Home » Entries posted by Shankar U (Page 198)
Entries posted by Shankar

சென்னையில் 20 இடங்களில் ஐடி ரெய்டு!

Comments Off on சென்னையில் 20 இடங்களில் ஐடி ரெய்டு!

வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை சென்னையில் 20 இடங்களில் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்களிலும் வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் சென்னை சவுகார்பேட்டை முத்தையா முதலில் தெருவில் இருக்கும் தொழில் அதிபர் ஒருவர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அவருக்கு சொந்தமான குடோனில் சோதனை […]

Continue reading …

பட்டாசு வெடி விபத்து உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

Comments Off on பட்டாசு வெடி விபத்து உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

நேற்று சிவகாசியில் இரண்டு இடங்களில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரங்கபாளையம் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து பட்டாசு கடை ஓனர் சுந்தரமூர்த்தி கனகராஜ் ராம்குமார் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் […]

Continue reading …

தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள்!

Comments Off on தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள்!

வரும் 28ம் தேதி தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்த அறிவிப்பை போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்துத்துறை கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தீபாவளிக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க மாதவரம், தாம்பரம், கோயம்பேடு, கேகே நகர் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே தீபாவளி பண்டிகளுக்கான ரயில் முன்பதிவு முடிந்துவிட்டது.ரயிலில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் தீபாவளி […]

Continue reading …

சென்னை ரோகிணியில் ‘லியோ’ திரையிடப்படவில்லை!

Comments Off on சென்னை ரோகிணியில் ‘லியோ’ திரையிடப்படவில்லை!

“லியோ” திரைப்படம் சென்னை ரோகினி திரையரங்கில் திரையிடப்படுவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்று ரோகிணி என்பதும் இங்கு உள்ள 6 ஸ்கிரீன்களிலும் ‘லியோ’ திரைப்படம் திரையிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ‘லியோ’ திரைப்படம் தங்கள் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை என்றும் ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. ‘லியோ’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தின் இடையே வசூலில் ஷேர் பிரிவித்துக் கொள்வதில் ஏற்பட்ட […]

Continue reading …

ராகுல் காந்தி அதானி மீது குற்றச்சாட்டு!

Comments Off on ராகுல் காந்தி அதானி மீது குற்றச்சாட்டு!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்தியாவில் மின் கட்டண உயர்வுக்கு அதானியே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இன்று டில்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்களிடம், “இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலமாக 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இந்தோனேசியாவில் அதானி குழுமம் வாங்கும் நிலக்கரியின் விலை நடுக்கடலில் திடீரென இரண்டு மடங்குகளாக உயர்வது எப்படி? இந்தியாவின் மின் கட்டண உயர்வுக்கு முழுக்க முழுக்க அதானியே […]

Continue reading …

விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

Comments Off on விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் ஆட்சியை பிடித்தது போன்று மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் சம்பந்தமாக பொய்யான செய்தி பரப்புவோர் மீது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நடிகர் விஜய்யை அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து நாளிதழில் வெளியான செய்தியைப் போல் போஸ்டர் வடிவமைத்து ஒட்டிய விவகாரத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்ககள் இயக்கத்தினர் புகாரளித்தனர். கோவை மாவட்டத்தில் […]

Continue reading …

பாஜக குறித்து திண்டுக்கல் சீனிவாசன் கருத்து!

Comments Off on பாஜக குறித்து திண்டுக்கல் சீனிவாசன் கருத்து!

திண்டுக்கல் சீனிவாசன் பாஜக சைத்தான் கூட்டணி என்றும் அக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து நாங்கள் வெளியேறியதில் 1000 மடங்கு மகிழ்ச்சியடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்த நிலையில் அதிமுக தொண்டர்கள் அதனை கொண்டாடினர். பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியே வந்த பின்னர் தான் சிறுபான்மை அமைப்பின் தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து திண்டுக்கல் சீனிவாசன், “பாஜக சைத்தான் கூட்டணி, அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியதால் மிகுந்த மகிழ்ச்சி […]

Continue reading …

“கேப்டன் மில்லர்’’ அப்டேட்…!

Comments Off on “கேப்டன் மில்லர்’’ அப்டேட்…!

“கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடிகர் தனுஷூடன் சிவராஜ்குமார், அதிதி பாலன், பிரியங்கா மோகன் மோகன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை “ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50வது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் […]

Continue reading …

வாரிசு அரசியல் பற்றி வானதி சீனிவாசன் கருத்து

Comments Off on வாரிசு அரசியல் பற்றி வானதி சீனிவாசன் கருத்து

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில் “தந்தை – மகன் – பேரன் – கொள்ளுப்பேரன் என அதிகாரத்தை கை மாற்றுவதுதான் வாரிசு அரசியல். கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக, முதலமைச்சராக துரைமுருகன் போன்றவர்கள் வந்து, அந்த அமைச்சரவையில் ஸ்டாலின் ஓர் அமைச்சராக இருந்தால் அது வாரிசு அரசியல் அல்ல. ஆனால், இப்போது அப்படியா நடக்கிறது. உதயநிதியின் பேரனையும் ஏற்போம் என மூத்த […]

Continue reading …

செந்நிறமாக மாறிய புதுவை கடல்!

Comments Off on செந்நிறமாக மாறிய புதுவை கடல்!

திடீரென புதுச்சேரி கடல் பகுதி செந்நிறமாக மாறியதால் புதுச்சேரி மக்கள் மற்றும் சுற்றுலா வந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதுச்சேரியில் முதலில் பார்க்குமிடம் அழகிய கடற்கரை தான். கடற்கரையின் நீல நிறம் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். ஆனால் இன்று காலை திடீரென புதுச்சேரி கடல் நீரின் நிறம் செந்நிறமாக மாறியது. காலை 10 மணி முதல் கடல் நீர் படிப்படியாக மாறத் தொடங்கியது. சுமார் 200 மீட்டர் வரை செந்நிறமாக மாறியதை அடுத்து கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் […]

Continue reading …