Home » Entries posted by Shankar U (Page 44)
Entries posted by Shankar

100 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு 40 கோடி ஜிஎஸ்டி-யா?

Comments Off on 100 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு 40 கோடி ஜிஎஸ்டி-யா?

நூறு நாள் வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு ரூ.40 கோடி ஜிஎஸ்டி கட்ட கோரி நோட்டீஸ் வந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மலர் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு விழுப்புரம் வணிக வரி துணை ஆணையர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில், தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டப் படி இந்த ஆண்டுக்கான வரி மற்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கான அபராதம் என மொத்தம் ரூ.40 கோடி ரூபாய் […]

Continue reading …

“சார்பட்டா 2” படத்துக்காக தயாராகும் பா ரஞ்சித்!

Comments Off on “சார்பட்டா 2” படத்துக்காக தயாராகும் பா ரஞ்சித்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் “சார்பட்டா பரம்பரை.” அத்திரைப்படத்தின் வெற்றியால் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்த ஆர்யாவின் மார்க்கெட் ஏறியது. சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது பா ரஞ்சித் “தங்கலான்” படத்திலும், ஆர்யா தன்னுடைய வேறு சில படங்களிலும் நடித்து வருவதால் “சார்பட்டா 2” திரைப்படம் பற்றி அடுத்தகட்ட […]

Continue reading …

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் கைது!

Comments Off on கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் கைது!

நேற்று நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீது மூன்று பிரிவுகளும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. இன்று அவர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சலப் பிரதேசம் மண்டி என்ற தொகுதியில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் வாக்குவாதம் செய்த பெண் காவலர் ஒரு […]

Continue reading …

“மகாராஜா” திரைப்படம் துபாய், புர்ஜ் கலிஃபாவில்!

Comments Off on “மகாராஜா” திரைப்படம் துபாய், புர்ஜ் கலிஃபாவில்!

பேஷன் ஸ்டூடியோஸ் மிகச்சிறப்பான கதைகளைத் தேர்ந்தெடுத்து அதனை உயர்தரமான தயாரிப்பு மதிப்பீட்டுடன் தமிழ் சினிமாவுக்கு வழங்கி வருகிறது. “தி ரூட்” நிறுவனத்துடன் பேஷன் ஸ்டூடியோஸ் கைக்கோத்து இன்னும் நல்ல திரைப்படங்களை வழங்க இருக்கிறது. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான “மகாராஜா” வர்த்தக ரீதியாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. கவனம் ஈர்க்கும் காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் இப்படம் ஜூன் 14, 2024 அன்று வெளியாகிறது. விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால், இச்சிறப்பு நிகழ்வைக் […]

Continue reading …

காவல் நிலையம் முன் பெண்ணிடம் பணப்பறிப்பு!

Comments Off on காவல் நிலையம் முன் பெண்ணிடம் பணப்பறிப்பு!

உடல்நிலை சரியில்லாத தனது பாட்டியை போடி அருகே உள்ள நாகலாபுரம் கண்மணி என்பவர் பார்க்க வந்தார். அப்போது போடி காவல் நிலையம் முன்பு நடந்து சென்ற கொண்டிருந்த போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், பெண்ணின் கையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதுகுறித்து போடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்திற்கு முன்பு நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Continue reading …

இபிஎஸ் சொன்ன அதிரடி பதில்!

Comments Off on இபிஎஸ் சொன்ன அதிரடி பதில்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என்றும் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர், “2019 மக்களவைத் தேர்தலை விட, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பல்வேறு விமர்சனங்களை தாண்டி அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி குறைந்த வாக்குகள் பெற்றுள்ளது. சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்பது தான் கட்சிகளின் நிலைப்பாடு, பாஜக […]

Continue reading …

யுவராஜுக்கு சிறை குறித்து நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Comments Off on யுவராஜுக்கு சிறை குறித்து நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

தமிழ்நாடு அரசு கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் […]

Continue reading …

நாளை பதவியேற்பை முன்னிட்டு டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

Comments Off on நாளை பதவியேற்பை முன்னிட்டு டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

நாளை டில்லியில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள உள்ளார். இதனால் அம்மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கத் தடை, எல்லைகளில் கண்காணிப்பு, போக்குவரத்து மாற்றம் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமாகிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை இரவு 7.15மணியளவில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தலைநகர் டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு […]

Continue reading …

நாளை குரூப் 4 தேர்வு!

Comments Off on நாளை குரூப் 4 தேர்வு!

நாளை காலியாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது. மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அவ்வகையில் கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் […]

Continue reading …

வென்றும் பயனில்லை! தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி!

Comments Off on வென்றும் பயனில்லை! தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி!

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும், நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது என்று தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் அவர், “திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அப்படியில்லை தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு […]

Continue reading …