முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105 ஊக்கத் தொகை கூடுதலாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழக அரசு இதுகுறித்த அறிக்கையில், “தமிழகத்தில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-25ம் ஆண்டு காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு 105 ரூபாயும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 130 ரூபாயும் கூடுதல் […]
Continue reading …உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆதித்ய ராஜ் சைனி உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரும், ஓபிசி ஆணையத்தின் நியமன உறுப்பினராகவும் இருந்தவர். இன்று அவரை 13 வயது சிறுமியை குழுவாக பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற வழக்கில் கூட்டாளியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். ஹரித்துவாரில் வசிக்கும் 13 வயது சிறுமி காணாமல் போனதாக அந்த […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒருங்கிணைத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும். நான் இதுகுறித்து ஏற்கெனவே 20.10.2023 அன்று கடிதம் எழுதியிருந்ததேன். அதில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒருங்கிணைத்து […]
Continue reading …விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வரும் 10-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13-ம் தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா உள்பட […]
Continue reading …நடிகர் விஜய் தனக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, […]
Continue reading …சிப்பி அரிக்கும் தொழிலாளர்களும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களும் இணைந்து திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடலில் புனித நீராடும்போது பெண் ஒருவர் தவறவிட்ட 5 சவரன் தங்க செயினை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி ஜோதி, அவரது தங்கை வாசுகி ஆகியோர் குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் அனைவரும் கடலில் புனித நீராடிய போது வாசுகி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி கடலில் விழுந்து கடற்கரை மணலில் […]
Continue reading …“லெஜன்ட்” என்ற படம் கடந்த 2022ம் ஆண்டு பிரபல தொழில் அதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் ஜேடி-ஜெர்ரி இயக்கினார். இந்த படம் ஓரளவு சுமாரான வரவேற்பு பெற்றது. அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்தது. லெஜண்ட் சரவணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது இரண்டாவது படத்தின் போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்பதிவில் அவர் இயக்குனர் துரை செந்தில்குமார் […]
Continue reading …நாளை கள்ளக்குறிச்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக குழுவுடன் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கள்ளச்சாராய மரணம் அதிகரித்துள்ளது. அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு […]
Continue reading …டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 21ம் தேதி டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. இவ்வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. […]
Continue reading …மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பலர் உயிரிழந்தும் காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ஜே.பி.நட்டா தமிழகத்தின் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நீக்கவும், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கவும் தமிழக முதலமைச்சருக்கு காங்கிரஸ் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக கூட்டணி கட்சிகள் மௌனம் காத்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் […]
Continue reading …