Home » Entries posted by Shankar U (Page 36)
Entries posted by Shankar

ரஹ்மான் பிரபுதேவா இணையும் படத்தின் பெயர் இதுவா?

Comments Off on ரஹ்மான் பிரபுதேவா இணையும் படத்தின் பெயர் இதுவா?

பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று என்றே கூறலாம். இவர்கள் கூட்டணியில் உருவான “காதலன்,” “லவ் பேர்ட்ஸ்,” “மிஸ்டர் ரோமியோ,” “மின்சாரக் கனவு” உட்பட பல படங்களின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகி இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. “ஜெண்டில்மேன்” படத்தில் “சிக்கு புக்கு ரயிலே” பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடியிருந்தார். 1999ம் ஆண்டு இருவரும் கடைசியாக “மின்சாரக் கனவு” படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பின் இக்கூட்டணி இப்போது […]

Continue reading …

நன்றி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எமோஷன்!

Comments Off on நன்றி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எமோஷன்!

கடந்த வாரம் விஜய் சேதுபதியின் 50வது படமான “மகாராஜா” வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் அவருக்கு ஒரு ஹிட்டாக இப்படம் அமைந்துள்ளது. படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பா?

Comments Off on சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பா?

ஏ ஆர் முருகதாஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படமும் இயக்காமல் இருந்தார். சிவகார்த்திகேயனை வைத்து தற்போது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிஜு மேனன் மற்றும் வித்யுத் ஜமால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதையடுத்து இப்போது நடிகர் விக்ராந்த் இந்த படத்தில் இணைந்துள்ளதாக […]

Continue reading …

கள்ளக்குறிச்சி மரணம் சிபிஐ விசாரிக்க அதிமுக வழக்கு!

Comments Off on கள்ளக்குறிச்சி மரணம் சிபிஐ விசாரிக்க அதிமுக வழக்கு!

அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்றும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில் நாளை நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனை என்பது […]

Continue reading …

தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!

Comments Off on தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 37 பேர் பலியான சம்பவத்திற்கு தமிழக அரசே காரணம், தமிழகத்தில் அதிகமாக விதவைகளை உருவாக்கும் மாடலாக இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம், “இத்தனை பேர் பாதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இன்னும் எந்தெந்த மாவட்டங்களில் இவையெல்லாம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. திராவிட மாடல் ஆட்சி என்பது […]

Continue reading …

நீட் தேர்வு முறைகேடு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Comments Off on நீட் தேர்வு முறைகேடு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உச்சநீதிமன்றம் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை ஜூலை 8-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த முறைகேடு குறித்து புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு ஜூன் 23ம் தேதி மறு […]

Continue reading …

துப்பாக்கி முனையில் பெண் காவலர் வன்கொடுமை!

Comments Off on துப்பாக்கி முனையில் பெண் காவலர் வன்கொடுமை!

பெண் காவலரை துப்பாக்கி முனையில் எஸ்ஐ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காளேஸ்வரம் காவல் நிலையத்தில் பவானிசென் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணிபுரிந்தார். அவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் தலைமை காவலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துப்பாக்கி முனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுவதோடு இதை வெளியில் கூறினால் கடுமையாக விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளாராம். பவானிசென் குற்றம் உறுதியானதால் […]

Continue reading …

முதலமைச்சர் ஏன் வரவில்லை.? பிரேமலதா சரமாரி கேள்வி!

Comments Off on முதலமைச்சர் ஏன் வரவில்லை.? பிரேமலதா சரமாரி கேள்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க ஏன் இன்னும் இங்கு வரவில்லை? வெறும் தேர்தல் அரசியல் மட்டுமே இங்கு நடைபெறுகிறது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். பிரேமலதா கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனையில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களிடம், “கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்று முதலமைச்சர் […]

Continue reading …

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

Comments Off on மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கடிதம் எழுதி உள்ளார். இலங்கை கடற்படையால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை கடற்படையினர் […]

Continue reading …

அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

Comments Off on அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

அமைச்சர் அன்பில் மகேஷ் “எனது அம்மா கண்டிப்புடன் வளர்த்ததால், தான் இன்றும் நான் வீட்டிற்கு நுழைந்தவுடன் கை கால்களை கழுவி விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பேன். அதைப்போல, சுகாதாரம் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொடுக்க வேண்டும்”என காணொளி வாயிலாக மாணவர்களிடம் பேசினார். இன்று மதுரை பாரபத்தி கிராமத்தில் ரோட்டரி பவுண்டேஷன் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 அரசு பள்ளிகளில் அறம் சுகாதார மையம் திறக்கும் விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]

Continue reading …