Home » Entries posted by Shankar U (Page 30)
Entries posted by Shankar

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் 11 பேருக்கு சிபிசிஐடி காவல்!

Comments Off on கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் 11 பேருக்கு சிபிசிஐடி காவல்!

நீதிமன்றம் கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. ஆனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி […]

Continue reading …

ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி!

Comments Off on ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி!

அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ககன்தீப் சிங் பேடி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரியா சாஹு வனத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை செயலாளராக இருந்த மணிவாசன் நீர் வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நீர்வளத்துறை […]

Continue reading …

’கல்கி 2898 ஏடி’ பட வசூல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!

Comments Off on ’கல்கி 2898 ஏடி’ பட வசூல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!

கடந்த வியாழன் பிரபாஸ் நடிப்பில் “கல்கி 2898 ஏடி” திரைப்படம் வெளியானது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் படம் வசூல் செய்த தொகையை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரது நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’ இந்த படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. முதல் […]

Continue reading …

செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து 3 மனுக்கள் தாக்கல்?

Comments Off on செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து 3 மனுக்கள் தாக்கல்?

செந்தில் பாலாஜி தரப்பில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்கிறார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து ஒரு வருடத்திற்கு மேல் […]

Continue reading …

மக்களவையையில் அனல் பறக்கும் விவாதம்!

Comments Off on மக்களவையையில் அனல் பறக்கும் விவாதம்!

மக்களவையில் ராகுல் காந்தி இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் ராகுல் காந்தி பேசியபோது, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குறுக்கிட்டு பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துடன் இன்று மக்களவை கூடியது. விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜக 24 மணி நேரமும் வெறுப்பை காட்டி வருகிறது என்று ஆவேசமாக கூறினார். மேலும் ராகுல் […]

Continue reading …

பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Comments Off on பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

பவானி ஆற்றங்கரை தொடர் கன மழை காரணமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதை அடுத்து பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் இன்னும் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் […]

Continue reading …

ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

Comments Off on ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

கஞ்சாவை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் பிரிவில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தனிப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் பெருங்காமநல்லூர் பிரிவில் 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து இந்த பதுக்கல் தொடர்பாக அயோத்திபட்டியைச் சேர்ந்த ராஜாக்கொடி, மதுரையைச் சேர்ந்த அமுதா என்ற இருவரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்து, 21 கிலோ கஞ்சா மற்றும் 5120 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் […]

Continue reading …

அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 நிபந்தனைகள்!

Comments Off on அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 நிபந்தனைகள்!

சென்னை மாநகர காவல்துறை இன்று நடைபெற உள்ள அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 நிபந்தனைகளை விதித்துள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டுவரக்கூடாது, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆகிய நிபந்தனைகள் முக்கியமானது. மேலும் காவல் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும், அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்கள், அரசு அதிகாரிகளை தாக்கி பேசவோ, முழக்கம் எழுப்பவோ கூடாது […]

Continue reading …

கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு!

Comments Off on கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு!

45 ஊராட்சிகள் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ளன. இப்பகுதியில் 19 கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகிறது. ஒன்றிய பெருந்தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜேஸ்வரியும், துனை தலைவராக பா.ஜ.கவை சேர்ந்த ராஜா என்பவரும் திமுகவை சேர்ந்த 8 கவுன்சிலர்களும் பதவி வகித்து வருகின்றனர். இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக உமாராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒன்றியங்களுக்கு அரசிடம் இருந்து நலத்திட்டங்களுக்காக முறையாக நிதி பெற்று தரவில்லை. இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. […]

Continue reading …

விக்னேஷ் சிவனின் படத்தின் தலைப்பு மாற்றமா?

Comments Off on விக்னேஷ் சிவனின் படத்தின் தலைப்பு மாற்றமா?

“எல் ஐ சி” என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “லவ் டுடே” புகழ் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். “லியோ” படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை ஈஷா மையத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கினார் விக்னேஷ் சிவன். படத்தில் கதாநாயகியாக கிரீத்தி ஷெட்டி நடிக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். முதலில் பிரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய […]

Continue reading …