Home » Entries posted by Shankar U (Page 425)
Entries posted by Shankar

அமைச்சர் மனோ தங்கராஜ் டுவிட்!

Comments Off on அமைச்சர் மனோ தங்கராஜ் டுவிட்!

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பிற மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் திமுக என்றும் ஏற்றுக் கொள்ளாது என கூறியுள்ளார். இந்தி மட்டுமே படித்திருந்தால் மட்டுமே இளைஞர்கள் சில வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்றும் ஆட்சேர்ப்புக்கான தேர்வின்போது கட்டாயமாக ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை முதன்மைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் அலுவல் […]

Continue reading …

2 இளைஞர்களை தாக்கிய செவிலியர்கள்!

Comments Off on 2 இளைஞர்களை தாக்கிய செவிலியர்கள்!
2 இளைஞர்களை தாக்கிய செவிலியர்கள்!

செவிலியர்கள் 2 இளைஞர்கள் மருத்துவமனையைப் புகைப்படம் எடுத்த காரணத்தினால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக இது அறியப்படும் நிலையில் இங்குள்ள சுகாதாரம், மருத்துவவசதிகள் உள்ளிட்டவை பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. பீகார் மாநிலத்தில் உள்ள சப்ரா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அரசு மருத்துவமனையில் […]

Continue reading …

அதிமுகவில் யாரும் தாயுள்ளத்தோடு இல்லை; சசிகலா

Comments Off on அதிமுகவில் யாரும் தாயுள்ளத்தோடு இல்லை; சசிகலா

சசிகலா எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும் என்று கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் அதிமுக கட்சியில் தற்போது நான்கு அணிகளாக பிரிந்துள்ளது. இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி மற்றும் டிடிவி தினகரன் அணி என நான்கு அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா முழுமுயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவை ஒன்றிணைக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்படும்? எப்போது முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த […]

Continue reading …

சசிகலா குற்றம் செய்தவர்; சட்டசபையில் ஆணையின் அறிக்கை!

Comments Off on சசிகலா குற்றம் செய்தவர்; சட்டசபையில் ஆணையின் அறிக்கை!
சசிகலா குற்றம் செய்தவர்; சட்டசபையில் ஆணையின் அறிக்கை!

ஆறுமுகசாமி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சசிகலா குற்றம் செய்தவர் என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் அவர் மீது விசாரணை செய்ய பரிந்துரை செய்ததாகவும் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையில் தகவல் தெரிவிப்பதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையம் ஒரு சில ஆண்டுகளாக விசாரணை செய்து சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று […]

Continue reading …

திருமாவளவனின் மனுவுக்கு ஐகோர்ட் தள்ளுபடி

Comments Off on திருமாவளவனின் மனுவுக்கு ஐகோர்ட் தள்ளுபடி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த அனுமதி உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனையுடன் அனுமதியளித்து […]

Continue reading …

பிரதமர் மோடியை விமர்சிக்கும் ராகுல் காந்தி!

Comments Off on பிரதமர் மோடியை விமர்சிக்கும் ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார் என குற்றம் சுமத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்பவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு ஆகஸ்ட் 15ம் தேதி விடுவித்தது. இந்த குற்றவாளிகள் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறுகையில், “செங்கோட்டையிலிருந்து பெண்களுடைய மதிப்பு குறித்து […]

Continue reading …

‘மாவீரன்’ ரிலீஸ் பற்றிய தகவல்!

Comments Off on ‘மாவீரன்’ ரிலீஸ் பற்றிய தகவல்!

மடோன் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் “மாவீரன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. “டாக்டர்” மற்றும் “டான்” திரைப்படங்களின் வெற்றிக்குப்பின் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கவுள்ளார். ஹீரோயினாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வரும் நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

Continue reading …

மீண்டும் இணையும் மங்காத்தா டீம்!

Comments Off on மீண்டும் இணையும் மங்காத்தா டீம்!

இயக்குனர் வெங்கட் பிரபு தனது குழுவினருடன் சேர்ந்து சிறிய திரைப்படங்களையே உருவாக்கி வந்தார். அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவை வெங்கட்பிரபு பிரம்மாண்டமாக உருவாக்கினார். அப்போது 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் 80 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்றளவும் அஜீத் ரசிகர்கள் கொண்டாடும் படமாகவே உள்ளது. 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வெளியான இந்த படம் சமீபத்தில் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் துரை […]

Continue reading …

‘பகாசூரன்’ செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Comments Off on ‘பகாசூரன்’ செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

மோகன்ஜி இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவான ‘பகாசூரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்த மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சற்றுமுன் படத்தின் இரண்டாவது பாடலாக “காத்ம்மா” என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. சாம் சிஎஸ் கம்போஸ் செய்த இப்பாடலை அவரே பாடியுள்ளார். செல்வராகவன், நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரது […]

Continue reading …

சமந்தாவின் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on சமந்தாவின் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி நடிகை சமந்தா நடித்த “யசோதா” திரைப்படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுமென்றும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். சற்றுமுன் “யசோதா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா கதாநாயகியாக நடித்த “யசோதா” படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 12ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். […]

Continue reading …