Home » Entries posted by Shankar U (Page 184)
Entries posted by Shankar

மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தடை நீக்கம்!

Comments Off on மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தடை நீக்கம்!

புதிய மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொடங்குவதற்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி கூறுகையில், “தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது; ஏற்கனவே தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கக் கூடாது என்று கடந்த 16.08.2023-ஆம் நாள் பிறப்பித்திருந்த […]

Continue reading …

பொதுத்தேர்வு தேர்வுகள் நடக்கும் தேதிகள்!

Comments Off on பொதுத்தேர்வு தேர்வுகள் நடக்கும் தேதிகள்!

இன்று காலை 10, 11, 12ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10ம் வகுப்பு: தமிழ் 26.03.2024 ஆங்கிலம் 28.03.2024 கணிதம் 01.04.2024 அறிவியல் 04.04.2024 சமூக அறிவியல் 08.04.2024 பாடங்கள் தேதி மொழிப் பாடம் மொழிப் பாடம் 01.03.2024 ஆங்கிலம் 05.03.2024 கணினி அறிவியல், உயிரி-அறிவியல், புள்ளியியல், 08.03.2024 வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் 11.03.2024 இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் 15.03.2024 கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் 19.03.2024

Continue reading …

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோவா?

Comments Off on அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோவா?

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில மாதங்களாக புழல் சிறையில் இருக்கிறார். அவருக்கு நேற்று திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதைடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தேவைப்பட்டால் மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். […]

Continue reading …

மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்!

Comments Off on மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்!

தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுனருக்கு உத்தரவிடக்கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. மசோதாக்களை ஆளுனர் திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுனருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு திருப்பி […]

Continue reading …

இருசக்கர வாகன பேரணி: அமைச்சர் உதயநிதி தொடக்கம்!

Comments Off on இருசக்கர வாகன பேரணி: அமைச்சர் உதயநிதி தொடக்கம்!

அமைச்சர் உதயநிதி திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, திமுக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார். திமுக இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேரணியை தொடங்கி வைத்தார். மொத்தம் 13 நாட்கள் 8,647 கிலோ மீட்டர்கள் இருசக்கர வாகன பேரணி நடைபெறுகிறது. […]

Continue reading …

மீண்டும் இணையும் அடங்கமறு கூட்டணி!

Comments Off on மீண்டும் இணையும் அடங்கமறு கூட்டணி!

இயக்குனர் கார்த்திக் தங்கவேல் “அடங்கமறு” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரிடம் பல கதாநாயகர்கள் கதைக் கேட்டனர். ஆனால் யாரும் ஓகே செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த பட்டியலில் சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் எதுவும் நடக்காத நிலையில் கடைசியாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். இப்போது அந்த படமும் அடுத்த கட்டத்துக்கு […]

Continue reading …

கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார்!

Comments Off on கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார்!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா காலமானார், அவருக்கு வயது 102. உடல்நலக்குறைவு காரணமாக சங்கரய்யா கடந்த சில நாட்களாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி சங்கரய்யா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் ஒருவரும் விடுதலை போட்ட வீரருமான போராட்ட வீரருமான சங்கரய்யா பல்வேறு புகழுக்கு […]

Continue reading …

கனமழை குறித்து பாலச்சந்திர மேனன் தகவல்!

Comments Off on கனமழை குறித்து பாலச்சந்திர மேனன் தகவல்!

தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக நவம்பர் 17ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரிசா கடலோர பகுதியை நோக்கி செல்லும். இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் […]

Continue reading …

திருச்செந்தூரில் தரிசன கட்டணம் உயர்வு!

Comments Off on திருச்செந்தூரில் தரிசன கட்டணம் உயர்வு!

கந்தசஷ்டி விழாவிற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தரிசனம் செய்வதற்கு 100 ரூபாய் தரிசன கட்டணம் தற்போது 2 ஆயிரமாக உயர்ந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று முன் தினம் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால் இந்த வாரம் முழுவதுமே பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி வருகை தருகின்றனர். ஆனால் தற்போது கட்டணங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை […]

Continue reading …

மது போதையால் நிகழ்ந்த சோகம்!

Comments Off on மது போதையால் நிகழ்ந்த சோகம்!

மது போதையால் தன்னை பெற்ற தாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரையும் வெட்டி கொன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி கரையூரை சேர்ந்த ஈஸ்வரன் (45), இவருக்கு திருமணம் ஆகி நதியா என்ற மகள் உள்ளார். திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பியவர் மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நேற்று இரவு மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 13 […]

Continue reading …