், நீதிபதி புகழேந்தி சரமாரி கேள்வி எழுப்பினார். சிசிடிவி கேமிரா பதிவுகள் இல்லை, விண்ணப்பங்கள் இதுவரை வழங்கப்படவில்லை, இந்தாண்டும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. தேசிய தேர்வு முகமை வழங்கிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும் […]
Continue reading …டில்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. கடந்த 1929-ம் ஆண்டு நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு […]
Continue reading …மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலவரம் வெடித்து, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அங்கு படித்து வந்த இந்திய மாணவ, மாணவிகளை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டு வருகிறது. டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை […]
Continue reading …தமிழக அமைச்சர் துரைமுருகன் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாய சங்கங்களும், தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை […]
Continue reading …