Home » Entries posted by Shankar U (Page 49)
Entries posted by Shankar

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

இரவு மற்றும் அதிகாலை என 2 இ-மெயில்களில் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இ-மெயிலில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையம் முழுவதும் ஆய்வு செய்தனர். அதன்பின் விசாரணையில் போலி மிரட்டல் என தெரியவந்தது. இ-மெயில் அனுப்பியவரை போலீசார் தேடி வருவதாகவும், ஐபி முகவரியை வைத்து வெடிகுண்டு […]

Continue reading …

அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த மார்ச் 21ம் தேதி டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தல் காரணமாக பிரச்சாரத்திற்கு செல்லும் வகையில் ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த 10ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் 1ம் தேதியுடன் இடைக்கால […]

Continue reading …

மதுரையில் பொதுமக்கள் சாலை மறியல்!

Comments Off on மதுரையில் பொதுமக்கள் சாலை மறியல்!

தொடர்ந்து பெய்த மழையால் மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மாநகராட்சி வார்டு 84-வது வார்டு பகுதியில் சாக்கடை நீர் செல்லாமல் குளம் போல் தேங்கியுள்ளது. 84வது வார்டு பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரியிடம் பல்வேறு முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் திடீரென மதுரை விமான நிலைய சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவனியாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணி குமார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மார்ட்டின் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் […]

Continue reading …

போதை ஊசியால் 17 வயது சிறுவன் பலி!

Comments Off on போதை ஊசியால் 17 வயது சிறுவன் பலி!

17 வயது சிறுவன் சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்துள்ளார். சென்னை புளியந்தோப்பு டிகாஸ் சாலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, கடந்த 6 மாதமாக வேலைக்குச் சென்றுள்ளான். வெள்ளிக்கிழமை மாலை பாரிமுனை லோன்ஸ் ஹொயர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சிறுவன் சென்றுள்ளான். அங்கு தனது நண்பர்கள் 3 பேருடன் அமர்ந்து சிறுவன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, நண்பர்கள் 4 பேரும் போதை ஊசி செலுத்திக் […]

Continue reading …

முன்னாள் முதல்வர் சாலையில் அமர்ந்து போராட்டம்!

Comments Off on முன்னாள் முதல்வர் சாலையில் அமர்ந்து போராட்டம்!

இன்று காலை 7 மணி முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திடீரென முன்னாள் முதலமைச்சர் மெகபூபா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்று 6வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் இன்று தான் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் மக்கள் நீண்ட அரசியல் […]

Continue reading …

அனைவரும் வாக்களிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!

Comments Off on அனைவரும் வாக்களிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உங்கள் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இன்று 6 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில், ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், “வாக்குப்பதிவின் முதல் ஐந்து கட்டங்களில், நீங்கள் பொய்கள், வெறுப்பு மற்றும் பிரச்சாரங்களை நிராகரித்து, உங்கள் வாழ்க்கை தொடர்பான அடிமட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளீர்கள். இன்று ஆறாவது […]

Continue reading …

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்!

Comments Off on டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகளுக்கான குரூப் 2, 2ஏ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024ம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணை 24.4.2024ல் வெளியிட்டபோது தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப் […]

Continue reading …

பேருந்துகளில் ஏர் ஹாரன் சோதனை!

Comments Off on பேருந்துகளில் ஏர் ஹாரன் சோதனை!

போக்குவரத்து போலீசார், கோவையில் பேருந்துகளில் ஏர் ஹாரன் சோதனை நடத்தினர். விதி மீறலில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். தமிழக அரசு பேருந்துகளில் ஏர் ஹாரன் எனப்படும் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனைகள் செய்து பேருந்துகளில் ஏர் ஹாரன் இருந்தால் அவற்றை அகற்றி அப்பேருந்துகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் கோவை […]

Continue reading …

கூகுள் மேப் காட்டிய வழியால் ஆற்றில் விழுந்த கார்!

Comments Off on கூகுள் மேப் காட்டிய வழியால் ஆற்றில் விழுந்த கார்!

கேரளாவிற்கு சுற்றுலா சென்றவர்கள் கூகுள் மேப் காட்டும் வழியில் சென்றதால் காருடன் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சொகுசு காரில் சுற்றுலா சென்றனர். அந்த காரில் ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநருக்கு வழி தெரியாத காரணத்தினால் கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி உள்ளார். கோட்டயம் வந்த போது கார் ஆற்றுக்குள் விழுந்தது. அப்போது உள்ளே இருந்தவர்கள் நீரில் தத்தளித்த […]

Continue reading …

கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? மம்தா கேள்வி!

Comments Off on கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? மம்தா கேள்வி!

கடவுளின் குழந்தை என்று தன்னை பிரதமர் மோடி சமீபத்தில் கூறிக் கொண்டார். அவரது கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கேலி செய்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘கலவரத்தை தூண்டி விடவும் விளம்பரங்கள் மூலம் பொய்களை பரப்புவுமா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பாரா? கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 100 நாள் வேலை திட்டத்தின் நிதியை நிறுத்துவதற்காக கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பாரா? மக்களின் வங்கி கணக்கில் ரூபாய் 15 […]

Continue reading …