Home » Entries posted by Shankar U (Page 165)
Entries posted by Shankar

சலார் படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கிய ராஜமௌலி

Comments Off on சலார் படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கிய ராஜமௌலி

இயக்குனர் ராஜமௌலி பிரபாஷ் நடித்துள்ள “சலார்” திரைப்படத்தின் முதல் டிக்கெட்டை இயக்குனர் ராஜமௌலி வாங்கியுள்ளார். நடிகர் பிரபாஸ் “பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் பான் இந்தியா நடிகராக புகழ்பெற்றுள்ளார். இவரது ஒவ்வொரு படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தது. ஆனால், “ராதேஷ்யா,” “ஆதிபுரூஸ்” போன்ற படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் “சலார்.” இப்படத்தின் டீசர், டிரெயிலர் சமீபத்தில் வைரலானது. வரும் 22ம் […]

Continue reading …

ஹேப்பி மோடில் சூரி!

Comments Off on ஹேப்பி மோடில் சூரி!

நடிகர் சூரி நடித்துள்ள 3 திரைப்படங்கள் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். “வெண்ணிலா கபடிக்குழு” மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூரி. அவரது பரோட்டா காமெடிக்காகவே “பரோட்டா சூரி” என பிரபலமாக அறியப்பட்டவர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். சூரிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “விடுதலை” திரைப்படம் தமிழ் சினிமாவில் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தற்போது உள்ளூர் சினிமா தாண்டி உலக சினிமாவிற்கு பயணிக்க தொடங்கியுள்ளார் சூரி. கூழாங்கல் […]

Continue reading …

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து!

Comments Off on மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து!

வெள்ளி நகைக்கடை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகிலுள்ள தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் செயல்பட்டு வந்தது. கடை இன்று வழக்கம் போல் மதிய உணவுக்கு ஊழியர்கள் கடையை அடைத்து சென்ற பொழுது திடீரென்று கடையில் உள்ளிருந்து கரும்புகை வெளியானது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீ அடுத்தடுத்து பரவாதவாறு தீயை […]

Continue reading …

கார்த்திக் சுப்பராஜ் நானியை இயக்குகிறாரா?

Comments Off on கார்த்திக் சுப்பராஜ் நானியை இயக்குகிறாரா?

நடிகர் நானி “தசரா” திரைப்படத்தின் வெற்றியை அடுத்து “ஹாய் நானா” என்ற திரைப்படம் டிசம்பர் 7ம் தேதி ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்துக்கு பிறகு பேன் இந்தியா திரைப்படமான “சூர்யாவின் சனிக்கிழமை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். நடிகர் நானி தமிழ் சினிமாவிலும் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்துக்கு […]

Continue reading …

சாம்சங் கேலக்சி பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Comments Off on சாம்சங் கேலக்சி பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

மத்திய அரசு சாம்சங் கேலக்ஸி செல்போன் பயன்படுத்துபவர்கள் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கிங் செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சாம்சங் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் மொபைல் போன்களில் ஒன்று. இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். சாம்சங் கேலக்ஸி பயன்படுத்துவார்கள் தனிப்பட்ட தகவல்கள் புகைப்படங்கள் போன்றவை ஹேக் செய்யப்படுவதாக சமீபகாலமாக அதிகமாக புகார் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பின் நம்பர் போட்டும் விரல் ரேகை பயன்படுத்தியும் தங்களது செல்போன் லாக் செய்யப்பட்டு இருப்பதாகவும் தங்களது சமூக வலைதளங்களை […]

Continue reading …

‘போட்’ படத்தின் டீசர்!

Comments Off on ‘போட்’ படத்தின் டீசர்!

இயக்குனர் சிம்பு தேவன் விஜய் நடித்த ’புலி’ என்ற திரைப்படத்தை கடந்த 2015ம் ஆண்டு இயக்கியவர். இவர் தற்போது எட்டு ஆண்டுகள் கழித்து “போட்” என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த டீசரில் கடந்த 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாடு சென்னைக்கு குண்டு போடுகிறது. அப்போது உயிர் பிழைக்க பத்து பேர் ஒரு படகில் ஏறி […]

Continue reading …

காயத்ரி ரகுராம் காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா?

Comments Off on காயத்ரி ரகுராம் காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா?

காங்கிரஸ் கட்சியில் பாஜக முன்னாள் உறுப்பினரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடிகை காயத்ரி ரகுராம் முன்னதாக பாஜக கட்சியில் இருந்தபோது அவருக்கும், சில பாஜக முக்கிய புள்ளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு வெளியேறினார். பின்னர் சமீப காலங்களில் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்தார். அவர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் பேசி […]

Continue reading …

சோமாலியா கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டதா?

Comments Off on சோமாலியா கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டதா?

இந்திய கப்பற்படை கப்பல்கள் அரபிக்கடலில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலை மீட்பதற்காக விரைந்துள்ளன. கடற்கொள்ளையர்களின் புகலிடமாக சோமாலியா பகுதியிலிருந்து பிரிந்த பண்ட்லேண்ட் பகுதி திகழ்கிறது. அரபிக்கடல் பகுதிகளில் பயணம் செய்யும் கப்பல்களை கொள்ளையடிப்பது சோமாலியா கடற்கொள்ளையர்களுக்கு வழக்கமாக உள்ளது. இன்று மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்.வி.ருயின் என்ற கப்பல் அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. சோமாலியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த இந்த கப்பலை வழிமறித்த கடற்கொள்ளையர்கள் மாலுமிகளை கைது செய்து கப்பலையும் கடத்தி கொண்டு செல்கின்றனர். அவர்கள் […]

Continue reading …

மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுப்பது எப்போது?

Comments Off on மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுப்பது எப்போது?

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தில், “மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துநர், ஓட்டுநரால் அறிவுறுத்தப்படுகிறது. மேற்பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். பள்ளிகளுக்கு நேரில் சென்று படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து, உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை எடுத்துரைத்து, […]

Continue reading …

மாணவர் சேர்க்கையே இல்லாத 44 பொறியியல் கல்லூரிகள்!

Comments Off on மாணவர் சேர்க்கையே இல்லாத 44 பொறியியல் கல்லூரிகள்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் “தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை, 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கையே நடந்திருக்கிறது” என்று பேட்டியளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு மாணவர் கூட சேராத கல்லூரிகள் மற்றும் குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம். தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எங்களுக்கு திருப்தி […]

Continue reading …