
உதயநிதி ஸ்டாலின், எந்த வழிகளில் இந்தியை திணித்தாலும் நாங்கள் சொல்லப்போவது ஒன்றே ஒன்றுதான் அது “இந்தி தெரியாது போடா” என்று கூறியுள்ளார். இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக இளைஞரணி சார்பில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்லப்போவது “ஹிந்தி தெரியாது போடா” […]
Continue reading …
13 கிராம மக்களும் பரந்தூரில் அமைக்கப்போகும் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது திடீரென வாபஸ் பெற்றுள்ளனர். மத்திய மாநில அரசுகள் சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளன. ஆனால் இங்கு விமான நிலையம் அமைக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடினர். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13 கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என […]
Continue reading …
பாஜக தலைவர் அண்ணாமலை “திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். இன்று திமுக இளைஞரணி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுக மீது எதிர்ப்பு வந்தால் அக்கட்சியினர் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுவார்கள். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழியாக இதுவரை மாற்றப்படவில்லை. திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளியில் கூட தமிழ் கட்டாயம் இல்லை. மத்திய அரசு […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போனேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார். சென்னையில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை ஒரு தலையாக காதலித்து வந்த சதீஷ் என்ற இளைஞர், சத்யா தனது காதலுக்கு ஒப்புக்கொள்ளததால் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சத்யா உயிரிழந்ததை தாங்க முடியாமல் அவரது தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சதீஷை கைது செய்து […]
Continue reading …
நாளை மெகா வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. வேலையில்லாத இளைஞர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள நியூ கல்லூரியில் நாளை அதாவது அக்டோபர் 15ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் தகுதியான நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள 300க்கும் […]
Continue reading …
கல்லூரி மாணவி ஒருவரை மின்சார ரயில் முன்பு தள்ளி படுகொலை செய்து தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர். மாணவி இறந்த துக்கத்தை தாங்கிக் கொள்ளாத தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு, கல்லூரி மாணவி சத்யாவை தள்ளி படுகொலை செய்துவிட்டு சதீஷ் என்ற இளைஞர் தப்பி ஓடினார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மகளை இழந்த […]
Continue reading …
இந்திய தேர்தல் ஆணையம் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி எப்போது? என்பது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டசபை வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அதற்கு முன்னரே தேர்தல் நடைபெற வேண்டும். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் அல்லது நவம்பர் இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மாநில […]
Continue reading …
அமெரிக்க அதிகாரிகள் டுவிட்டர் ஒப்பந்தத்திலிருந்து எலான் மஸ்க் விலகியதை குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை வாங்க கடந்த சில மாதங்களுக்கு முன் எலான் மஸ்க் முடிவு செய்தார். ஆனால் அதன் பின் டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதால் அதை வாங்குவதில் இருந்து பின்வாங்கினார். எலான் மஸ்க்கிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையில் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் […]
Continue reading …
நடிகர் விக்ரம் நடித்த “கோப்ரா” மற்றும் “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசான நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கடந்த சில வாரங்களாக இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 18ம் தேதி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் 15 நாட்கள் ஆந்திராவிலும் அதையடுத்த அடுத்த கட்ட படப்பிடிப்பு […]
Continue reading …
தீவிரவாதிகளுடன் போராடி குண்டடிப்பட்டு இறந்த ராணுவத்தின் ஸூம் நாய்க்கு ராணுவத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மோப்ப நாய் ஸூம். சமீபத்தில் ஒரு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் தீவிரவாதிகளை கண்டறிய ஸூம் அனுப்பப்பட்டது. அப்போது தீவிரவாதிகள் சுட்டதால் ஸூம் மீது இரண்டு தோட்டாக்கள் பாய்ந்தது. பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் அந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான […]
Continue reading …