Home » Entries posted by Shankar U (Page 434)
Entries posted by Shankar

ராணுவ உடையில் ராமராஜன்!

Comments Off on ராணுவ உடையில் ராமராஜன்!

“சாமானியன்” திரைப்படத்தில் நடிகர் ராமராஜன் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ராணுவ உடையில் ராமராஜன் போஸ்டர் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக 80களின் இறுதியிலும் 90களின் தொடக்கத்திலும் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்தவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வியடைந்ததால் […]

Continue reading …

“காட்பாதர்” படம் 100 கோடி வசூல்!

Comments Off on “காட்பாதர்” படம் 100 கோடி வசூல்!

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியிருக்கும் “காட்பாதர்” திரைப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதால் 100 கோடி கிளப்பில் இணைந்தள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் “லூசிபர்” திரைப்படம் தெலுங்கில் “காட்பாதர்” என்ற பெயரில் ரீமேக்காக உருவானது. இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ளார். சிறப்பு வேடத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். அக்டோபர் மாதம் 5ம் தேதி இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதோடு ரூ.100 கோடி பட்ஜெட்டில் ஆர்பி சவுத்ரி மற்றும் […]

Continue reading …

திருடனின் சாமர்த்தியம்!

Comments Off on திருடனின் சாமர்த்தியம்!

திருட போன இடத்தில் சார்ஜ் போட்ட போனை மறந்த வைத்த திருடன் நடத்திய வினோத சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் சித்திரவேல். வழக்கம்போல ஓட்டல் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடி வீட்டிற்கு சென்றுள்ளார். பின் உணவகத்திற்குள் புகுந்த திருடன் அங்கு கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளான். சித்திரவேலின் ஓட்டலிலிருந்து ஆசாமி ஒருவன் எகிறி குதித்து செல்வதை கண்ட சிலர் சித்திரவேலுக்கு போன் செய்து சொல்லியுள்ளனர். […]

Continue reading …

தமிழக டிஜிபியின் அதிரடி நடவடிக்கை!

Comments Off on தமிழக டிஜிபியின் அதிரடி நடவடிக்கை!

டிஜிபியின் அதிரடி நடவடிக்கையால் “ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் பல முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு காவல்துறை, குற்றங்களை ஒழிப்பதற்காக திடீர் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக ஆபரேஷன் கஞ்சா வேட்டையை நடத்திய காவல்துறை கஞ்சா, பான் […]

Continue reading …

சமுத்திரக்கனி அலுவலகத்தில் மர்ம பெண்?

Comments Off on சமுத்திரக்கனி அலுவலகத்தில் மர்ம பெண்?

நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனியின் அலுவலகத்தில் மர்ம முறையில் பெண் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “நாடோடிகள்,” “போராளி,” “நிமிர்ந்து நில்” உட்பட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் சமுத்திரக்கனி. படங்கள் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இவரது அலுவலகம் மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலெட்சுமி நகர் 10வது தெருவில் உள்ளது. சமீபத்தில் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம பெண் ஒருவர் […]

Continue reading …

மகன்கள் இருவரும் ஒரே நேரத்தில் வெற்றி!

Comments Off on மகன்கள் இருவரும் ஒரே நேரத்தில் வெற்றி!

“ஜெயம்” ரவி மற்றும் மோகன் ராஜா ஆகிய இருவரும் பணியாற்றிய படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளது. இதனால் இவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடிட்டர் மோகனின் மகன்களாகிய மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவருடைய பெற்றோர்களை பெருமைப்பட செய்துள்ளனர். ஜெயம் ரவி நடித்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்படம் 400 கோடி ரூபாய் […]

Continue reading …

அதிமுக ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலர் மீது தாக்குதல்!

Comments Off on அதிமுக ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலர் மீது தாக்குதல்!

அதிமுக ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ளது. இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நகர்மறக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் நிறைவடைந்த பின்பு, கள்ளக் குறிச்சி, 17 வார்டு திமுக கவுன்சிலரான ஞானவேல் என்பவரை, அதிமுக கன்சிலர், அதிமுக நகரச் செயலாளர் பாபு மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். இத்தாக்குதலில் திமுக கவுன்சிலர் ஞானவேலின் சட்டை கிழிந்து உடலில் ரத்தம் வழிந்தது. இதுகுறித்து திமுகவின் அளித்த புகாரின் அடிப்படையில், […]

Continue reading …

நெரிசலில் சிக்கித்தவிக்கும் திருப்பதி!

Comments Off on நெரிசலில் சிக்கித்தவிக்கும் திருப்பதி!

இது புரட்டாசி மாதம் என்பதாலும், குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளதால் தரிசன ஏற்பாடுகளை தேவஸ்தானம் விரைவுபடுத்தி உள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதிக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். தற்போது புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கடந்த 12 மணி நேரமாக தரிசனத்திற்கு மக்கள் அனுமதிக்கப்படாததால் சுமார் 8 கி.மீ நீளத்திற்கு பக்தர்கள் கூட்டம் தரிசனத்திற்காக காத்துள்ளனர். லட்சக்கணக்கான […]

Continue reading …

சீமானின் வலியுறுத்தல்!

Comments Off on சீமானின் வலியுறுத்தல்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீடுவதாக கூறியுள்ளார். மேலும் இவ்வாறு நடைபெறும் முறைகேடுகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி, அவர் சமூக வலைதளத்தில், “தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினரின் தலையீட்டின் பேரில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகளுக்கு தமிழ்நாடு அரசு துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது. திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் […]

Continue reading …

பொறியியல் கல்லூரிகள் புதிதாக தொடங்க தடை!

Comments Off on பொறியியல் கல்லூரிகள் புதிதாக தொடங்க தடை!

2024ம் ஆண்டு வரை நாடு முழுதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை நீடிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய பாடப் பிரிவுகளை மட்டும் தொடங்க அனுமதியளித்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் தற்போது 443 கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த 2018ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு, நாடு முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரி குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக்கு […]

Continue reading …