
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மசோதாக்கள் நிறைவேறிய பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இனி எந்த வழக்கும் நீடிக்காது என்றும் இதன் மூலம் 70% வழக்குகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் குஜராத், மராட்டியம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டாமன்-டையு, தாத்ரா-நகர் ஹவேலி ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியபோது, […]
Continue reading …
தோனி என்டர்டைன்மென்ட் என்ற பெயரில் தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய திரைப்பட நிறுவனத்தின் சார்பில் “எல்.ஜி.எம்” திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றியைப் பெறவில்லை, வசூல் அளவில் இத்திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது இரண்டாவது படத்திற்கு தயாராகி உள்ளதாக தெரிகிறது. இதற்காக கதை கேட்கும் பணியில் சாக்சி தோனியை தீவிரமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் உள்பட தெலுங்கு […]
Continue reading …
உணவகத்தில் பிரிட்ஜில், பழைய நண்டு கிரேவி, மட்டன் கிரேவிகள் இருந்த நிலையில், அவற்றை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஓட்டல்களில் சிலவற்றில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பதை பற்றி நேரடியாக ஆய்வில் ஈடுபட்டு, இதுபற்றி தகவல் வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் பிரபல ஓட்டலில் சாம்பாரில் பேப்பர் இருந்தது பற்றிய புகைப்படம் வைரலானது. காரைக்குடியில் பழைய உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைத்து விற்பனை செய்த உணவகம் மூடப்பட்டுள்ளது. காரைக்குடியில், திறந்தவெளி சாக்கடை அருகே […]
Continue reading …
திருப்பதி மலைப்பாதை வழியில் ஏற்கனவே மூன்று சிறுத்தைகள் பிடிபட்டுள்ளது. தற்போது நான்காவது சிறுத்தையும் பிடிபட்டுள்ளதால் நடைபாதையாக செல்லும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சிறுத்தைகள் நடமாட்டம் திருப்பதியில் நடைப்பாதையில் அதிகமாக இருப்பதாக பக்தர்கள் கூறிய நிலையில் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்று கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திருப்பதி மலைப் பாதையில் நடமாடும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகளை அமைத்தனர். இந்த கூண்டில் ஏற்கனவே மூன்று சிறுத்தைகள் சிக்கிய நிலையில் இன்று […]
Continue reading …
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “லியோ.” இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. சென்னையில் இந்த விழா நடைபெற உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் […]
Continue reading …
புதிதாக மயிலாடுதுறையிலிருந்து சேலம் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார். மயிலாடுதுறையிலிருந்து சேலம் இடையே ரயில் போக்குவரத்து அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்த புதிய நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருச்சி, திருச்சியிலிருந்து கரூர், கரூரிலிருந்து -சேலம் ஆகிய மூன்று ரயில்களை ஒன்றிணைத்து தற்போது மயிலாடுதுறையிலிருந்து சேலம் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ரயில் தினசரி இயக்கப்படும். […]
Continue reading …
வெற்றிகரமாக இந்தியாவின் சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியுள்ளது. அடுத்த கட்டமாக நிலவில் மனிதர்களை குடியேற்றும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. சந்திராயன் 3 வெற்றி குறித்து பல அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். -திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் நெகட்டிவ் ஆக சில கருத்துக்களை தெரிவித்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா இது குறித்து கூறும் போது “நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பிரதமர் மோடி […]
Continue reading …
விரைவில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சமீபத்தில் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பை முடித்து வந்துள்ளார். தற்போது அவர் குறும்படம் இயக்குவதாக தகவல் வெளியானது. எனவே, அவர் விரையில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகுவார் அப்படத்தை விஜய் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் விஜய் மாதிரி அவர் மகன் சஞ்சயும் இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். ஆனால், நடிகராக அல்ல இயக்குனராக. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே […]
Continue reading …
திமுக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெரும் விபத்து ஏற்பட்டால்தான் தமிழக அரசுக்கு முழிப்பு வருமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: பண்ருட்டி சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையல் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இவ்விபத்தில் சத்துணவு பெண் அமைப்பாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுதும் சிதிலமடைந்து இருக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான பள்ளிக் கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டப் போவதாக அறிவித்த திமுக, அதன் பிறகு அது […]
Continue reading …
பாஜகவின் கேபி ராமலிங்கம் தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும் என பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மற்றும் அதிமுகவின் தலைவர்கள் ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் என கூறி வருகின்றனர். சேலம் அருகே ஓமலூரில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும் […]
Continue reading …