Home » Entries posted by Shankar U (Page 215)
Entries posted by Shankar

குழந்தைகளை கொன்ற நர்ஸ்

Comments Off on குழந்தைகளை கொன்ற நர்ஸ்

இங்கிலாந்தில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் பச்சிளங்குழதைகள் நர்ஸ் மூலமாக கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் வடமேற்குப் பகுதியில் கவுண்ட்ஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பிரபலமான இம்மருத்துவமனையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜுன் வரையிலான காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்திற்கும் அதிகமாக உயிரிழந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகள் இறப்பில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது நடந்து வந்தன. இதுதொடர்பாக […]

Continue reading …

மதுரை நீட் எதிர்ப்பு போராட்டம் தேதி மாற்றம்!

Comments Off on மதுரை நீட் எதிர்ப்பு போராட்டம் தேதி மாற்றம்!

வரும் 20ம் தேதி திமுக இளைஞரணி தரப்பிலிருந்து தமிழகம் முழுதும் நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. மதுரையில் மட்டும் இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு காரணமாக சமீபத்தில் மாணவன் மற்றும் அவருடைய தந்தை இறந்ததையடுத்து நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப் போவதாக திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி அறிவித்தது. அதே 20ம் தேதி அதிமுக மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதால் அதிமுக இதற்கு கண்டனம் தெரிவித்தது. பிரதான எதிர்க்கட்சி மாநாடு நடத்துவதால் ஜனநாயகத்தை கருத்தில் […]

Continue reading …

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி!

Comments Off on கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி!

கடந்த 2003ம் ஆண்டு வெளியான “ஜெயம்” திரைப்படத்தின் வெற்றியால் ‘ஜெயம்’ ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார் ஜெயம் ரவி. அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி “பேராண்மை,” “தனி ஒருவன்” பாராட்டத்தக்க படங்களை கொடுத்துள்ளார். அவர் சமீபத்தில் “பொன்னியின் செல்வன் 2” திரைப்படத்தின் மூலம் மிகப்பிரபலமானார். தற்போது அவர் “சைரன்” மற்றும் “இறைவன்,” எம் ராஜேஷ் இயக்கும் படம் மற்றும் வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய […]

Continue reading …

இடுக்கியில் முழு அடைப்பு போராட்டம்

Comments Off on இடுக்கியில் முழு அடைப்பு போராட்டம்

கேரள மாநிலம் செல்லும் தமிழக வாகனங்கள் தேனியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவிலுள்ள இடுக்கியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதன் காரணமாக தமிழகத்திலிருந்து செல்லும் வாகனங்கள் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக வாகனங்கள் தேனி எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இடுக்கி மாவட்டத்திற்கு ஏற்றப்படும் தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் சபரிமலை கோவிலுக்கு செல்லும் ஐயப்பன் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன […]

Continue reading …

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டு சிறை!

Comments Off on சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டு சிறை!

காசர்கோடு நீதிமன்றம் 9 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் உறவுக்கார சிறுமியை 9 ஆண்டுகளாக ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. குற்றவாளிக்கு தொகுத்து 97 வருட சிறை தண்டனையும் 8 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 8.5 ஆண்டுகள் சிறை தண்டனை […]

Continue reading …

காசு காலியானதால் தற்கொலை செய்த குடும்பம்!

Comments Off on காசு காலியானதால் தற்கொலை செய்த குடும்பம்!

வாழ்நாள் முழுவதும் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்காமல் கையில் இருந்த காசு காலியானதும் ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டுள்ளது. மதுரை சேர்ந்த பாண்டியன் சுகாதாரத்துறை அதிகாரியாக வேலை செய்தார். இவருக்கு வாசுகி என்ற மனைவியும் உமாதேவி, கோதண்டபாணி ஆகிய குழந்தைகளும் இருந்தனர். பாண்டியன் தனது மனைவி வாசுகியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். கணவர் பிரிந்தவுடன் வாசுகி தனது மகள் மகனுடன் தனியே வசித்து வந்தார். கணவன் பிரிவால் கடும் மன உளைச்சலில் இருந்த […]

Continue reading …

அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

Comments Off on அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர் செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்து சமீபத்தில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் போக்குவரத்து துறையில் பணி அமத்துவதற்காக லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கூட்டுச்சதி நடந்துள்ளது என்றும் நாமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. விசாரணையின் […]

Continue reading …

‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் இதுவா?

Comments Off on ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் இதுவா?

இணையதளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளதோடு இந்த படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. “ஜெய்பீம்” ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் “தலைவர் 170” என்று கூறப்படும் இத்திரைப்படத்தின் டைட்டில் “வேட்டையன்” என்று தலைப்பபு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி படத்தின் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் மற்றும் […]

Continue reading …

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா?

Comments Off on தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா?

கே.எஸ். அழகிரியே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடர வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்கவுள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு தனித்தனியே கோஷ்டியும் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரியை டில்லி தலைமை நியமித்தது. தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பதவியேற்று ஐந்து ஆண்டுள் ஆகியுள்ளது. அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், புதிய காங்கிரஸ் […]

Continue reading …

மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதா பாஜக?

Comments Off on மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதா பாஜக?

நேற்று மாலையில் ராமநாதபுரம் மாவட்டம் அருகேயுள்ள தேவிபட்டனம் கிழக்கு கடற்கரை சாலையில் முகவர்கள் பயிற்சிக் கூட்டத்திற்கு 19 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திமுக முகவர்கள் கலந்துகொண்டனர். இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நல மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, “9 ஆண்டுகால பாஜக அரசு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதா? மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மீனவர்கள் […]

Continue reading …