Home » Entries posted by Shankar U (Page 25)
Entries posted by Shankar

பிரேமலதாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

Comments Off on பிரேமலதாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதாவிற்கு அரசு நிர்வாகமும், அரசியலும் தெரியவில்லை என்றும் அரசு திட்டங்களை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 2 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ.19 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை […]

Continue reading …

ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன்!

Comments Off on ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன்!

டில்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி டில்லியில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் […]

Continue reading …

13 மீனவர்கள் கைது குறித்து டிடிவி தினகரன்!

Comments Off on 13 மீனவர்கள் கைது குறித்து டிடிவி தினகரன்!

இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுங்கள் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 13 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. கடந்த இரு வாரங்களில் மட்டும் […]

Continue reading …

தனியார் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு பாராட்டு விழா!

Comments Off on தனியார் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு பாராட்டு விழா!

தமிழ்நாடு அரசு சார்பில் தனியார் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில், “2023&-2024ம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 2199 தனியார் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளிகளும், 12ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 1750 தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், தனியார் பள்ளிகளை […]

Continue reading …

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது

Comments Off on கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது

கள்ளச்சாராய மரண விவகார வழக்கில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், முருகேசன் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் சின்னதுரையிடம் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட ட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். 11 பேரையும் […]

Continue reading …

இடைவேளைக்கு முன்பாகதான் கமல் வருவாரா?

Comments Off on இடைவேளைக்கு முன்பாகதான் கமல் வருவாரா?

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கமல்ஹாசனை விட அதிக நேரம் வரும் விதமாக சித்தார்த்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகத்தின் இரண்டாம் பாதியில் தான் இந்தியன் தாத்தா வருவாராம். அதனால் படக்குழுவுடன் இணைந்து சித்தார்த்தும் பல […]

Continue reading …

மீண்டும் 13 தமிழக மீனவர்கள் கைது

Comments Off on மீண்டும் 13 தமிழக மீனவர்கள் கைது

அடிக்கடி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். தற்போது மீண்டும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தும் கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே உள்ளது. தமிழக முதலமைச்சர் பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குகடிதம் […]

Continue reading …

பிரபல தயாரிப்பாளர் மீது பாலாஜி முருகதாஸ் புகார்

Comments Off on பிரபல தயாரிப்பாளர் மீது பாலாஜி முருகதாஸ் புகார்

பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தான் நடித்த படத்திற்கு தயாரிப்பாளர் ஒரு ரூபாய் கூட சம்பளம் தரவில்லை என்று தனது சமூக வலைதளத்தில் புகாராக பதிவிட்டுள்ளார். ஜேஎஸ்கே சதீஷ் தயாரித்து நடித்த திரைப்படம் ஃபயர். இப்படத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடித்திருந்தார். ரச்சிதா மகாலட்சுமி மற்றும் சாக்சி அகர்வால் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருந்தனர். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து சமீபத்தில் டீசர் வீடியோ வெளியாகி வைரலானது. இத்திரைப்படம் குறித்து […]

Continue reading …

தென்னிந்திய நடிகர்கள் குறித்து சித்தார்த் பெருமிதம்!

Comments Off on தென்னிந்திய நடிகர்கள் குறித்து சித்தார்த் பெருமிதம்!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கமல்ஹாசனை விட அதிக நேரம் வரும் விதமாக சித்தார்த்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாகத்தின் இரண்டாம் பாதியில் தான் இந்தியன் தாத்தா வருவாராம். அதனால் படக்குழுவுடன் இணைந்து சித்தார்த்தும் பல […]

Continue reading …

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி விசாரணை!

Comments Off on எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி விசாரணை!

சிபிசிஐடி போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நெருங்கிய உறவினர் வீட்டில் விசாரணை செய்து வருகின்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் நூறு கோடி ரூபாய் சொத்து மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய முன் ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அவரது தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நெருக்கமான சிலருடைய வீட்டில் சமீபத்தில் சோதனை நடந்தது. […]

Continue reading …