
அமைச்சர் மனோ தங்கராஜ் 141 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த பாஜக அரசின் முடிவு வெறும் அரசியல் நடவடிக்கை அல்ல; இது இந்திய ஜனநாயகத்தை கொல்லும் தீவிர முயற்சி என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மனோ தங்கராஜ், “141 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த பாஜக அரசின் முடிவு வெறும் அரசியல் நடவடிக்கை அல்ல; இது இந்திய ஜனநாயகத்தை கொல்லும் தீவிர முயற்சி. இந்த எம்.பி.க்கள் கோடிக்கணக்கான மக்களையும் அவர்களின் குரல்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். அவர்களை இடைநீக்கம் செய்வது என்பது அம்மக்களின் விருப்பத்தையும் […]
Continue reading …
சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. அவர் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 10:30 மணிக்கு அவரது தண்டனை குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் அமைச்சர் பதவி பறிபோகும். அமைச்சர் பொன்முடி தீர்ப்பு குறித்து பாஜக உட்பட ஒரு சில கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது. ஆனால், அதிமுகவை சேர்ந்த யாருமே விமர்சனம் செய்யாமல் அமைதியாக உள்ளனர். இது குறித்து […]
Continue reading …
லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் மாநில எல்லைகளில் உள்ள அனைத்து ஆர்டிஓ சோதனை சாவடிகள் மற்றும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் அளித்த பேட்டியில், “இந்தியா முழுக்க உள்ள சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். 16 மாநிலங்களில் இந்த சோதனை சாவடிகள் எடுக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் உள்ள […]
Continue reading …
எழுத்தாளர் தேவிபாரதி தமிழுக்கான இவ்வாண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார். அவருக்கு உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச்செய்தியில், “நாற்பத்து நான்கு ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் செயல்பட்டு கொண்டிருக்கும் அவருக்கு இந்த கௌரவம் மிகவும் பொருத்தமானது. தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தின் நுணுக்கமான விவரங்களை, கலாப்பூர்வமாகவும் நுட்பமாகவும் சித்திரிக்கும் இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார் தேவிபாரதி. சிறுகதைகளில் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய தேவிபாரதி, நாவல் பக்கம் திரும்பி, அந்த எழுத்திலும் தன் முத்திரையைப் […]
Continue reading …
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், நேற்றைய இந்தியா கூட்டணியில் “ஹிந்தி ஒரு தேசிய மொழி, அதை திமுகவினர் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக நிதிஷ்குமார் பேச்சுக்கு அமைதியாக இருந்தது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. பாஜகவின் முக்கிய பிரமுகருமான நாராயணன் திருப்பதி இது குறித்து கூறும்போது, “ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்கிறார் INDI கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார். ஹிந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்த கூட்டத்தில் […]
Continue reading …
திடீரென சென்னை அண்ணா சாலையில் உள்ள கேசினோ தியேட்டர் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது சென்னையில் உள்ள பல இடங்களில் திடீரென பள்ளம் ஏற்பட்டு பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. சென்னை அண்ணா சாலையில் ஏற்கனவே சில முறை பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மயிலாப்பூரில் பள்ளம் ஏற்பட்டது. சென்னை அண்ணா சாலையிலுள்ள காசினோ திரையரங்கம் அருகே திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது. தற்சமயம் பள்ளத்தை […]
Continue reading …
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மத்திய பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு விட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக விளக்கமளிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமலில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவைச் சேர்ந்த 141 எதிர்க்கட்சி எம்.பிக்கள் அதிரடியாக -சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய வரலாற்றில் 141 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் […]
Continue reading …
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள் நிலையில் முதல் முதலாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இதை அறிவித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தை கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு […]
Continue reading …
சக்திவாய்ந்த நிலநடுக்கம் சீனாவில் ஏற்பட்டதால் இதுவரை 111 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திடீரென சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கன்சு மாகாணத்தில் உள்ள ஜிஷிகான் கவுண்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்திபடி ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக இது பதிவாகியுள்ளது. ஆனால் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. கன்சு மாகாணத்தில் உள்ள செங்குவான்ஜென் பகுதியில் இருந்து 37 கி.மீ […]
Continue reading …
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை, தடாகத்தை சேர்ந்த வேலுச்சாமி பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், “எனது மகள் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் […]
Continue reading …