Home » Entries posted by Shankar U (Page 37)
Entries posted by Shankar

சூடு பிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!

Comments Off on சூடு பிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!

திமுக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவா, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் பேரணியாகச் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வரும் ஜூலை 10-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் 14-ம் தேதி முதல் தொடங்கியது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. பாஜக கூட்டணியில் பாமக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் […]

Continue reading …

சிதம்பரத்தில் தீட்சிதரிடம் போலீசார் விசாரணை!

Comments Off on சிதம்பரத்தில் தீட்சிதரிடம் போலீசார் விசாரணை!

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் சங்கரிடம் போலி சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் சிதம்பரம் அருகே கோவிலம் பூண்டி ஆமா கிராமத்தில் ஒரே இடத்தில் மொத்தாக கிடந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சான்றிதழ்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது, அவை அனைத்தும் போலி சான்றிதழ்கள் என தெரியவந்தது. இதில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் முக்கிய புள்ளியாக […]

Continue reading …

நீட் தேர்வு முறைகேடு! காங்கிரஸ் போராட்டம்!

Comments Off on நீட் தேர்வு முறைகேடு! காங்கிரஸ் போராட்டம்!

காங்கிரஸ் கட்சி நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜூன் 21-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஆண்டு தோறும் இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்வு, இந்த ஆண்டு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் […]

Continue reading …

“கல்கி 2898 ஏடி” ரன்னிங் டைம் எவ்வளவு?

Comments Off on “கல்கி 2898 ஏடி” ரன்னிங் டைம் எவ்வளவு?

நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கல்கி 2898 ஏடி.” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. வரும் 27ம் தேதி படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் […]

Continue reading …

தமிழிசை பாஜகவினரே தன்னை விமர்சிப்பதாக வேதனை!

Comments Off on தமிழிசை பாஜகவினரே தன்னை விமர்சிப்பதாக வேதனை!

தமிழிசை சௌந்தராஜன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் பாஜகவை சேர்ந்தவர்களே தன்னை விமர்சிப்பதாக புகார் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டனர். அண்ணாமலையின் ஆதரவாளர்கள் செயல்பாட்டுக்கு தமிழிசை பகிரங்கமாக கண்டனம் தெரிவித்திருந்தார். அடுத்த சில நாட்களில் ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை அமித்ஷா கண்டித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழிசைக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட […]

Continue reading …

துணை முதலமைச்சராகிறார் பவன் கல்யாண்!

Comments Off on துணை முதலமைச்சராகிறார் பவன் கல்யாண்!

ஆந்திர மாநில துணை முதலமைச்சராக ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், கோப்புகளில் கையெழுத்திட்டு பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி படுதோல்வி சந்தித்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், […]

Continue reading …

அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Comments Off on அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இரண்டு ஆண்டுகளாக அஜீத் நடித்த “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா உறுதி செய்துள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜீத் நடிப்பில், அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் “விடாமுயற்சி.” திரிஷா மற்றும் ரெஜினா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்தில் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் இன்னும் சில நாட்களில் […]

Continue reading …

ஜெகன்மோகனின் பங்களா குறித்து நடிகை ரோஜாவின் விளக்கம்!

Comments Off on ஜெகன்மோகனின் பங்களா குறித்து நடிகை ரோஜாவின் விளக்கம்!

சமீபத்தில் மிகப்பெரிய ஹாட் ஆப் டாப்பிக்கானது முன்னாள் ஆந்திர முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா பற்றிய செய்திகள்தான். இது குறித்து நடிகை ரோஜா “500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அந்த பங்களா அரசுக்கு சொந்தமானது என்றும் ஜெகன்மோகனுக்கு சொந்தமானது என்று தவறான தகவல் பரவி வருகிறது. ருஷிகொண்டா என்பது ஒரு சுற்றுலா மையம் என்பதால் அங்கு சுற்றுலாத்துறை கட்டிடங்கள் கட்டுவது தவறா? வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடத்தில் […]

Continue reading …

நீதியரசர் அறிக்கையை குறித்து அண்ணாமலை கருத்து!

Comments Off on நீதியரசர் அறிக்கையை குறித்து அண்ணாமலை கருத்து!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளதால் நீதியரசர் சந்துரு அறிக்கையை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ளார். அண்ணாமலை, “பள்ளிக்கூடத்தில் சாதி இருக்க கூடாது என்பதில், பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, மாணவர்கள் நெற்றியில் திலகம் இடுவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது, பள்ளி அளவில் மாணவர் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை” என்று தெரிவித்துள்ளார். நீதியரசர் சந்துரு, அரசுப் பள்ளிகளின் […]

Continue reading …

விஷ சாராயம் பலி எண்ணிக்கை உயர்வு! முதலமைச்சர் இரங்கல்!

Comments Off on விஷ சாராயம் பலி எண்ணிக்கை உயர்வு! முதலமைச்சர் இரங்கல்!

நேற்று கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தியவர்கள் பலர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் தற்போது வரையிலும் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றது. நேற்று அங்கு சாராயம் குடித்த 6 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து மேலும் சாராயம் குடித்த 80க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]

Continue reading …