மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி “பிசாசு 2” திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் மிஷ்கின். படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார். மேட்டுப் பாளையத்தில் இருந்து […]
Continue reading …‘தங்கலான்’ திரைப்படம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவருகிறது. திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் ஜூலை மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் “அட்டகத்தி” தினேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆர்யா, பா. […]
Continue reading …மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் அஜீத் இப்போது நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இத்திரைப்படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்தது. தற்போது இப்போது ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதுவரை 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அஜீத், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட முன்பாகவே தொடங்கி நடைபெற்று வருகிறது. […]
Continue reading …காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றவர். திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் போட்டியிட்டார். அவர் சுமார் 8 லட்சம் வாக்குகள் அதாவது 796956 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பாலகணபதி பெற்ற வாக்குகள் 224801 என்பது தேமுதிக நல்ல தம்பி பெற்ற வாக்குகள் 223904 என்பதும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் […]
Continue reading …‘விடுதலை” பாகம் 1ல் ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் தனது திறமையான நடிப்பிற்கு பலரது பாராட்டுகளையும் பெற்றார். தற்போது ‘வெப்பன்’ திரைப்படத்தில் இன்னுமொரு அசரடிக்கும் நடிப்பைக் கொடுத்துள்ளார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படம் அறிவியல் புனைக்கதை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் இந்தப் படம் ஜூன் 7, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “இயக்குநர் குகன் இக்கதையை என்னிடம் சொன்னபோது […]
Continue reading …திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை தோல்வியடைந்தார். திமுக தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக கோவை மாநகர திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் கோட்டைமேடு பகுதியில் பொது மக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கினர். குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக பாஜக இடையே பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது. அண்ணாமலை என்ற ஆட்டை வெட்டி பிரியாணி போடுவோம் என திமுகவினர் தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக […]
Continue reading …ஆந்திர முதல்வராக பதவியேற்க இருக்கும் சந்திரபாபு நாயுடுவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் ஏற்கனவே பல ஆண்டுகால நண்பர்கள். சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியை பிடித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துக்கு சந்திரபாபு நாயுடு நன்றி என கூறியிருந்தார். பாஜக கூட்டணி 293 தொகுதிகள் பெற்றிருந்தாலும் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பதும் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலையில் […]
Continue reading …கார்த்திக் ப.சிதம்பரம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கார்த்திக் சிதம்பரம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 4,27,677 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சேவியர் தாசை விட 2,05,664 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். அவருக்கு, சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆஷா அஜித் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் […]
Continue reading …கரும்பு விவசாயி சின்னம் சீமானின் நாம் தமிழர் கட்சி மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறாததால்தான் அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து மைக் சின்னத்தில் தான் அக்கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தாலும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்டு 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. பொது தேர்தலில் […]
Continue reading …