Home » Entries posted by Shankar U (Page 465)
Entries posted by Shankar

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் வெற்றிமாறன் படம்!

Comments Off on ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் வெற்றிமாறன் படம்!

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படத்தை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வகையில் “அசுரன்” திரைப்படத்திற்குப் பிறகு “விடுதலை” திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். மேலும் கௌதம் […]

Continue reading …

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்!

Comments Off on விரைவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்!

திமுக தேர்தலின் போது அறிவித்த குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 என்ற திட்டத்தை நிதிநிலைமையை சரிசெய்த பிறகு இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் நேரத்தில் கட்சியின் சார்பில் வெளியிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்தான் அவர்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது என்று கூறலாம். அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு […]

Continue reading …

ஈரோட்டில் உடைந்த தடுப்பணை!

Comments Off on ஈரோட்டில் உடைந்த தடுப்பணை!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளம் அதிகமாக உள்ளது. அதே போல் ஈரோட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை உடைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரலவாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள நீரோடைகள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் மாக்காம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட […]

Continue reading …

‘ஆபரேஷன் சவுத்’

Comments Off on ‘ஆபரேஷன் சவுத்’

இன்று பிரதமர் நரேந்திர மோடி பல ஆயிரம் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க கேரளாவுக்கு வருகை தந்தார். பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, முதலில் கேரளாவுக்கு இன்று மாலை பிரதமர் மோடி வருகிறார். கொச்சி விமான நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு வந்தடையும் பிரதமர் நரேந்திர மோடி, 6 மணிக்கு ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடமான கல்லடி கிராமத்துக்கு சென்று ஆதி சங்கர ஜென்மபூமியை பார்வையிடுகிறார். ரூ,1,950 கோடி […]

Continue reading …

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Comments Off on ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மூத்த குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்தியாவிலுள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நல்ல அறிவிப்புகளை வழங்கி வருகிறது. ஓய்வூதியம் பெறும் பென்சனர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை வருடா வருடம் கொடுத்துதான் பென்சன் தொகையை பெற வேண்டியிருக்கும். மிக எளிதாக அஞ்சலகத்திலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம், ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை வாழ் நாள் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இந்த […]

Continue reading …

மூத்த தலைவர்களின் திடீர் செல்பி!

Comments Off on மூத்த தலைவர்களின் திடீர் செல்பி!

எதிர் எதிர் துருவங்களான கார்த்தி சிதம்பரம் மற்றும் அண்ணாமலையும் திடீரென சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை எம்பியான கார்த்தி சிதம்பரமும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தேசிய அரசியல் முதல் மாநில அரசியல் வரை எதிர் கட்சியாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இருகட்சி தலைவர்களும் சந்தித்துக் கொள்கிறார்கள். தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் எம்பியாக […]

Continue reading …

கடந்த ஆண்டைவிட ஜிஎஸ்டி அதிக வசூல்!

Comments Off on கடந்த ஆண்டைவிட ஜிஎஸ்டி அதிக வசூல்!

2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி கடந்த ஆண்டைவிட 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தகவல்கள் தெரிவித்துள்ளது. நாட்டில் 1.43 லட்சம் கோடியை ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வசூலை எட்டியுள்ளது. மேலும் தொடர்ந்து ஆறாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் இந்த சாதனையை படைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து வருகிறது. இந்த கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதியமைச்சகம் சற்றுமுன் […]

Continue reading …

திருத்தணி கோவில் அதிகாரிகளின் அசைவ விருந்து!

Comments Off on திருத்தணி கோவில் அதிகாரிகளின் அசைவ விருந்து!

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான விடுதியில் கோவில் அதிகாரிகள் அசைவ உணவு உண்ணும் வீடியோ வைரலாகி உள்ளது. திருத்தணி பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் இல்லம், தணிகை இல்லம் ஆகியவற்றில் கட்டண அடிப்படையில் பக்தர்களுக்கு அறைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிலபேர் கோவில் குடியிருப்புகளில் தங்கியிருந்து விரதம் இருந்து தங்களது […]

Continue reading …

குழந்தை நட்சத்திரம் சூப்பர் ஸ்டாருக்கு பேரன்!

Comments Off on குழந்தை நட்சத்திரம் சூப்பர் ஸ்டாருக்கு பேரன்!

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான “ஓ2” திரைப்படத்தில் அவருக்கு குழந்தையாக நடித்திருந்த சிறுவன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் பேரனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை எப்படியாவது டாப் ஹிட்டாகிவிட வேண்டுமென்ற முழு முயற்சியோடு இருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். தற்போது இப்படத்தில் தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாகவும், ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், […]

Continue reading …

டிசி கொடுக்க ஒன்றரை லட்சமா?

Comments Off on டிசி கொடுக்க ஒன்றரை லட்சமா?

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் சான்றிதழ் வழங்க ரூ.1.5லட்சம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் எம்ஏஎம் மெட்ரிக் மற்றும் சீனியர் செகண்டரி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்களை தர மறுத்து வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பக்ருதீன் […]

Continue reading …