Home » Entries posted by Shankar U (Page 187)
Entries posted by Shankar

பிரபல தயாரிப்பாளரின் விஜய் பட அப்டேட்!

Comments Off on பிரபல தயாரிப்பாளரின் விஜய் பட அப்டேட்!

விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி ரிலீசான “லியோ” திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே தாய்லாந்துக்கு சென்று ஷுட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். இப்போது படத்தின் முக்கியமான தகவல் […]

Continue reading …

புதுச்சேரியில் தீபாவளி பரிசு அறிவிப்பு!

Comments Off on புதுச்சேரியில் தீபாவளி பரிசு அறிவிப்பு!

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. அரிசி சர்க்கரைக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் 490 ரூபாய் பணம் அனுப்பப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சர்க்கரைக்கு பதில் ரூ.490 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரியிலுள்ள மக்கள் […]

Continue reading …

தென்னக ரயில்வேயின் அறிவிப்பு!

Comments Off on தென்னக ரயில்வேயின் அறிவிப்பு!

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து தீபாவளியை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. சிறப்பு ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு, நவம்பர் 9ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில், நவம்பர் 10, 17, 24 ஆகிய மூன்று நாட்கள் தாம்பரத்தில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு 7, 14, 21 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. […]

Continue reading …

ஓட்ட பந்தய போட்டியில் சிறுவன் பரிதாப பலி!

Comments Off on ஓட்ட பந்தய போட்டியில் சிறுவன் பரிதாப பலி!

14 வயது சிறுவன் ஓட்ட பந்தயத்தில் திடீரென மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சமீப காலமாக இளம் வயதில் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இது மேலும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மாரடைப்புகளுக்கு சரியான உணவு பழக்கம் இல்லாமை, அதீத மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் 5 கி.மீ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. […]

Continue reading …

திகார் சிறைக்கு விசாரணைக்குழு அமைப்பு!

Comments Off on திகார் சிறைக்கு விசாரணைக்குழு அமைப்பு!

டில்லியில் உள்ள திகார் சிறை கைதிகளுக்கு மதுபானம் விநியோகிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள திகார் சிறையில் அறை எண் 7ல் உள்ள கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகவும் அதுமட்டுமின்றி அவர்களுக்கு கூடுதலாக சில வசதிகள் வழங்கப்படுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. சிறைத்துறை இயக்குனர் சஞ்சய் பணிவால் இதுகுறித்து விசாரணை செய்ய ஒரு குழு அமைத்துள்ளதாகவும் விசாரணை […]

Continue reading …

கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!

Comments Off on கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!

நாளை முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊருக்கு தீபாவளி பண்டிகைக்காக செல்பவர்களின் வசதிக்காக மாலை நேரத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீடிக்கப்பட்ட நெரிசல்மிக்க நேரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயிலின் இரண்டு தடங்களிலும் 9 நிமிட இடைவேளைக்கு […]

Continue reading …

அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? செல்லூர் ராஜு கேள்வி?

Comments Off on அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? செல்லூர் ராஜு கேள்வி?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்து கோயில்களுக்கு முன் உள்ள பெரியார் சிலை அனைத்தும் அகற்றப்படும். இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும்” என்று கூறியதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். இதுகுறித்து செல்லூர் ராஜூ, “அண்ணாமலை சொன்னதற்காக அறநிலைத்துறை கலைக்க முடியாது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார். அறநிலைத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும், பெரிய கோயில்களின் வருவாயில் தான் சிறிய கோயில்கள் இயங்கி வருகிறது” என்று கூறினார். அதேபோல் […]

Continue reading …

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் 128 பேர் உயிரிழப்பு

Comments Off on நேபாளத்தில் நிலநடுக்கத்தால் 128 பேர் உயிரிழப்பு

இன்று 3வது முறை நேபாளத்தில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. நமது அண்டை மாநிலமான நேபாளத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. நேபாளத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கத்தின் எதிரொலியாக டில்லி, பாட்னா உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. […]

Continue reading …

திருநங்கைகளுக்காக மிஷ்கின் கோரிக்கை!

Comments Off on திருநங்கைகளுக்காக மிஷ்கின் கோரிக்கை!

இயக்குனர் மிஷ்கின் தனது தம்பி அதித்யா இயக்கிக் கொண்டிருக்கும் “டெவில்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். “டெவில்” படத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள “கலவி” பாடல் என்ற முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது. நேற்று மாலை “டெவில்” திரைப்படத்தின் இசை வெளியீடு நடந்தது. இந்நிகழ்ச்சியில் படத்தின் பாடல்களை மிஷ்கின் முன்னிலையில் இசைக்கலைஞர்கள் இசைத்து பாடினர். நிகழ்ச்சியில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் கோரிக்கை வைத்த மிஷ்கின் […]

Continue reading …

“சலார்” படத்தின் பிரம்மாண்டம்!

Comments Off on “சலார்” படத்தின் பிரம்மாண்டம்!

“கேஜிஎப்” இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் “சலார்” படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தை கேஜிஎப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். டிசம்பர் 22ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீசாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இத்திரைப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்றுக்காக சுமார் 750 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படங்களில் […]

Continue reading …