Home » Entries posted by Shankar U (Page 462)
Entries posted by Shankar

மடாதிபதிக்கு நீதிமன்ற காவல்!

Comments Off on மடாதிபதிக்கு நீதிமன்ற காவல்!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி சிவமூர்த்தி முருகன் மீது இரண்டு மாணவிகள் பாலியல் புகாரளித்திருந்தனர். இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் காவலில் வைக்க போலீசார் அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி அதற்கு அனுமதி […]

Continue reading …

அன்புமணியின் ஆவேசம்!

Comments Off on அன்புமணியின் ஆவேசம்!

பாமக தலைவர் அன்புமணி தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு செல்ல 700.கி.மீ.க்கும் கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டும்; 36 மணி நேரம் முன்னதாக சென்று அறை எடுத்து தங்க வேண்டும். இது […]

Continue reading …

இளம் நடிகருக்கு நம்பிக்கை தந்த நடிகர் விஜய்!

Comments Off on இளம் நடிகருக்கு நம்பிக்கை தந்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் “அருண் விஜய் மாதிரி நீயும் ஒரு நாள் வருவ” என்று இளம் நடிகருக்கு அட்வைஸ் செய்துள்ளார். “சக்கரக்கட்டி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாந்தணு பாக்யராஜ்.ஆனால் அவருக்கு போதுமான கவனத்தைப் பெற்றுத்தரவில்லை. அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தாலும், இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி அமையவில்லை. விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த “மாஸ்டர்” திரைப்படத்தில் கூட அவரின் கதாபாத்திரம் டிரோல் செய்யப்பட்டது. இப்போது அருண் விஜய்யின் “சினம்“ பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]

Continue reading …

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்!

Comments Off on தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மாணவர்களுக்கு சொந்தமாக அலைபேசி வாங்கிக் கொடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வருகிறார் ஆசிரியர் ராமச்சந்திரன். இவ்வாண்டு இந்தியாவில் 46 பேர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று ஆசிரியர் தினத்தை ஒட்டி டில்லியில் குடியரசு […]

Continue reading …

கூல் சுரேஷின் வேண்டுகோள்!

Comments Off on கூல் சுரேஷின் வேண்டுகோள்!

நடிகர் கூல் சுரேஷ் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. ஆகவே நாளை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு.’’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 15ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக […]

Continue reading …

அகிலேஷ் யாதவின் டுவிட்டர் பதிவு!

Comments Off on அகிலேஷ் யாதவின் டுவிட்டர் பதிவு!

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் சுங்கச்சாவடி தடுப்புகளை இடித்துச் சென்ற வாகனங்களின் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது முறையாக பாஜக தொடர்ந்து பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். ஆக்ராவில் டிராக்டரில் மணல் நடத்தி வந்த கொள்ளையர்கள் அங்குள்ள சுங்கச்சாவடியில் இருந்த தடுப்புகளை தகர்த்துவிட்டு, […]

Continue reading …

ரஷ்ய தூதரகத்தில் மனித வெடிகுண்டு!

Comments Off on ரஷ்ய தூதரகத்தில் மனித வெடிகுண்டு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் ரஷ்ய தூதரகத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று வழக்கம்போல ரஷ்ய தூதரகம் செயல்பட தொடங்கிய நிலையில் பலரும் விசா பெற விண்ணப்பிக்க வந்துள்ளனர். அப்போது தூதரகம் அருகே பயங்கரவாதி ஒருவன் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில், குண்டு வெடித்து பலரும் சிதறி விழுந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் […]

Continue reading …

அஜீத்துடன் பைக் ரைட் போன மஞ்சு வாரியர்!

Comments Off on அஜீத்துடன் பைக் ரைட் போன மஞ்சு வாரியர்!

நடிகர் அஜீத்துடன் முதன் முறையாக பைக் ரைட் சென்ற மஞ்சு வாரியார் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக்கில் லாங் ரைடு செல்வதை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். “வலிமை” படத்திற்கு பிறகு தற்போது அஜீத் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே லடாக் லாங் பைக் ரைடு சென்ற அஜீத்குமாருடன், நடிகை மஞ்சு வாரியரும் […]

Continue reading …

சிம்பு திரைப்படத்தின் டிரையிலர்!

Comments Off on சிம்பு திரைப்படத்தின் டிரையிலர்!

நடிகர் சிம்பு நடித்துள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் டிரையிலர் நேற்று வெளியானது. “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் டிரையிலர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இப்படத்தின் டிரையிலர் 2 நிமிடங்கள் உள்ளன. அதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் உள்ளன. சாதாரண இளைஞன் ஒரு கொள்ளைக்கூட்டத்தில் இணைந்து படிப்படியாக உயர்ந்து டான் ஆகும் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் சிம்பு வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் […]

Continue reading …

புதிய சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்!

Comments Off on புதிய சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உடல் உறுப்புகளை டிரோன் மூலம் கொண்டு செல்லும் புதிய சேவையை தொடங்கி வைத்தார். உடல் தானம் செய்வதற்கு பெரும்பாலும் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு வாகனங்களே பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் செல்லும் போது பெருமளவில் போக்குவரத்தை நெரிசலை சரி செய்வதும், மக்களுக்கு சிக்கல் ஏற்படுவதும் பெரும்பாலான இடங்களில் நாம் காண்கிறோம். உடல் உறுப்புகளை டிரோன் மூலம் கொண்டு செல்லும் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழக […]

Continue reading …