தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்களவை தேர்தலில் கருத்துக்கணிப்பில் தவறான முடிவை வெளியிட்டதற்காக கருத்துக்கணிப்பு நிபுணர் கதறி அழுத சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது. 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1ம் தேதி 7வது கட்ட தேர்தலும் முடிந்த கையோடு பல கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிகள் எவ்வளவு இடங்களில் வெற்றிபெறும், யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வந்தனர். அவ்வாறாக கருத்துக்கணிப்பில் ஈடுபட்டு ஆக்ஸிஸ் […]
Continue reading …இன்று நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமைக்க வேண்டி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சிலர் பாஜக கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு உடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் வெற்றி […]
Continue reading …சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனின் படங்களான “என் ஜி கே” மற்றும் “நானே வருவேன்” படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்றது. அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான “7ஜி ரெயின்போ காலணி” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவரின் பழையப் படங்களான “புதுப்பேட்டை,” “காதல் கொண்டேன்” மற்றும் “7 ஜி ரெயின்போ காலணி” உள்ளிட்ட படங்களை […]
Continue reading …ரீமால் புயல் வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே கரையை கடந்தது. தமிழகத்தில் 9 துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு 10.30 முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக கரையை கடந்தது என தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு 110 – 120 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோமீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியது. ரீமால் புயலின் […]
Continue reading …குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு தனி திறமை பயிற்சி வகுப்புகள் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் ஃபோனிக்ஸ் என்ற தனியார் சென்டரில் நடைபெற்று வருகிறது. குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் “லிட்டில் செப்” என்ற தலைப்பில் நெருப்பில்லாமல் உணவு பொருட்களை வைத்து சமைக்கும் சமையல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் குழந்தைகள் ஆர்வமுடன் பல உணவு பொருட்களை தட்டுகளில் வைத்து பல்வேறு விதமான உணவுப் பொருட்களை தயாரித்து செய்து காட்டினர். பின் அந்த உணவுப் பொருட்களை எவ்வாறு தயார் செய்தோம் […]
Continue reading …இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் “இந்தியன் 2” பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஜூலை 12ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது. “இந்தியன் 2” படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக “இந்தியன்” முதல் பாகத்தை மே […]
Continue reading …நடிகர் தனுஷ் தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ள படம் தான் அவரது 50 வது படமான “ராயன்”. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார். இதில் தனுஷ் […]
Continue reading …சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் “கூலி.” கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது. இதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. “கூலி” படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக செய்திகள் […]
Continue reading …இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் மே 31ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும், கேரளாவில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையம் மே 31ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாமல் ராஜபக்சே இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமானவும் உள்ளார். அவர் மட்டக்களப்பில் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடிய போது, “அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளை அடிக்கப்படுகிறது, தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். இலங்கையில் வரும் அக்டோபர் 17ம் தேதி அதிபர் தேர்தல் […]
Continue reading …