
இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ஏவுதளம் அமைக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். தமிழ்நாடு வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் 2 நாள் பயணமாக வந்துள்ளார். ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நேற்று கலந்து கொண்டார். இதையடுத்து அவர் இன்று செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய சோம்நாத், பின் செய்தியாளர்கள் சந்திப்பில், “முதலமைச்சரை […]
Continue reading …
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து மா.சுப்பிரமணியன் பேட்டியில், “குழந்தை விற்பனையில் அரசு மருத்துவர் அனுராதா உடந்தையாக இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக விற்பனையிலும் ஈடுபட்டது குறித்து தெரியவந்துள்ளதால் அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் அனுராதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு என்ற பகுதியில் விசைத்தறி தொழிலாளி தம்பதிக்கு கடந்த […]
Continue reading …
சல்மான் கான் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தயில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவும். சல்மான் கான், கத்ரினா கைப் நடிப்பில், கடந்த 2012ம் ஆண்டு வெளியான படம் “ஏக் தா டைகர்” சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ஜிண்டா ஹாய் என்ற திரைப்படம் வெளியானது. தற்போது சல்மான் கான், இம்ரான் ஹாஸ்மி, கத்ரினா கைப் ஆகியோர் நடிப்பில் “டைகர் 3” திரைப்படம் உருவாகியுள்ளது. […]
Continue reading …
நடிகை மாளவிகா நாயர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. தனித்துவமான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர் நந்தமுரி கல்யாண் ராம். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் “டெவில்” எனப் பெயரிடப்பட்ட இத்திரைப்படம், பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன் வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் […]
Continue reading …
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி கொண்டுள்ளது. பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. இக்கூட்டணியில் இருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக விலகியது. தேர்தலின் போதோ, தேர்தலுக்குப் பின்னரோ அவர் பாஜகவை எதிர்த்து நிற்பார் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்படவில்லை என்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “பாஜக […]
Continue reading …
வகுப்பறையில் மழை நீர் ஒழுகுவதை அடுத்து மாணவர்கள் குடை பிடித்து கொண்டே வகுப்பறையில் அமர்ந்திருந்த காட்சியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் பெரும்பாலை தொடக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறை ஒன்றில் மழை நீர் ஒழுகியது. இதனை அடுத்து சாப்பிடும் தட்டு, குடை ஆகியவற்றை பிடித்தபடியே வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்துள்ளனர். மேலும் இந்த பள்ளியின் மற்ற வகுப்பறைகளும் மிகவும் மோசமாக உள்ளதாகவும் பலமுறை முறையிட்டும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பள்ளியில் படிக்கும் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்தில் சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவிதுள்ளார். முதலமைச்சரின் அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் கொழுமம் கிராமம், கொழுமம் பழனி முதன்மைச் சாலையிலுள்ள சாவடியின் முகப்பு மேற்கூரை இன்று காலை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததில் முரளி ராஜா, தபெமன்மதன் (வயது 35). கௌதம், தபெ சின்னதேவன் (வயது 29) மற்றும் திருமணிகண்டன், தபெ யாழி (வயது 28) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து அவர்களை […]
Continue reading …
பன்முகத்தன்மை கொண்ட நடிகர் மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும்போது, “நடிகர் மாரிமுத்து இயல்பான மனிதர். அவரது இழப்பு நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. என்னுடன் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் பணியாற்றினார். ஒரு இயக்குநருக்கு நடிகருடைய ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து, அதனை உள் வாங்கிக் கொண்டு நடிப்பவர். இயக்குநராக 2 படம் எடுத்து […]
Continue reading …
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ என்று கூறப்படும் கண் நோய் அவ்வப்போது தோன்றும். தற்போது மீண்டும் மெட்ராஸ் ஐ தமிழகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு தொற்று நோய், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் இருந்தால் மிக எளிதில் மற்றவருக்கும் பரவிவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கண் சிவப்பு கண் எரிச்சல் ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் தோன்றும் […]
Continue reading …
மெட்ரோ ரயில் பணிகள் சென்னையில் ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று பணி நடந்து கொண்டிருக்கும் போது ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதமடைந்துள்ளது. சென்னை போரூரில் அஞ்சுகம் நகரிலுள்ள பார்த்தியநாதன் வீட்டின் மீது மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட இயந்திரம் மோதியதில் வீட்டின் மேல் தளத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறியது. இதனால் பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிலிருந்து வெளியேறி உயிர் தப்பித்தனர். ஆனால் வீட்டிலிருந்த பீரோ, கட்டில், ஃபேன் போன்ற உடமைகள் சேதமாகின. […]
Continue reading …