Home » Entries posted by Shankar U (Page 419)
Entries posted by Shankar

மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு!

Comments Off on மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு!

மனித உரிமை ஆணையம் ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மர்மமான முறையில் சுவாதி கொலை வழக்கில் மரணமடைந்த ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் மின்சாரவயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்திய பின் […]

Continue reading …

சிவகார்த்திகேயன் திரைப்படம் கோடிக்கணக்கில் நஷ்டமா?

Comments Off on சிவகார்த்திகேயன் திரைப்படம் கோடிக்கணக்கில் நஷ்டமா?

தீபாவளிக்கு ரிலீசாகியுள்ள சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் “பிரின்ஸ்” திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றுள்ளது. நேற்று முன் தினம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. ரிலீசுக்கு முன்னதாக திடீரென இந்த திரைப்படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் இருபத்தி மூன்று நிமிடங்கள் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் நீளம் திடீரென 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த மாற்றமே படம் மீது ரசிகர்களின் […]

Continue reading …

ராமராஜனின் கம்பேக்!

Comments Off on ராமராஜனின் கம்பேக்!

தமிழ் சினிமாவில் 80களின் இறுதியிலும் 90களின் தொடக்கத்திலும் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார். அதன் பின் அதிமுகவில் தீவிரமாக இயங்கிய அவர் அதன்பின் அரசியலில் இருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் […]

Continue reading …

காந்தாராவின் சூப்பர் டூப்பர் வெற்றி!

Comments Off on காந்தாராவின் சூப்பர் டூப்பர் வெற்றி!

வெறும் 20 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் 200 கோடி வசூல் செய்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் “காந்தாரா.” இப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. வெறும் […]

Continue reading …

சாராய அமைச்சருக்கு மரியாதை கொடுக்க முடியாது!

Comments Off on சாராய அமைச்சருக்கு மரியாதை கொடுக்க முடியாது!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஒரு கேள்வி கேட்டால் அவருக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சாராய அமைச்சருக்கெல்லாம் மரியாதை கொடுக்க முடியாது என கூறியுள்ளார். காலையில் எழுந்தவுடன் எத்தனை ரூபாய்க்கு சாராயம் விற்கலாம், மதியம் எவ்வளவு சாராயம் விற்பனையாகிறது என்று கணக்கு பார்க்க கூடிய சாராய அமைச்சருக்கு மரியாதை கொடுக்க முடியாது. அவர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரையும் எடுத்து வருகிறார். அவருக்கு ஏன் மரியாதை? நான் ஏற்கனவே […]

Continue reading …

ஹெச் வினோத் பதற்றம்!

Comments Off on ஹெச் வினோத் பதற்றம்!

அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் “துணிவு” படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அஜீத் நடித்துவரும் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையிலுள்ள முக்கிய டப்பிங் தியேட்டரில் சமீபத்தில் “துணிவு” படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளதாம். படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் […]

Continue reading …

விஜய் பட ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பாளர்!

Comments Off on விஜய் பட ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பாளர்!

நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையைக் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றியுள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாவது படக்குழு உறுதி செய்துள்ளது. “வாரிசு” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிக்கின்றனர். படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் “வார்சாடு” என்ற பெயரில் உருவாகி வரும் இத்திரைப்படம் […]

Continue reading …

விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடிக்கு நெருக்கடி!

Comments Off on விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடிக்கு நெருக்கடி!

வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றது தொடர்பாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா தம்பதியருக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் மருத்துவமனையிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணமாகி 4 மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அவர்கள் பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைத்த விசாரணை குழு […]

Continue reading …

செந்தில் பாலாஜியின் மறைமுக சாடல்!

Comments Off on செந்தில் பாலாஜியின் மறைமுக சாடல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பலரது தரப்பிலும் விமர்சித்து வரும் நிலையில் ஆடு வேடத்தில் திரியும் குள்ளநரி நீங்க..! என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கோவை மாநகரின் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற நபர் உடல் சிதறி பலியானார். இந்த கார் வெடிப்பு […]

Continue reading …

செரீனா வில்லியம்ஸின் விளக்கம்!

Comments Off on செரீனா வில்லியம்ஸின் விளக்கம்!

செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் விளையாட்டிலிருந்து தான் ஓய்வு பெறவில்லை என்றும், தன்னால் இன்னும் டென்னிஸ் விளையாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார். டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான வில்லியம்ஸ் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை தரவரிசையில் பெற்றிருந்தார். ஆனால் அதே நேரத்தில் குழந்தை பிறந்த பிறகு செரினா வில்லியம்ஸ் சரியாக விளையாடவில்லை, அதனால் பல தோல்விகளை அடைந்தார் என்று கூறப்பட்டது. குறிப்பாக சமீபத்தில் நடந்த நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்றிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து செரீனா […]

Continue reading …