Home » Entries posted by Shankar U (Page 188)
Entries posted by Shankar

மம்மூட்டி ஜோதிகாவின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on மம்மூட்டி ஜோதிகாவின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார். ஆனால் அதன் பின் “36 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்தவர் பல படங்களில் நடித்தார். ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பின் மலையாள சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். சில மாதங்களுக்கு […]

Continue reading …

பிரபல இயக்குனரின் ஆதங்கம்

Comments Off on பிரபல இயக்குனரின் ஆதங்கம்

இயக்குனரும், நடிகருமான சேரன் நடிப்பில் வெளியான திரைப்படம் “தமிழ் குடிமகன்.” இத்திரைப்படத்தைப் பற்றி கருத்துக் கூறிய ஒருவருக்கு, “காரில் போனால் என்ன பைக்ல போனா என்ன… போகும் இடம்தான் முக்கியம்’’ என்று சேரன் பதிலளித்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தமிழ்குடிமகன்.” சேரன் மற்றும் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் கீழ் சாதியினருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த கதையம்சம் கொண்டதாம். சேரனின் நடிப்பில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நேற்று முதல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதும் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில நாட்கள் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க வாய்ப்பிருப்பதாகவும் அவருடைய முதலமைச்சர் பதவியை உதயநிதி அல்லது வேறு ஒருவருக்கு மாற்ற வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. […]

Continue reading …

மின்கசிவால் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய மாணவிகள்!

Comments Off on மின்கசிவால் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய மாணவிகள்!

மாணவிகள் விடுதியில் மின் கம்பத்தில் பற்றிய தீவிபத்தால் 4 மாணவிகள் மயக்கமடைந்தனர். இதனால் நள்ளிரவில் மாணவிகள் விடுதியை விட்டு வெளியேறினர். வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது. மதுரை மாவட்டம் முழுதும் கனமழை பெய்து வந்தது. மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பெய்த மழையின் போது பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் மாற்றியில் ஏற்பட்ட திடீர் தீ […]

Continue reading …

கால்வாயில் 8 மாத பெண் சிசு சடலம்!

Comments Off on கால்வாயில் 8 மாத பெண் சிசு சடலம்!

நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை தாய் சேய் மகப்பேறு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மகப்பேறு நடைபெறுகிறது. இங்கு குழந்தைகளுடன் வரும் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில் முன்பாக இருந்து சாலையோர கால்வாயில் இன்று காலை பெண் குழந்தை துணியில் சுற்றிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அரசு மருத்துவமனை காவல்நிலைய காவல்துறையினர் நேரில்வந்து கால்வாயில் கிடந்த பெண் […]

Continue reading …

சந்தானத்தின் ‘பில்டப்’ டீசர்!

Comments Off on சந்தானத்தின் ‘பில்டப்’ டீசர்!
சந்தானத்தின் ‘பில்டப்’ டீசர்!

நடிகர் சந்தானம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் “பில்டப்” திரைப்படம் கடந்த எண்பதுகளில் கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் போட்ட சண்டையின் அடிப்படையில் உருவான திரைக்கதையம்சம் கொண்டது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. படத்தின் டீசரில் சந்தானம், கமல் ரசிகராக கலகலப்பாக நடித்திருக்கிறார். கமல் படம் வெளியாகும் தினத்தில் திடீரென அவருடைய தாத்தா இறந்த விட அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை. சுந்தர்ராஜன், மன்சூர் அலிகான், கே.எஸ்.ரவிக்குமார், […]

Continue reading …

போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு! திருச்சியில் பரபரப்பு!

Comments Off on போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு! திருச்சியில் பரபரப்பு!

முத்தையன் திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் நிலைய காவல் நிலைய ஆய்வாளராக உள்ளார். அவருக்கு தொட்டியமருகே உள்ள செவந்திபட்டியிலிருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியிலுள்ள சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. முத்தையன் தலைமையில் காவலர்கள் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு மரங்களுக்கு இடையே ஒருவர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பதை கண்டறிந்து அவரிடம் காவலர்கள் நெருங்கி சென்ற போது அந்த நபர், யாரும் கிட்டே வராதீர்கள், வந்தால் சுட்டு விடுவேன் அல்லது பாம் […]

Continue reading …

பாஜக பிரபலத்தின் கருத்து!

Comments Off on பாஜக பிரபலத்தின் கருத்து!

பாஜக பிரபலம் நாராயணன் திருப்பதி ரஞ்சனா நாச்சியார் செய்தது தவறுதான்.. ஆனால் அது தார்மீக கோபத்தினால், மாணவர்களுக்கு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்ற அக்கறையினால் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ரஞ்சனா நாச்சியார் என்பவர் பேருந்தின் படிக்கட்டுகளிலும், பேருந்தின் கூரையிலும் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்களை பதட்டத்தோடு கடிந்து கொண்டதோடு விதிகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக மாணவர்களை ஏற்றி சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனரை உணர்ச்சி வசப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டியிருந்தாலும் அவை சமூக அக்கறையுடன் […]

Continue reading …

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிரடி உத்தரவு!

Comments Off on காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிரடி உத்தரவு!

கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்கு 2600 கன அடி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று டில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு உடனடியாக 2600 கன அடி நீரை நவம்பர் 23ம் தேதி வரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக […]

Continue reading …

பல இடங்களில் ஒரே நேரத்தில் ஐடி ரெய்டு..!

Comments Off on பல இடங்களில் ஒரே நேரத்தில் ஐடி ரெய்டு..!

வருமானவரித்துறையினர் இன்று அதிகாலை முதல் அமைச்சர் ஏ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை செய்து வருகின்றனர். அமைச்சரின் வீடு மட்டுமின்றி இன்னும் ஒரு சில இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் இல்லத்திலும் சோதனை […]

Continue reading …