
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூ.22 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆன செலவிற்கு நிகரான வருமானம் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் இந்த மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி […]
Continue reading …
இந்தி நடிகர் அமிர் கான் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்து புகழ்பெற்ற படமான “பாரஸ்ட் கம்ப்” படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த “லால் சிங் சத்தா”. இப்படத்தை இந்தியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர். இன்று திரைப்படம் வெளியான நிலையில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை […]
Continue reading …
வானிலை மையம் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது. கடந்த சில வாரங்களாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இன்று மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழக மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான […]
Continue reading …
மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் இன்று காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே நடத்த துப்பாக்கிசூட்டில் மரணமடைந்துள்ளார். காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹாலில் இந்திய பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக இருவர் எல்லையை தாண்டி ஊடுறுவியுள்ளனர். அவர்களை நிற்க சொல்லி ராணுவத்தினர் தடுத்தபோது அவர்கள் துப்பாக்கியால் ராணுவத்தினரை நோக்கி சுடத் தொடங்கியுள்ளனர். இதனால் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் […]
Continue reading …
கடந்த வாரம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சீதாராமம்!” வெளிவந்த இரண்டாவது வாரத்திலேயே அதிக தியேட்டர்களில் வசூலில் குவித்துள்ளது. “வாயை மூடி பேசவும்,” “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது துல்கர் சல்மானின் “சீதாராமம்” திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா […]
Continue reading …
பல வருடங்களுக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசனுக்கு நடிகர் சத்யராஜ் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. “இந்தியன் 2” திரைப்படத்தில் நடிகர் சத்யராஜை நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.1 கோடி பரிசு தொகை வழங்கினார். கடந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்டு 8ம் தேதியுடன் போட்டிகள் நிறைவடைந்தது. போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதால் இந்திய வீரர்கள் கணிசமான அளவில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக […]
Continue reading …
தொடர்ந்து பள்ளி மாணவிகள் தற்கொலை நிகழ்வுகள் நடந்து கொண்டே உள்ளது. தற்போது பிளஸ் 2 பள்ளி மாணவி பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மல்லிகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மாம்பலப்பட்டு என்ற பகுதியில் பள்ளியில் அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, காலையில் வகுப்பில் மயங்கி விழுந்தார். உடனே பள்ளி ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் […]
Continue reading …
கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இறந்து 30 நாட்கள் கடந்த நிலையில் அவரது தாயார் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார். இதுபற்றி அவர் ஸ்ரீமதியின் தாயார் கூறும்போது, “ஸ்ரீமதி இறந்து இன்றோடு 30 நாட்கள் ஆகிவிட்டது. இது திட்டமிட்ட கொலைதான். ஆனால் கொலை செய்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கிறது. எனவே ஒரு தாயின் உணர்வை புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்க உள்ளேன். […]
Continue reading …
டீக்கடையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வானபாடி கிராமத்திலுள்ள செல்வராஜ் (58) என்ற நபருக்குச் சொந்தமான டீக்கடையில் சிலிண்டர் வெடித்தது. இவ்விபத்தில், ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவ்விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். தற்போது 5 பேர் வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் விபத்து தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் […]
Continue reading …