Home » Entries posted by Shankar U (Page 45)
Entries posted by Shankar

முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்!

Comments Off on முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்!

நாளை மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக புதிய எம்பி-க்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று […]

Continue reading …

தமிழகத்துக்கு வானிலை முன்னெச்சரிக்கை!

Comments Off on தமிழகத்துக்கு வானிலை முன்னெச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், “தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், […]

Continue reading …

ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித்?

Comments Off on ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித்?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ மற்றும் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜீத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதன் பின் அவர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அஜீத் சமீபகாலமாக படங்களில் நடிப்பது மிகவும் குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என்ற வீதத்திலேயே நடிக்கிறார். ஆனால் இனிமேல் அவர் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதனால் அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் நடிக்க […]

Continue reading …

அரசு பேருந்துகளில் தடுப்பு கம்பிகள் பொருத்தம்!

Comments Off on அரசு பேருந்துகளில் தடுப்பு கம்பிகள் பொருத்தம்!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதைத் தடுக்கும் வகையில் 1,315 பேருந்துகளின் கீழ் இரு புற பக்கவாட்டிலும் தடுப்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், “பேருந்து சக்கரங்களுக்கு இடையே விபத்து தடுப்பு கம்பிகளை அமைப்பதன் மூலம் மாநகர பேருந்துகளின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம். இரு சக்கர […]

Continue reading …

கல்கி திரைப்பட ரிலீஸ் உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்!

Comments Off on கல்கி திரைப்பட ரிலீஸ் உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்!

“கல்கி” திரைப்படம் கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்தாண்டு வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஜூன் 27ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக […]

Continue reading …

கெஜ்ரிவால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Comments Off on கெஜ்ரிவால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமலாக்கத் துறை டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து கடந்த 2ம் தேதி […]

Continue reading …

சந்திரபாபு நாயுடு மனைவிக்கு ரூ.572 கோடி சொத்தா?

Comments Off on சந்திரபாபு நாயுடு மனைவிக்கு ரூ.572 கோடி சொத்தா?

சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு 5 நாளில் 579 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி வைத்திருக்கும் சில நிறுவனங்களில் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியான போது அவர் வைத்திருந்த பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்ததாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் கூட புவனேஸ்வரி நிறுவனத்தின் […]

Continue reading …

மோடி அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!

Comments Off on மோடி அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாடாளுமன்ற பராமரிப்பு என்கிற பெயரால், காந்தி, அம்பேத்கர், சத்திரபதி சிவாஜி ஆகியோரது சிலைகள் அகற்றப்பட்டு, இடம் மாற்றம் செயலை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பத்தாண்டுகளாக மாற்றுக் கருத்துகளுக்கும் விமர்சனம் செய்யும் கருத்துரிமையினையும் சகித்துக் கொள்ள முடியாத, பாசிச வகைப்பட்ட தாக்குதலை மோடி அரசு நடத்தி வந்தது. இதன் காரணமாக சிலர் கொல்லப்பட்டனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். […]

Continue reading …

பிரதமரும், முதலமைச்சரும் ரஜினிக்கு அழைப்பு!

Comments Off on பிரதமரும், முதலமைச்சரும் ரஜினிக்கு அழைப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பிரதமராக மோடி பதவி ஏற்கும் விழாவிற்கும், முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் விழாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்த இரண்டு விழாவிற்கும் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. ஜூன் 9ம் தேதி பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்க இருப்பதாகவும் அதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மோடி பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள […]

Continue reading …

நான் முதல்வன் திட்டத்தில் இலவச பயிற்சி!

Comments Off on நான் முதல்வன் திட்டத்தில் இலவச பயிற்சி!

‘நான் முதல்வன்’ திட்டம் தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரசு பணித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு 6 மாத கால இலவச பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தது முதலாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டு பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. SSC, ரயில்வே, வங்கி பணியிடங்களுக்கு தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு 6 மாத காலம் […]

Continue reading …