நடிகர் சுரேஷ் கோபி கேரளாவில் பாஜக சார்பில் நின்று வென்று அமைச்சரானார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை புகழ்ந்து பேசியுள்ளார். பாஜக கூட்டணி இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும் கேரளாவில் முதல் முறையாக ஒரு சீட்டை மலையாள நடிகர் சுரேஷ் கோபி மூலம் கைப்பற்றி தடம் வைத்துள்ளது. சுரேஷ் கோபி அமோக வெற்றி பெற்றதால், அவருக்கு பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் பிரதமர் இந்திரா […]
Continue reading …ஒரே இடத்தில் நான்கு சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த போது அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து அந்த சிறுமிகளை காப்பாற்றி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இன்று ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் 18 வயது நிரம்பாத நான்கு சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நான்கு சிறுமிகளின் பெற்றோரிடம் அறிவுரை வழங்கி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் […]
Continue reading …தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி வரவிருந்ததாகவும் சென்னையிலிருந்து அவர் காணொளி காட்சி மூலம் மதுரையிலிருந்து பெங்களூர் வந்தே பாரத் ரயில் மற்றும் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. பிரதமர் மோடி சென்னைக்கு வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய காவல்துறையினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். திடீரென பிரதமர் மோடியின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக துணை தலைவர் கரு நாகராஜன், “நிர்வாக காரணங்களுக்காக […]
Continue reading …சரக்கு ரயில் ஒன்று மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இவ்விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. சரக்கு ரயில் மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததால்தான் பயணிகள் ரயில் மீது மோதி […]
Continue reading …குரங்கு ஒன்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 24 நாள் குழந்தையை கடித்து குதறி உள்ளது. கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணம் என்ற பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த 24 நாட்கள் மட்டுமே ஆன இந்த குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டிருந்துள்ளது. வினோதினி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று திடீரென தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறிவிட்டு ஓடிவிட்டது. இதையடுத்து குழந்தை உயிருக்காக போராடிய […]
Continue reading …தாத்தாவே மூட நம்பிக்கை காரணமாக பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை கொன்றுள்ளார். மக்கள் மத்தியில் மூடநம்பிக்கை இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தை பிறக்கும்போது கூட நல்ல நேரம் பார்த்துதான் பிரசவம் நடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் தாத்தா வீரமுத்து. குழந்தை பிறந்து ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை சித்திரை […]
Continue reading …500 கோடி ரூபாய் மதிப்பில் முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா கட்டியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் நடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அவரால் எதிர்க்கட்சியை அந்தஸ்தை கூட பிடிக்க முடியவில்லை. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெகன்மோகன் மீது சுமத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் 500 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாவின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளில் […]
Continue reading …காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் மோடி ஆட்சியில் தான் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவத்திற்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி இரங்கலை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மோடிக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதளபக்கத்தில், “மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் […]
Continue reading …கள்ளக்காதல் தொடர்பை துண்டித்துக் கொண்ட பெண்ணை பேருந்து நிலையத்தில் வைத்து ஓட ஓட விரட்டி குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில், அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார். உயிருக்கு பயந்து அந்த பெண் ஓட முயற்சித்த போது, அந்த வாலிபர் விடாமல் துரத்திச் சென்று […]
Continue reading …கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரமாக மேலாக விசாரணை நடைபெற்றது. கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது கடந்த மார்ச் 15ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இப்புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், […]
Continue reading …