
சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் “பொம்மை நாயகி” திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இப்போது பிரபல நகைச்சுவை நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் “லக்கிமேன்” திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி ரிலீசாகிறது. நேற்று நடைபெற்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யோகி பாபுவிடம் “நீங்கள் ஒழுங்காக ஷூட்டிங் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என்ற கேள்விக்கு, “நான் ஷூட்டிங் வராமல் எங்கே கொளுத்து வேலைக்கா போகப் போகிறேன். நான் கொடுத்த தேதிகளில் கரெக்டா ஷூட்டிங் வரேன். […]
Continue reading …
“விடுதலை 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அதையடுத்து அவர் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து அவர் இயக்கத்தில் “வடசென்னை 2,” கமல்ஹாசனுக்கு ஒரு படம் என பிஸியாகவுள்ளார். இதற்கிடையில் அவர் நடிகர் விஜய்க்கும் கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் அடிக்கடி வெற்றிமாறனை சென்று சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய்- வெற்றிமாறன் படம் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் […]
Continue reading …
கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஹரி. இவர் இயக்கிய “சாமி,” “ஆறு,” “சிங்கம்” உள்ளிட்ட படங்கள் மிகப்பெரியளவில் வெற்றி பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான “யானை” திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் ஹரியும், நடிகர் விஷாலும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இப்படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஹரி. […]
Continue reading …
விஜய் தேவரகொண்டா “லைகர்” படத்துக்குப் பின் அடுத்த படமாக “குஷி” உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் ரிலீசானது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடந்து வருகின்றன. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் இரண்டு கைகள் ஒன்றின் மேல் ஒன்று இருக்க “நிறைய நடக்கின்றன. ஆனால் இது ஸ்பெஷலானது. சீக்கிரம் அறிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிகை […]
Continue reading …
தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 7ம் தேதி படம் ரிலீசாகிறது. நாளை பிரம்மாண்டமாக இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதையொட்டி இன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதில் […]
Continue reading …
கடந்த சில ஆண்டுகளாக ஆளும் மத்திய அரசை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அவ்வப்போது தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார். சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிப்பின் போது கூட ஜெய்பீம் படத்துக்கு விருது கிடைக்காததற்கு கடுமையான விமர்சனங்களை வைத்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “விஜய் அரசியலுக்கு வந்தாலும் நான் கேள்வி கேட்பேன். அவரை வரவேற்பதில் எனக்கு […]
Continue reading …
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நாடகம் என்று பாஜக கட்சியை கடும் விமர்சனம் செய்துள்ளது. வீட்டு சிலிண்டர் ரூபாய் 200 குறைக்கப்படும் என நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் இன்று முதல் சென்னையில் சிலிண்டர் விலை ரூபாய் 918.50 என விற்பனையாகி வருகிறது. சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் […]
Continue reading …
கடந்த 23ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி ஆகஸ்ட் 23ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாட, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இக்கூட்டத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சந்திரயான் – 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதில், பெண் விஞ்ஞானிகள் பெருமளவில் பங்காற்றியதற்கு பாராட்டு தெரிவித்த அமைச்சரவை […]
Continue reading …
திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இங்கிலாந்து நாட்டில் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெறும் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. திடீரென இங்கிலாந்து நாட்டில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக சரியாக சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் பல விமானங்கள் ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டதாகவும் இங்கிலாந்தில் இருந்து கிளம்ப வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 200க்கும் அதிகமான […]
Continue reading …
ரஜினிகாந்த் “ஜெயிலர்” திரைப்படத்தின் ரெக்கார்ட் பிரேக்கிங் வசூலுக்குப் பிறகு த.செ.ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. கடந்த மாதமே தொடங்க வேண்டிய இந்த படம் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை எனத் தெரிகிறது. இப்போது செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் நானி நடிக்க இருந்த ஒரு பாத்திரத்தில் இருந்து வெளியேறி விடவே, அவருக்கு பதில் ஷர்வானந்த் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் […]
Continue reading …