Home » Entries posted by Shankar U (Page 196)
Entries posted by Shankar

கவுதமிக்கு பாஜக துணையாக நிற்பதாக அண்ணாமலை தகவல்

Comments Off on கவுதமிக்கு பாஜக துணையாக நிற்பதாக அண்ணாமலை தகவல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகை கவுதமி கொடுத்த புகார் ஆமை வேகத்தில் தான் போய்க் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 80, 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இன்று “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆனபோதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன்’’ என ஓர் […]

Continue reading …

கேரளா இஸ்ரேல் ராணுவ உடைகளை தைக்க மறுப்பு

Comments Off on கேரளா இஸ்ரேல் ராணுவ உடைகளை தைக்க மறுப்பு

கேரளாவைச் சேர்ந்த மரியன் அப்பாரல்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடைகள் தைத்து அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது. தற்போது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. காசா மற்றும் லெபனான் எல்லை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் பொதுமக்களை அகற்றும் பணி முடிவடைந்ததும் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தும் என்றும் […]

Continue reading …

பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Comments Off on பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் கடிததத்தில், “சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட இயலும், சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில் வரவிருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து […]

Continue reading …

துர்கா ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Comments Off on துர்கா ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரது விருப்பம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதுகுறித்து அவர் பேசும் போது, “சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் கருத்துகளை உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டும், எதிர்மறை பிரச்சாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதை விட, நேர்மறை பிரச்சாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம், சாதி, மதங்களின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் கட்சியுடன் நாம் […]

Continue reading …

அஜீத்துடன் இணைந்த பிரபல நடிகர்!

Comments Off on அஜீத்துடன் இணைந்த பிரபல நடிகர்!

அஸர்பைஜானில் அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” திரைப்படத்தின் ஷுட்டிங் நடந்து வருகிறது. ஷூட்டிங்கில் அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்ததும் அங்கிருந்து துபாயில் அடுத்த கட்ட ஷூட்டிங்கும் அதன் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு அங்கு முக்கியமான காட்சிகளையும் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் முக்கிய […]

Continue reading …

விஜய் படம் வசூல் குறித்து தயாரிப்பாளர் கருத்து

Comments Off on விஜய் படம் வசூல் குறித்து தயாரிப்பாளர் கருத்து

தயாரிப்பாளர் லலித்குமார் “லியோ” திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது என்று கூறியுள்ளார். விஜய்யின் “லியோ” திரைப்படம் ரிலீஸுக்கு முன்னர் “ஜெயிலர்” திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும் என்றும், ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்றும் கூறப்பட்டது. மேலும் இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 148 கோடி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் இருப்பதால் இந்த படம் ஆறு நாட்களில் 500 கோடியை தாண்டும் என்றும் மொத்த வசூல் ஆயிரம் கோடியை தொடும் என்றும் கூறப்பட்டது. […]

Continue reading …

காட்டுமிராண்டிதனம் செய்யும் திமுக அண்ணாமலை சாடல்

Comments Off on காட்டுமிராண்டிதனம் செய்யும் திமுக அண்ணாமலை சாடல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாம¬லை தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் திமுக துடிப்பதாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தன் வலைதளத்தில், “குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் […]

Continue reading …

பாஜக கொடிக்கம்பம் குறித்து தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம்

Comments Off on பாஜக கொடிக்கம்பம் குறித்து தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம்
பாஜக கொடிக்கம்பம் குறித்து தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம்

தாம்பரம் காவல் ஆணையரகம் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடு அருகே மாநகராட்சியிடம் முன் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும், கொடிக்கம்பத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது பாஜகவினர் போராட்டம் செய்ததாகவும் கூறினார். மேலும் பாஜகவினர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜே.சி.பி இயந்திரத்தை உடைத்தனர் என்றும், இதனால் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 5 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது. முன்னதாக பாஜகவின் […]

Continue reading …

உதயநிதி ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம்!

Comments Off on உதயநிதி ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம்!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்பதை குறிப்பதற்காக ஒரே ஒரு செங்கலை கையில் வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதேபோல் தற்போது உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு கையெழுத்து விளக்க பிரச்சாரத்தில் கையில் ஒரு முட்டையை வைத்துக்கொண்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கையெழுத்து இயக்க தொடக்க விழாவில் நீட் பிஜி தேர்வில் முட்டை பர்செண்டேஜ் எடுத்தால் […]

Continue reading …

விஜய் ரசிகர்களுக்கு அபராதம்

Comments Off on விஜய் ரசிகர்களுக்கு அபராதம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் “லியோ.” அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், “லியோ” திரைப்படத்தைப் பார்க்க வந்த ரசிகர்களின் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை தியேட்டரில் இருசக்கர வாகனங்களை வெளியே நிறுத்தி சென்ற […]

Continue reading …