Home » Entries posted by Shankar U (Page 197)
Entries posted by Shankar

செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Comments Off on செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மேல்முறையீடு

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இம்மனு மீது விசாரணை நடந்த போது அமலாக்கத்துறை தரப்பில் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. […]

Continue reading …

கால் டாக்சி கட்டணங்கள் உயர்வு

Comments Off on கால் டாக்சி கட்டணங்கள் உயர்வு

ஓலா மற்றும் ஊபர் கால் டாக்சி கட்டணங்கள் தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. தமிழகத்தில் ஓலா மற்றும் ஊபர் கால் டாக்சிகள் பரவலாக இயங்கி வருகின்ற. இந்த ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தொகை போதுமானதாக இல்லை எனவும், நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும், இக்கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஆயிரக்கணக்கான வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சென்னையில் […]

Continue reading …

பல்கலையில் தரமற்ற உணவு!

Comments Off on பல்கலையில் தரமற்ற உணவு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதி மதுரை கீழக்குயில் குடி பகுதியில் இயங்கி வருகிறது. இதில் தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதால் மாணவிகள் உடல் உபாதைகளுக்கு உண்டு ஆளாவதாக குற்றச்சாட்டு. கடந்த ஒரு வாரமாக மாணவருக்கு காலை உணவாக வழங்கப்படும் இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவுகளுக்கு வழங்கப்படும் சாம்பாரில் புழுக்கள் இருப்பதால் மாணவிகள் காலை உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மாணவியர் விடுதி காப்பாளரிடம் மாணவிகள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாணவிகளுக்கு […]

Continue reading …

இஸ்ரேல் போர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Comments Off on இஸ்ரேல் போர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

இஸ்ரேல்- பாலஸ்தீன போர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர் என்பதே கொடூரமானது, அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான் என உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “கடந்த பத்து நாட்களாக காஸா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி […]

Continue reading …

மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை!

Comments Off on மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தினமும் காலை பத்திரிகை படிக்க வேண்டும், தொடர்ந்து ஊடகங்களை பார்த்து வரவேண்டும் என கள ஆய்வில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “தினமும் பத்திரிகை படித்தால் தான் நாட்டில் என்ன நடக்கிறது, உங்கள் மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் காணும் செய்திகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும், அவ்வாறு தீர்வு காணப்பட்ட செய்திகளை ஊடகத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். இதனை […]

Continue reading …

லியோ படத்தின் அனுமதி குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!

Comments Off on லியோ படத்தின் அனுமதி குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!

தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழகத்தில் “லியோ” திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “லியோ.” இத்திரைப்படத்திற்கு மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகளே அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் காலை 9 மணி காட்சிக்குதான் அனுமதி வழங்கப்பட்டது. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் “இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வென்ற மகிழ்ச்சியில் எல்லாரும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டார்கள். விளையாட்டை விளையாட்டாக […]

Continue reading …

தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

Comments Off on தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்கள் அதிகம் நீர்பாசனம் பெறும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்கிழக்கு பருவமழை பொழியும். இதில் அரபிக்கடலோர மாநிலங்கள் அதிக மழையை பெறுகின்றன. தவிரவும் காவிரி நதியில் நீர்வரத்து இந்நாளில் மழை அதிகரிக்கிறது. அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை பொழியும் வ்டகிழக்கு பருவமழை டெல்டா பகுதிகள் நேரடி பாசன வசதி பெற உதவுகிறது. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை அடுத்த […]

Continue reading …

தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!

Comments Off on தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!

வரும் வாரத்தில் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்வதால் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து சரஸ்வதி பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறைகள் வருவதால் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் சென்னையிலிருந்து பல ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை செண்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் அதிகமாக செல்வார்கள் என்பதால் மெட்ரோ ரயில் சேவை […]

Continue reading …

மத்திய இணையமைச்சர் விஜய் படத்திற்கு பாராட்டு!

Comments Off on மத்திய இணையமைச்சர் விஜய் படத்திற்கு பாராட்டு!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வெளியான “லியோ” திரைப்படம் திமுகவின் தடைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள படம் “லியோ” வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தாலும் அடுத்த ஒரு வார காலத்திற்கு “லியோ” படத்தின் பெரும்பான்மை காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. “லியோ” படம் வெளியாகும் கடைசி தருணம் வரை பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு […]

Continue reading …

தாம்பரம்- விழுப்புரம் சிறப்பு புறநகர் ரயில்!

Comments Off on தாம்பரம்- விழுப்புரம் சிறப்பு புறநகர் ரயில்!

நாளை முதல் தாம்பரம் = விழுப்புரம் இடையே சிறப்பு புறநகர் ரயில் கூடுதல் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – விழுப்புரம் – தாம்பரம் சிறப்பு புறநகர் ரயில் இதுவரை கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று சென்றது. இந்த ரயில் கூடுதலான ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். பயணிகளின் கோரிக்கையை பரிசீலனை செய்த தென்னக ரயில்வே தற்போது […]

Continue reading …