அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதால் விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை. அதிமுகவுக்கு சசிகலா ரீ என்ட்ரி ஆக முடியாது என தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம், “2015ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலையை பார்த்துவிட்டோம். இந்த விக்கிரவாண்டி தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கும். விக்கிரவாண்டி தொகுதியில் எல்லா அமைச்சர்களும் முகாமிட்டுள்ளனர். இதுவரை அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த […]
Continue reading …ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “தேர்தல் முடிந்து விட்டது, புதிய அரசும் அமைத்தாகிவிட்டது, இனி மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். குறிப்பாக மணிப்பூரில் உள்ள பிரச்சனையை உடனடியாக தீர்க்க மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்திருந்தார். மத்திய அரசு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்தின் அறிவுரையை ஏற்று தற்போது மணிப்பூர் விவகாரத்தில் சுமூகமான தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. மணிப்பூரில் கடந்த ஒரு […]
Continue reading …காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி இதுகுறித்து எக்ஸ் தளத்தில், “ஜனநாயக நிறுவனங்கள் கைப்பற்றப்படும்போது, மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு வெளிப்படையான தேர்தல் முறை மட்டுமே. வாக்குப்பதிவு இயந்திரம் தற்போது கருப்பு பெட்டியாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி […]
Continue reading …நேற்று விஜய் சேதுபதியின் 50வது படமான “மகாராஜா” வெளியானது. திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெயிலர் ரிலீசாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே […]
Continue reading …நாக் அஸ்வின் இயக்கும் கல்கி திரைப்படம் கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படத்தில் கமல்ஹாசன் “வில்லன்” வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார். ஜூன் 27ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக […]
Continue reading …கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனால் இன்று அதிகாலையே கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகில் மீனவர்கள் சென்றனர். இன்று ஒரே நாளில் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க ஒவ்வொரு ஆண்டும் தடை செய்யப்படுகிறது. இந்த நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்களுக்கு […]
Continue reading …சிறுத்தை ஒன்று திருப்பத்தூரில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டுள்ளது. நேற்று பிற்பகல் திருப்பத்தூரில் சாம் நகர் பகுதியில் வேளையில் சிறுத்தை ஒன்று நடமாடியதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சிலர் உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். அங்கு வந்த வனத்துறையினர் அது காட்டுப்பூனையாக இருக்கலாம் என அவர்கள் பதற்றம் அடையாமல் இருக்குமாறு கூறினர். ஆனால் அங்கு உண்மையாகவே சிறுத்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக சிறுத்தையை […]
Continue reading …நகை வியாபாரி ஒருவர் தங்க நகை திட்டம் மூலம் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவர் கணவரும் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். நடிகை ஷில்பா ஷெட்டி பாலிவுட் சினிமாவில் 90களில் பிரபலபமாக இருந்தவர். தமிழில் “மிஸ்டர்.ரோமியோ” உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்த ஷில்பா ஷெட்டி தொடர்ந்து படங்கள், விளம்பரங்களில் நடித்து வருகிறார். கடந்த சில காலமாக ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா தம்பதியர் மீது குற்றச்சாட்டுகள் அதிகமாகியுள்ளது. கடந்த […]
Continue reading …லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் 2 மணிநேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர். விழுப்புரம் தாசில்தார் மீது 2015ம் ஆண்டு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடலூர் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுந்தர்ராஜன், […]
Continue reading …நெல்லை கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஜாதி பிரிவினர் மற்றும் பெண் வீட்டார் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இச்சம்பவத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம். தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் […]
Continue reading …