
பள்ளி மாணவிக்கு மாணவர் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் நின்று தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த வீடியோவை வெளியிட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலையருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி சீருடையில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பாலிடெக்னிக் மாணவர் திடீரென தாலியை அந்த மாணவிக்கு கட்டியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]
Continue reading …
பிரபல நிறுவனம் ஒன்று அடுத்தடுத்த அஜீத் திரைப்படங்களை தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹெச்.வினோத், போனிகபூர், தொடர்ந்து 3வது முறையாக கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் தலைப்பு துணிவு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானது. அதனைத்தொடர்ந்து, முழுவீச்சில் படப்பிடிப்புகள் நடந்துக் கொண்டுள்ளது. இன்றுடன் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. “துணிவு” படத்தின் போஸ்ட் புரொடெக்சன் மற்றும் ரீ ரிக்கார்டிங் பணிகள் தொடங்கடப்படவுள்ளது. தற்போது அஜித் 61 படத்தை விக்னேஷ் சிவன் […]
Continue reading …
அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் காலியிடங்கள் இருக்காது என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகமிருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இவ்வாண்டு காலியிடங்கள் இருக்காது என்று தெரிவித்துள்ளார். இந்தாண்டு 1.10 லட்சம் பேருக்கு அக்டோபர் 13ம் தேதி மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இவ்வாண்டு ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பல பிரிவுகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே […]
Continue reading …
வைகோ சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிற்கும் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சோவியத் யூனியனில் மொழி திணிப்பு காரணமாக வீழ்ச்சியடைந்த நிலைதான் இந்தியாவிலும் மொழி திணிப்பு செய்தால் ஏற்படுமென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான பாராளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி […]
Continue reading …
ஆண் நண்பருடன் சேர்ந்து ரீல்ஸ் செய்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை வெட்டிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பலரும் தங்களது பெரும்பான்மையான நேரத்தை ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்ற சிறு வீடியோக்களை செய்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலசமயம் இந்த ரீல்ஸ் மோகம் ஆபத்தாகவும் முடிந்து விடுவதுண்டு. அதுபோல் சென்னையில் அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவரது மனைவி ஈஸ்வரி. கடந்த சில காலமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டிய ஈஸ்வரி அதில் ரீல்ஸ் செய்து […]
Continue reading …
திருவாரூர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் ரிலைன்ஸ் டிரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 2.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிரெண்ட்ஸ் நிறுவனத்தின் மீது சிவப்பிரகாசம் என்பவர் எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு உள்ளாடையை விற்பனை செய்ததாக திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ரூ.265க்கு விற்க வேண்டிய உள்ளாடையை 278 ரூபாய்க்கு விற்றதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் விசாரணை செய்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பு […]
Continue reading …
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இதுவரையில் 11,88,043 புகார்களில் 99% புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல அறிவிப்புகள், திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காணப்படும் மின்சாரம் தொடர்பாக புகார்களை 24×7 செயல்படும் மின் நுகர்வோர் சேவை மையத்தின் மூலம் பெறப்பட்டு, அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படுகின்றன. மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து, இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி […]
Continue reading …
நடிகர் தனுஷ் நடிப்பில் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான “ராக்கி” பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தென்காசியில் தொடங்கவுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் […]
Continue reading …
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியை தொடங்கியவருமான, முலாயம்சிங் யாதவ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். முலாயம்சிங் யாதவ் உத்தர பிரதேசத்தில் மிகப்பெரும் அரசியல் கட்சியான சமாஜ்வாடி கட்சியை தொடங்கியவர். உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான முலாயம் சிங் யாதவ், லோக் சபா எம்.பியாகவும் பதவி வகித்து வந்தார். கடந்த ஆகஸ்டு 22ம் தேதி அன்று முலாயம் சிங் யாதவ்விற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் டில்லி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை […]
Continue reading …
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார். கடந்த 1928ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த சுப்பு ஆறுமுகம் சிறுவயது முதலே வில்லுப்பாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த 40 ஆண்டுகளாக பல இடங்களில் வில்லுபட்டு கச்சேரியை நடத்தியவர் வயது முதிர்வு காரணமாக காலமானார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். அவரது மறைவிற்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுப்பு […]
Continue reading …