Home » Entries posted by Shankar U (Page 199)
Entries posted by Shankar

சிவகாசியில் ஒரே இடத்தில் 2 வெடிவிபத்து!

Comments Off on சிவகாசியில் ஒரே இடத்தில் 2 வெடிவிபத்து!

இரண்டு இடங்களில் அடுத்தடுத்து சிவகாசி அருகே ஒரே இடத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவகாசி அருகே ரெங்கபாளையத்தில் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரெங்கபாளையம் மற்றும் கிச்சநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு பகுதிகளில் நடந்த முடிவு விபத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகாசி பகுதியில் ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த வெடி […]

Continue reading …

இனி தியேட்டர்களில் டிரெயிலர் ஒளிபரப்பில்லை!

Comments Off on இனி தியேட்டர்களில் டிரெயிலர் ஒளிபரப்பில்லை!

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் “லியோ.” இத்திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. தியேட்டரில் திரைப்படத்தை காண்பதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள டிரெயிரலர் தமிழ், இந்தி, தெலுங்கு கன்னட ஆகிய மொழிகளில் கடந்த 5ம் தேதி மாலை சன் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியாகியானது. இந்த டிரெயிலர் சென்னை ரோகினி தியேட்டரில் சிறப்பு காட்சியாக கடந்த 5ம் தேதி திரையிடப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். “லியோ” டிரெயிலர் 6:30 மணிக்கு ரிலீசானது. […]

Continue reading …

மகளிர் உரிமைத்தொகைக்காக பெண்கள் சாலை மறியல்!

Comments Off on மகளிர் உரிமைத்தொகைக்காக பெண்கள் சாலை மறியல்!

கலைஞர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்ய சென்ற பெண்கள் கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதி தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த நாளன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1.63 […]

Continue reading …

பெங்களூருக்கு சேலம் வழியாக விமானம்!

Comments Off on பெங்களூருக்கு சேலம் வழியாக விமானம்!

வாரத்தில் 5 நாட்கள் சேலம் வழியாக, கொச்சி மற்றும் பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு சேலம் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம்- மற்றும் சென்னை இடையே விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக, சேலத்தில் விமான சேவை நடைபெறவில்லை. மீண்டும் சேலத்திலிருந்து விமானம் இயக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.அலையன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு மற்றும் சேலம் கொச்சி வழித்தடத்தில் விமானம் […]

Continue reading …

ஜெய்ஸ்ரீராம் குறித்து வானதி சீனிவாசன்!

Comments Off on ஜெய்ஸ்ரீராம் குறித்து வானதி சீனிவாசன்!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “போட்டியில் ஜெயிப்பதற்காக மைதானத்தில் இறைவனை வேண்டுவது தப்பில்லை என்றால் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எழுப்புவதும் தப்பில்லை” என தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் என சில ரசிகர்கள் கோஷமிட்டது பெரும் சர்ச்சையானது. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்திற்கு அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “போட்டியில் ஜெயிக்க இறைவனை […]

Continue reading …

குடியரசு தலைவர் தமிழகம் வருகை!

Comments Off on குடியரசு தலைவர் தமிழகம் வருகை!

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகிறார் என தகவல் வெளியாகிறது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

Continue reading …

‘லியோ’ தெலுங்கு பதிப்பை வெளியிட தடை!

Comments Off on ‘லியோ’ தெலுங்கு பதிப்பை வெளியிட தடை!

நடிகர் விஜய்யின் திரைப்படமான “லியோ”விற்கு தலைப்பு பிரச்சனை தொடர்பாக இதன் தெலுங்குப் பதிப்பை அக்டோபர் 20ம் தேதி வரை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்து. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “லியோ.” படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. விஜய் நடித்த “லியோ” திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இம்மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அரசுக்கு […]

Continue reading …

பாஜகவுடன் கூட்டணி இல்லை திட்டவட்டம்!

Comments Off on பாஜகவுடன் கூட்டணி இல்லை திட்டவட்டம்!

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் அடுத்தாண்டு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டுள்ளன. பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இக்கூட்டணியிலிருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக விலகியது. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எழுதிய கடிதத்தில், ‘பாஜகவுக்கு நன்றி மீண்டும் வரவேண்டாம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது சமூகவலைதளங்களில் ஹேஸ்டேக்காக வைரலானது. தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிமுக தலைமை […]

Continue reading …

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Comments Off on இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்ற ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று கரூர் திண்டுக்கல் உள்பட ஒரு சில மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]

Continue reading …

அண்ணாமலை பாதயாத்திரை மீண்டும் தொடக்கம்!

Comments Off on அண்ணாமலை பாதயாத்திரை மீண்டும் தொடக்கம்!

உடல் நலக்குறைவால் அண்ணாமலையின் பாதயாத்திரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் தொடங்குவதாகவும், அண்ணாமலையின் 3-ம் கட்ட யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்’’ பாதயாத்திரை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்த இந்த பாதயாத்திரை வெற்றிகரமாக 2 கட்டம் முடிவடைந்தது. ராமேஸ்வரம் முதல் சென்னை வரை நடைபெறும் இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு பெரும் […]

Continue reading …