
மத்திய அரசு 9 மாநிலங்களுக்கும் கொரோனா பற்றிய தகவலை குறித்து கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இந்தியாவில் குறைந்திருந்தது. ஆனால் தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் குறைந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் பாதித்துள்ளனர். […]
Continue reading …
எடப்பாடி பழனிசாமியிடம் சென்னை ராயப்பேட்டை உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதிமுக அலுவலகத்தை கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற பொழுது ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகிய தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் வைத்த சீலை அகற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இரு தரப்பிலிருந்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]
Continue reading …
பஸ்சில் அதிக சத்தத்துடன் கூடிய சினிமா பாடல்கள் ஒலிபரப்பட்டு வருகின்றன. இந்த ஒலியால் பயணிகள் மற்றும் கண்டக்டருக்குமிடையேயான தகவல் தொடர்பு பாதிக்கப்படுகிறது. இரட்டை அர்த்தமுள்ள பாடல்களும் இசைக்கப்படுவது, பயணிகளுக்கு இடையூறாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியன் சென்னை மாநகரப் போக்குவரத்துத்துறையில் புகார் கூறியுள்ளார். இதையடுத்து, சென்னை மாநகரப் பேருந்துகளில் சினிமாப் பாடல்கள் இசைப்பதற்கு மாநகரப்போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனரின் மன அழுத்தத்தைப் போக்கவே பாடல்கள் இசைக்கப்படுவதாக ஓட்டுநர்கள் தரப்பில் […]
Continue reading …
‘லத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுகிறது. நடிகர் விஷால் நடிப்பில், வினோத் குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள படம் “லத்தி”. இப்படத்தில் விஷாலின் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது. ஒரு நிமிடத்திற்கு மேல் இந்த டீசரில் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். படத்தின் டீசர் ஆரம்பிக்கும் முன்பு சிவாஜிகணேசன், எம்ஜிஆர், கமல், ரஜினி, விஜயகாந்த், விக்ரம், அஜித், விஜய் உட்பட பல […]
Continue reading …
500 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் நகைகள் ரொக்கம் ராஜபாளையத்தில் மர்மமான முறையில் தம்பதிகள் கொலை செய்து கொள்ளை போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜகோபால் குருபாக்கியம் தம்பதியினர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களின் இரு மகன்களும் வெளியூரில் பணிபுரிவதால் தம்பதிகள் தனியாக வசித்து வருகின்றனர். ராஜகோபால் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜபாளையம் பகுதியில் உள்ள பல நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து […]
Continue reading …
பணம் அனுப்புவதற்காக பல முறைகள் கையாளப்பட்டு வருகிறது. வங்கிகளின் மூலமாக மட்டுமல்லாமல் கூகுள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல முறைகளில் தற்போது பணம் அனுப்பலாம். இனி வரும் காலங்களில் விரைவில் இன்ஸ்டாகிராம் மூலமும் பணம் அனுப்பலாம் என்ற முறையை அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகளின் மூலமாக மட்டுமே பண மாற்றம் செய்ய முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்த நிலையில் தற்போது தனியார் செயலிகள் மூலம் பணம் அனுப்பலாம் என்ற நிலை வந்துவிட்டது. அவ்வகையில் […]
Continue reading …
12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர், அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்நிலையில் இவ்விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்காததால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதோடு மட்டுமல்லாமல் மாவட்ட […]
Continue reading …
எச்.ராஜா பிரபல பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி ஜிஆர் வைத்தியநாதன் அவர்கள் உத்தரவிட்டார். சவுக்கு சங்கர் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. “சவுக்கு சங்கர் ஒரு டேட்டா திருடன். இந்த டேட்டா திருடன், விசாகா கமிட்டி முன்பு பாலியல் குற்றச்சாட்டு எதிர கொண்டு வருபவன் ஆதாரமின்றி அனைவரையும் விமரிசிப்பவன் […]
Continue reading …
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார வாரியத்தின் கட்டண உயர்வு தொடர்பாக கொடுத்த மனுவை ஏற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50ம், இரண்டு மாதங்களில் 301 – 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50ம், இரண்டு மாதங்களில் 501 -600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155ம், இரண்டு மாதங்களில் 601 – 700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 கட்டணத்தை உயர்த்துவதற்கு […]
Continue reading …
சென்னை வானிலை மையம் அடுத்து வரும் 3 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஒரிரு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன் நீலகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, […]
Continue reading …