Home » Entries posted by Shankar U (Page 33)
Entries posted by Shankar

சிறுமிக்கு வன்கொடுமை செய்த குடும்ப உறுப்பினர்களின் வெறிசெயல்!

Comments Off on சிறுமிக்கு வன்கொடுமை செய்த குடும்ப உறுப்பினர்களின் வெறிசெயல்!

தந்தை மற்றும் உறவினர்களே 13 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, குட் டச், பேட் டச் பற்றி பாடம் நடத்தியபோது, அப்பள்ளியில் பயின்று வரும் 13 வயது சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றி பயிற்சி நடத்துபவரிடம் தெரிவித்தார். அதில் அச்சிறுமி தனது தந்தை, தூரத்து உறவினர் முறையிலான சகோதரன் மற்றும் மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக […]

Continue reading …

பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு!

Comments Off on பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு!

நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கிடையாது என்று அதிரடியாக அறிவித்துள்ளது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. அதேபோல் மக்களவை தேர்தலிலும் அந்த கட்சி படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெல்ல, ஆளும் கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளம் ஒரு தொகுதியை கூட வெல்ல […]

Continue reading …

பள்ளி மாணவர்களுக்குள் பிரச்னை!

Comments Off on பள்ளி மாணவர்களுக்குள் பிரச்னை!

பள்ளி மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, கள்ளிக்குடி பகுதியில் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில், கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மதியம் உணவு இடைவேளையின் போது 12-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே தண்ணீர் குழாயில் டிபன் பாக்ஸ் கழுவும் போது , மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் […]

Continue reading …

சானியா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரது தந்தை!

Comments Off on சானியா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரது தந்தை!

இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடினர். இதற்கிடையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சானியா மிர்சா சோயிப் மாலிக்கை பிரிந்தார். மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனேயே சானியா மிர்சா இந்திய கிரிக்கெட் வீரர் […]

Continue reading …

நீட் தேர்வில் முறைகேடு செய்தால் ரூ1 கோடி அபராதம்!

Comments Off on நீட் தேர்வில் முறைகேடு செய்தால் ரூ1 கோடி அபராதம்!

தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு உட்பட தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அது மட்டுமின்றி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த நீட் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. […]

Continue reading …

விடாமுயற்சி ஷூட்டிங்கில் அதிரடி ஆக்‌ஷன்!

Comments Off on விடாமுயற்சி ஷூட்டிங்கில் அதிரடி ஆக்‌ஷன்!

மகிழ் திருமேனி இயக்கும் “விடாமுயற்சி” மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜீத் நடித்து வருகிறார். “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அஜீத் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க தொடங்கினார். இப்போது “விடாமுயற்சி” ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20ம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு செல்ல உள்ளனர். […]

Continue reading …

கள்ளச்சாராய பலி 55ஆக உயர்வு!

Comments Off on கள்ளச்சாராய பலி 55ஆக உயர்வு!

கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாளுக்கு நாள் சிகிச்சை பெற்று வருபவர்கள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று வரை கள்ளச்சாராயம் குடித்தவர்களின் மரணம் 52 என்று இருந்தது. இன்று மேலும் 3 பேர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், கல்யாணசுந்தரம் உள்பட 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி […]

Continue reading …

“இந்தியன் 2” டிரெயிலர் ரிலீஸ் எப்போது?

Comments Off on “இந்தியன் 2” டிரெயிலர் ரிலீஸ் எப்போது?

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. பாடல்களும் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்த படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் டிரெயிலர் […]

Continue reading …

விஷச்சாராயம் அருந்தியவர்களின் நிலை குறித்து கலெக்டர் தகவல்!

Comments Off on விஷச்சாராயம் அருந்தியவர்களின் நிலை குறித்து கலெக்டர் தகவல்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 140 பேர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள், 56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம். மேலும் அரசின் ஆணைப்படி பாதிக்கப்பட்டு இறந்த அனைவருக்கும் இழப்பீடு […]

Continue reading …

மருத்துவமனையிலிருந்து தப்பியோடியவர் உயிரிழப்பு!

Comments Off on மருத்துவமனையிலிருந்து தப்பியோடியவர் உயிரிழப்பு!

கள்ளச்சாராயம் அருந்தியதால் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தப்பியோடினார். அவர் தற்போது உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷசமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி நேற்று தப்பியோடினார். அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இருந்தனர். இன்று அவர் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று […]

Continue reading …