Home » Entries posted by Shankar U (Page 433)
Entries posted by Shankar

12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

Comments Off on 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் ஒருவர் பேருந்துக்கு காத்திருந்த 12ம் வகுப்பு மாணவிக்கு தாலிகட்டிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலையருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி சீருடையில் பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த பாலிடெக்னிக் மாணவர் திடீரென தாலியை எடுத்து அந்த மாணவிக்கு கட்டியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை […]

Continue reading …

சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்பு!

Comments Off on சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்பு!

போக்குவரத்துத்துறை தீபாவளிக்கு 16,888 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப் போவதாக அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவிருக்கும் நிலையில் பொதுமக்களின் நலனிற்காக சென்னை தியாகராயர் நகரில் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 24ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் தியாகராயர் நகர் பகுதிக்கு வர உள்ளதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் தியாகராயர் சாலை, தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்கா நோக்கி […]

Continue reading …

ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் மீது தாக்குதல்!

Comments Off on ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் மீது தாக்குதல்!

இன்று திடீரென உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ் மீது மூன்று இடங்களில் ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் காரணமாக கீவ் நகரில் உள்ள […]

Continue reading …

மின்னல் தாக்கி 2 பேர் பலி!

Comments Off on மின்னல் தாக்கி 2 பேர் பலி!

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் 2 பேர் பரிதாபமா பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரிசா மாநிலத்தில் உள்ளூர் அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் பார்க்க வந்தனர். அப்போது திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மின்னல் தாக்கியது. இந்த மின்னல் காரணமாக கால்பந்தாட்ட வீரர்கள் இருவர் பலியானதாகவும் 21 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயம் […]

Continue reading …

கவர்னர் ஆர்.என்.ரவி திராவிடம் என்பதற்கு தந்த விளக்கம்!

Comments Off on கவர்னர் ஆர்.என்.ரவி திராவிடம் என்பதற்கு தந்த விளக்கம்!

கவர்னர் ஆர்.என்.ரவி திராவிடம் என்றால் தமிழ் என சுருக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். அதில் பேசியபோது, ‘தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கு ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கியது. ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்படும் அளவிற்கு சுருக்கப்பட்டுள்ளது. பாரதம் என்ற சொல் ஆங்கிலேயர்கள் இந்தியா என்று பெயர் வைப்பதற்கு முன்னதாகவே வந்துள்ளது. […]

Continue reading …

“சர்தார்” பாடல் ரிலீஸ்!

Comments Off on “சர்தார்” பாடல் ரிலீஸ்!

“சர்தார்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “ஏறுமயிலேறி” பாடல் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சர்தார்’. கார்த்தி இப்படத்தில் வித்தியாசமாக இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் நாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும் ஒரு முக்கிய கேரக்டர்களில் லைலா மற்றும் ரஜிஷா விஜயன் நடித்துள்ளனர். படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் “ஏறு மயிலேறு” என்ற […]

Continue reading …

சிவகார்த்திகேயன் எஸ்டிஆருக்கு கூறிய நன்றி எதற்கு?

Comments Off on சிவகார்த்திகேயன் எஸ்டிஆருக்கு கூறிய நன்றி எதற்கு?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சிம்புவுக்கு நன்றி கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்து இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில் உருவான திரைப்படம் “பிரின்ஸ்.” இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகார்த்தியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படத்தின் டிரெயிலர் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை அலசுகிறது […]

Continue reading …

ஈபிஎஸ் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு!

Comments Off on ஈபிஎஸ் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு!
ஈபிஎஸ் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அதிமுகவின் உட்கட்சி விஷயங்கள் குறித்துப் பேசக்கூடாது என அதிமுக எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிமுக தற்போது பிளவுபட்டு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் என இரு பிரிவுகளாக உள்ளன. இரு பிரிவுகளிலும் எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் விரைவில் கூட இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி புதிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். இதன்படி அதிமுக உட்கட்சி பிரச்சனையை சட்டமன்றத்திற்குள் கொண்டுவரக் கூடாது எனவும் மக்கள் பிரச்சினை மற்றும் […]

Continue reading …

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Comments Off on 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வானிலை ஆய்வு மையம் நாளை நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை 14 மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர்‌, திருச்‌சிராப்பள்ளி, தேனி, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, மதுரை, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி மற்றும்‌ திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, […]

Continue reading …

புதுடில்லியில் பட்டாசு வெடிக்க தடை!

Comments Off on புதுடில்லியில் பட்டாசு வெடிக்க தடை!

தீபாவளியன்று புதுடில்லியில் பட்டாசு வெடிக்க அரசு தடைவிதித்துள்ளது. இத்தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தலைநகர் டில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. மனிதர்கள் வாழ முடியாத இடமாக டில்லி மாறி வருகிறது. இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்த வாகன போக்குவரத்தை குறைத்தல் உட்பட்ட பல நடவடிக்கைகளை டில்லி அரசு மேற்கொண்டு வருகிறது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டில்லி சுற்றுசூழல் துறை அமைச்சர் கோபால்ராய், “டில்லியில் இந்த முறை […]

Continue reading …