Home » Entries posted by Shankar U (Page 17)
Entries posted by Shankar

நேபாள விமான விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!

Comments Off on நேபாள விமான விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!

இன்று காலை நேபாளத்தில் நடைபெற்ற விமான விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 19 பயணிகளுடன் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சௌரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து வழுக்கி சென்று தரையில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது விமானத்தில் தீப்பிடித்து எரிந்தது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. முதற்கட்டமாக ஐந்து பேர் பலியானதாக தகவல் வெளியானது. தொடர்ந்து […]

Continue reading …

9 கோடியில் அஜீத் என்ன வாங்கினார்?

Comments Off on 9 கோடியில் அஜீத் என்ன வாங்கினார்?

கடந்த சில நாட்களாக அஜீத்தின் “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்தது. நேற்று முன்தினம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அஜீத் படக்குழுவினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது. அஜீத் உட்பட குழுவினர் சென்னை திருப்புகின்றனர் என்றும் இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைவதாகவும் கூறப்பட்டது. அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிந்தவுடன் […]

Continue reading …

ஹெச் வினோத் பட்டியலில் லெஜண்ட் நடிகர்கள்!

Comments Off on ஹெச் வினோத் பட்டியலில் லெஜண்ட் நடிகர்கள்!

“தி கோட்” படத்தில் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் இப்படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக […]

Continue reading …

புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மார்க் ஸூகர்பெர்க்!

Comments Off on புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மார்க் ஸூகர்பெர்க்!

அனைத்து துறைகளிலும் மிக வேகமாக ஏஐ தொழில்நுட்பம் பரவி வருகிறது. மெட்டா ஏஐயில் புதிய அம்சத்தை மார்க் ஸூகர்பெர்க் துவக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெட்டா ஏஐயில் வெளியாகியுள்ள புதிய அம்சத்தை மார்க் ஸூகர்பெர்க் பகிர்ந்துள்ளார். மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஏஇஐ வசதியில் பயனர்கள் தங்களது புகைப்படத்தை நிகழ் நேரத்தில் பல வகையில் தங்களின் கற்பனைக்கு ஏற்ப வகையில் மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு மெட்டா ஏஐ உதவுகிறது. […]

Continue reading …

மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

Comments Off on மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 மீனவர்கள், அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட […]

Continue reading …

பைக்குகளை திருடி உதவியவர் கைது!

Comments Off on பைக்குகளை திருடி உதவியவர் கைது!

நண்பனின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு சிகிச்சையளிக்க பைக்கைகளை திருடி உதவி செய்து வந்த திருடனை போலீசார் கைது செய்தனர். பெங்களூரில் பழ வியாபாரம் செய்து வந்த அசோக், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார். இதனால் அசோக் அடிக்கடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார். திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அசோக்கின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. பெங்களூரு கிரி […]

Continue reading …

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எச்சரிக்கை!

Comments Off on அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எச்சரிக்கை!

அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் முறைகேடாக பணியில் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது குறித்து அவர், “அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மை தான். 52,500 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் 50,500 பேர் பணியாற்றுகின்றனர். மீதமுள்ள 2 ஆயிரம் இடங்களில் 189 ஆசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்துள்ளனர். முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். […]

Continue reading …

மேகதாதுவில் அணை குறித்து மத்திய அரசு விளக்கம்!

Comments Off on மேகதாதுவில் அணை குறித்து மத்திய அரசு விளக்கம்!

மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாவில் அணைக்கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டினால், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அணைக்கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதனிடையே மேகதாதுவில் அனுமதி கேட்டு மத்திய அரசிடம், கர்நாடகா விண்ணப்பித்து […]

Continue reading …

நிர்வாகிகளுக்கு இபிஎஸ்ஸின் அறிவுறுத்தல்!

Comments Off on நிர்வாகிகளுக்கு இபிஎஸ்ஸின் அறிவுறுத்தல்!

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி “திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள், அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்க முடியும்” என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களவை தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் முதல் கட்டமாக 23 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீதமுள்ள தொகுதி நிர்வாகிகளுடன் 2-ம் கட்டமாக, எடப்பாடி பழனிச்சாமி […]

Continue reading …

செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பான வாதம்!

Comments Off on செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பான வாதம்!

நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது பரபரப்பான வாதம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் முதலில் இந்த வழக்கு தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று கூறுகிறது, அது குறித்து முதலில் உங்கள் பதில் என்ன? -என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி கேட்டனர். அதற்கு பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை […]

Continue reading …