
உயர்நீதிமன்றம் யூட்யூப் சேனல்கள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும் பட்சத்தில் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தற்போது புற்றீசல் போல் மக்களிடையே பல யூட்யூப் சேனல்கள் தினம்தோறும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறாக உருவாகும் பல யூட்யூப் சேனல்களில் ப்ராங்க் என்ற பெயரில் பிறரை தொல்லை செய்வது, அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக ஆதாரமற்ற தகவல்களை தருவது போன்ற செயல்களும் அதிகரித்துள்ளன. இதுகுறித்த வழக்கு ஒன்றில் இன்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், “மலிவான விளம்பரத்திற்காக யூட்யூப் சேனல்கள் […]
Continue reading …
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய […]
Continue reading …
சொகுசு கார் ஒன்று சென்னை கோயம்பேடு அருகே திடீரென பற்றி எரிந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து சென்ட்ரல் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கோயம்பேடு மேம்பாலத்தில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரின் டிரைவர் உடனடியாக காரை நிறுத்தி தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் கார் முழுவதிலும் தீ பரவியது. இதுகுறித்து தகவலறிந்த அண்ணாநகர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் காரில் […]
Continue reading …
காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் நேரு குடும்பத்தை சேராத ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. நாடு முழுதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 10 மணி முதல் வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது. மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, […]
Continue reading …
மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இனி உருவாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, “தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் போது அவசர காலத்திற்கு மீட்பு படையினர் செல்வதற்காக ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி செய்யப்படும். அனைத்து புதிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஹெலிபேட் வசதி செய்யப்படும். இதன் மூலமாக பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சுறுசுறுப்பாக செய்யப்படும். ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான வசதி செய்யப்பட்டால் […]
Continue reading …
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்பவர் கல்லூரி மாணவி சத்யா என்பரை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு தங்க மான்குட்டியைத் தண்டவாளத்தில் தள்ளினான் ஒரு பேய்மகன்”- என பதிவிட்டுள்ளார். சதீஷ் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதில் காதல் தோல்வி காரணமாக அவர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. இதையடுத்து, […]
Continue reading …
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கேரள மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு அதாவது அக்டோபர் 21ம் தேதி வரை கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. ஐஎம்டி எச்சரிக்கையின் படி, அக்டோபர் 20ம் தேதி வரை கேரள மாநிலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும். திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், […]
Continue reading …
பள்ளிக்கல்வித் துறை இனிமேல் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழ் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளிலும் அரசு பணிகளுக்கும், மருத்துவ படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ் வழியில் படித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்து சான்றிதழை பெற்று வந்தனர். சமீபத்தில் தமிழ் வழியில் படித்ததற்கானச் சான்றிதழ் ஆன்லைனில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. […]
Continue reading …
இன்று ஒரு நாள் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை குறித்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமரக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுக்கு […]
Continue reading …
சென்னை ஐகோர்ட் விஜய்சேதுபதியின் அடுத்த திரைப்படத்தை பற்றிய முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சீனுராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான “இடம் பொருள் ஏவல்” திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆகியும் ஒரு சில பொருளாதார பிரச்சினை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படம் குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து […]
Continue reading …