
கோவை மாநகரில் கார் வெடித்த சம்பவத்தில் சதி முயற்சி செய்ததாக இறந்த முபின் உடலை அடக்கம் செய்வதற்கு அனைத்து ஜமாத்துகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர். கோவை மாநகரின் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற நபர் உடல் சிதறி பலியானார். இந்த விபத்து குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு நேரடியாக சென்று […]
Continue reading …
பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று அரசு விடுமுறை தினமாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது; தமிழக அரசு தொடர்ந்து […]
Continue reading …
தமிழக அரசு 10 வது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிப்பதாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஏற்கனவே 9 முறை பரோல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 10வது முறையும் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 6 தமிழர்களில் ஒருவர் நளினி. இவர் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு […]
Continue reading …
இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அதோடு ‘நான் நாவலைப் படமாக்க மாட்டேன்’ என்றும் கருத்து தெரிவித்துள்ளார். முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது “பிசாசு 2” படத்தை இயக்கி வருகிறார். மிஷ்கினின் படங்களில் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. அது இளையராஜா இசையமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்தளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின். அவர், தனது தம்பி அதித்யா இயக்கும் புதிய திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார். […]
Continue reading …
நடிகர் கார்த்தி நடித்துள்ள “சர்தார்” திரைப்படத்தின் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “சர்தார்.” இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி பண்டிகையொட்டி நேற்று ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், “சர்தார்” திரைப்படம் மக்களின் வரவேற்பை பெற்றது குறித்து, கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “மக்களே, “சர்தார்” […]
Continue reading …
பிரபல இயக்குனர் பைத்தியங்கள் மீது கருணை அவசியம். சிகிச்சை அதனினும் அவசியம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரபல இயக்குனர் நவீன் முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்து பேசியதாக சர்ச்சை எழுந்த பத்ரி சேஷாத்ரியின் கருத்துக்கு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கல்வி செயற்பாட்டளரும், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனராகவும் இருந்து வருபவர் பத்ரி சேஷாத்ரி. சமீபத்தில் இவர் அண்ணா குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை சந்தித்துள்ளது. பத்ரி சேஷாத்ரி தமிழக அரசின் தமிழ் இணையக்கல்வி ஆலோசனை குழுவில் […]
Continue reading …
சென்னையில் போதைப்பொருள் வழக்கில் கைதானவர் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராயப்ப ராஜூ என்பவர் 48 கிலோ போதை பொருள் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தங்களது அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். மூன்றாவது மாடியில் இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த போது திடீரென 13வது மாடியிலிருந்து ராயப்ப ராஜூ கீழே குதித்து […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் கடந்த சில வருடங்களாக விசாரணை செய்தது. சமீபத்தில் அந்த விசாரணை அறிக்கையை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் […]
Continue reading …
அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர் கணவரின் ஒப்புதலுடன் தனது முன்னாள் காதலருடன் வீட்டில் வசிக்கும் ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயது பெண் சாரா என்பவர் ரோனி என்பவரை காதலித்தார். ஆனால் காதலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டு பின்னர் ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவருடன் சாரா சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென முன்னாள் காதலன் ரோனி, சாராவை தேடி வந்து தான் திருந்திவிட்டதாக […]
Continue reading …
தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அக்டோபர் 25ம் தேதியன்று சூரிய கிரகணம் -ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அக்டோபர் 25ம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, யூரல்ஸ், மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, தெற்காசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் எல்லா இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கிரகணம் மேற்கு அடிவானில் புலப்படும். பகுதி சூரிய கிரகணம் என்பதால் முழுமையாக சூரியன் […]
Continue reading …