தமிழக அரசின் செயல்பாடு எப்படி? கூட்டணிக் கட்சி தலைவர் விமர்சனம்! கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடரை வட இந்திய மாநிலங்களை விட தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக கையாண்டு வருகின்றனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவும் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. இத்தனைக்கும் மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதி முழுவதுமாக வந்து சேரவில்லை. இந்நிலையில் […]
Continue reading …நினைவில்லமாக மாற்றப்படும் வேதா இல்லம் – முட்டுக் கட்டை போடு ஜெ தீபா! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த அவரது வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்பட உள்ளதற்கு ஜெ தீபா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது வேதா இல்லத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இறந்த நிலையில் தற்போது அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என அதிமுக […]
Continue reading …தகுதியான அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும் என பொதுத்துறை வங்கிகளிடம் மத்திய நிதியமைச்சரின் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுத்துறை வங்கியின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் மேலாண் இயக்குனர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் தகுதியான நிறுவனத்துக்கு கடன் வழங்குவதற்கான வங்கிகளுக்கு மத்திய அரசு 100 விழுக்காடு உத்தரவாதம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி போன்றவரை குறித்து கவலை இல்லாமல், அச்சம் கொள்ளாமல் […]
Continue reading …விவசாய பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானிலிருந்து தற்போது மத்திய பிரதேசத்துக்கு சென்றுள்ளது. இதனிடையே மத்திய பிரதேசத்தில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பல பகுதிகளில் வருட வருடம் வெட்டுக்கிளிகள் கூட்டம் வருவது வழக்கம். இந்த வெட்டுக்கிளிகள் விவசாய பயிர்களை உண்ணும் தன்மை உள்ளதால் அவற்றை அழித்து விடுகிறது. தற்போது ராஜஸ்தானில் உள்ள பல பகுதிகளிலிருக்கும் பயிர்களை அழித்துவிட்டு வெட்டுக்கிளிகள் தற்போது மத்திய பிரதேசத்தில் […]
Continue reading …பாஜகவுக்கு சென்ற வி பி துரைசாமிக்கு பெரிய பதவி காத்திருக்கிறது! அமித்ஷாவின் திட்டம்! திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த வி பி துரைசாமி சில தினங்களுக்கு முன் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி பி துரைசாமிக்கும் தலைமைக்கும் கடந்த சில மாதங்களாக நல்லுறவு இல்லை என்று சொல்லப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக அவர் திமுக தலைவர் ஸ்டாலின் மேல் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகனை சந்தித்த […]
Continue reading …ஊரடங்கால் தமிழகத்துக்கு 35,000 கோடி நிதியிழப்பு – முதல்வர் கவலை! கொரோனா காரணமாக தமிழகத்தில் ஜிஎஸ்டி இழப்பு 35,000 கோடியாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனாவால் இந்தியா முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும், ஜி எஸ் டி வருவாய் அதிகமாக அளிக்கும் மாநிலமாக உள்ள தமிழ்நாட்டுக்கு இது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அளித்துள்ளது. இந்நிலையில் […]
Continue reading …கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் குணம் அடைந்து வீடு திரும்பினார் 100 வயது சாந்தாபாய் பாட்டி. கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்பவர்கள் அதிகமாக முதியவர்கள் தான். ஆனால், சில நாடுகளில் 90 வயது மேல் உள்ளவர்களும் கொரோனாவை வென்று உள்ளனர். இதைப்போல் மத்தியபிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சாந்தாபாய் என்றால் 100 வயது பாட்டி கொரோனாவை வென்றுள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு, தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ளார். மேலும், வீடு […]
Continue reading …ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. இவர் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை என புதிய சாதனை படைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்சை எதிர் கொண்டார். அந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்ற நவோமி ஒசாகா உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். சென்ற ஆண்டு மட்டும் இந்திய பண மதிப்பில் 284 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு 225 கோடி […]
Continue reading …பிரதமர் மோடி அவர்கள் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே உடன் தொலைபேசியில் கலந்து துரையாடல் மேற்கொண்டார். இதில் கொரோனா வைரஸ், சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்புகளை பற்றி இருவரும் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். இரு தலைவர்களும் இந்தியா தனியார் துறையில் இலங்கையில் முதலீடு மற்றும் மதிப்பு கூட்டல் போன்றவற்றை மேம்படுத்துவதை பற்றி பேசியுள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு அனைத்து ஆதரவுகளையும் இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி அவர்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு […]
Continue reading …டிவிட்டரில் உதவிக் கேட்ட இளைஞர்… உடனடியாக ஆக்ஷன் எடுத்த முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ! தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்ட உதவியை அடுத்து முதல்வர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் ‘என் அப்பா கேரளா சென்று வந்தார். எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கு. நெஞ்சுவலியால் ரொம்ப கஷ்டப்படுறன். மருத்துவரிடம் […]
Continue reading …