Home » Entries posted by Shankar U (Page 417)
Entries posted by Shankar

அமித்ஷாவின் பேச்சால் பரபரப்பு!

Comments Off on அமித்ஷாவின் பேச்சால் பரபரப்பு!
அமித்ஷாவின் பேச்சால் பரபரப்பு!

உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜதான் பொதுமக்களின் கட்சி என்றும், காங்கிரஸ் கட்சி மன்னர்கள், ராணியின் கட்சி என்றும் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்த மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சராக வேண்டும் என்றால் நீங்கள் மன்னர் அல்லது ராணியின் மகன் அல்லது மகளாக இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி மன்னர்கள் மற்றும் […]

Continue reading …

பிரபல பாப் பாடகர் பலி!

Comments Off on பிரபல பாப் பாடகர் பலி!

இறந்தவர்களை நினைவுகூறும் ஹாலோவீன் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கொரியன் பாடகர் லீ ஜிகான் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆசிய நாடானா தென் கொரியாவில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தலைநகர் சியோலில் இறந்தவர்களை நினைவுகூறும் ஹாலோவீன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 154க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லையோ என கேள்வி எழுப்பப்பட்டு […]

Continue reading …

ஜிஎஸ்டி வருவாய் உயர்வு!

Comments Off on ஜிஎஸ்டி வருவாய் உயர்வு!

மத்திய அமைச்சகம் தமிழகத்தில் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் 25% உயர்ந்திருப்பதற்காக கூறியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களை இந்த அரசு அறிவித்து வரும் நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டில் அக்டோபர் மாதத்தின் ஜிஎஸ்டி வருவாய் 25% உயர்ந்து ரூ.9540 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து, மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளதாவது: 2022ம் ஆண்டு, கடந்த ஏப்ரல் […]

Continue reading …

வடகிழக்குப் பருவமழைக்காக முதலமைச்சரின் உத்தரவு!

Comments Off on வடகிழக்குப் பருவமழைக்காக முதலமைச்சரின் உத்தரவு!

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் மழைக்காலத்தில் மேற்கொள்ளப் பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததாவது: வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய பகுதிகளில் மிக கனமழை, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு, […]

Continue reading …

டி.ஆர்.எஸ். கட்சி ராகுல் காந்திக்கு பதிலடி!

Comments Off on டி.ஆர்.எஸ். கட்சி ராகுல் காந்திக்கு பதிலடி!

டி.ஆர்.எஸ். கட்சி, சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியாதவர் ராகுல் காந்தி என்று பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா சமிதி கட்சி தேசிய கட்சியாக உருவானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெலுங்கானா சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று அவர் சர்வதேச கட்சியை நடத்துவதாக நினைத்துக் கொள்ளலாம் என்றும் விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெலுங்கானா அமைச்சர் […]

Continue reading …

சென்னை மாநகராட்சி அவசர எண்கள்!

Comments Off on சென்னை மாநகராட்சி அவசர எண்கள்!

சென்னை மாநகராட்சி சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அவசர நிலைக்கு தொடர்புக் கொள்வதற்கு எண்களை அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதலே சென்னை முழுதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் பல பகுதிகளில் முழங்கால் அளவு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிகால் காரணமாக சில பகுதிகளில் வேகமாக மழைநீர் வடிந்துள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக […]

Continue reading …

அண்ணாமலை கைது!

Comments Off on அண்ணாமலை கைது!

பாஜக தலைவர் சென்னை மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக பேச்சாளர் சாதிக்கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் உள்ள குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ஜெயராம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி நடிகை குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். இந்நிலையில், இந்த மன்னிப்பை ஏற்காத குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து சைதை சாதிக் மீது வழக்கு பதிவு […]

Continue reading …

சல்மான் கானுக்கு கதை சொன்ன அட்லி?

Comments Off on சல்மான் கானுக்கு கதை சொன்ன அட்லி?

இயக்குனர் அட்லி “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து “தெறி,” “மெர்சல்” மற்றும் “பிகில்” ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். அதையடுத்து இப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் “ஜவான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது. இப்போது பரபரப்பாக ஷாருக் கான் படத்தை இயக்கி வரும் அட்லி, சமீபத்தில் நடிகர் சல்மான் கானை சந்தித்து கதை ஒன்றை சொல்லியதாக தகவல்கள் பரவி […]

Continue reading …

குஜராத் பாலம் விபத்தை பற்றி ஆம் ஆத்மி விமர்சனம்!

Comments Off on குஜராத் பாலம் விபத்தை பற்றி ஆம் ஆத்மி விமர்சனம்!

ஆம் ஆத்மி கட்சி மோர்பி சம்பவம் விபத்து அல்ல, கொலை என்று விமர்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய ஐந்து நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு தற்போது தீவிர விசாரணை செய்து […]

Continue reading …

கிரிக்கெட் வீரரின் தந்தை “இந்தியன் 2” திரைப்படத்திலா?

Comments Off on கிரிக்கெட் வீரரின் தந்தை “இந்தியன் 2” திரைப்படத்திலா?

பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை “இந்தியன் 2” திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் சில தினங்களாக கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார். “இந்தியன் 2” மீண்டும் […]

Continue reading …