
வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “கோப்ரா” திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் “கோப்ரா” தான். கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. திரைப்படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதேபோல் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் […]
Continue reading …
“அஞ்சான்” திரைப்படம் 2015ம் ஆண்டு வெளியாகி படுதோல்வி அடைந்தது. “அஞ்சான்” திரைப்படத்திற்காக இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத தோல்வி படமாக அமைந்தது “அஞ்சான்.” தற்போது ‘தி வாரியர்’ திரைப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பற்றி ரிலீஸூக்கு முன்பே நேர்மறையான தகவல்கள் […]
Continue reading …
“பாகுபலி” திரைப்படத்திற்கு பின் அனுஷ்கா நடிப்பிலிருந்து விலகி இருந்தார். “பாகுபலி” திரைபடத்தில் நடித்துக் கொண்டிருந்த போதிலிருந்தே அவருக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசு வெளியானது. ஆனால், இதுகுறித்து அவர் எந்த தகவலும் கூறவில்லை. ஒரு பிரபல தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தில் அனுஷ்கா முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது ஒரு காமெடி படத்தில் நடிக்கவுள்ளாராம். இதன் மூலம் இழந்த மார்க்கெட்டை அவர் மீண்டும் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Continue reading …
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிய திரைப்படம் “டான்”. இத்திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். படத்தின் வெற்றிக்குப்பின், அவரது நடிப்பில் “பிரின்ஸ்,” “அயலான்” என படங்களில் வரிசையாக திரைக்கு வர உள்ளன. ஒரு பிரபல யூடியூப் சேனலில் சிவகார்த்திகேயன் அதிக பங்குகள் வைத்துள்ளதாகவும், இந்தச் சேனலுக்கு சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த யூடியூப் சேனலை நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வாங்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
Continue reading …
தமிழக அரசு ரேசன் கடைகளில் காதி பொருட்கள், பனைவெல்லம் ஆகிய பொருட்களை விற்பனை செய்யும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை தருவதாக அறிவித்துள்ளது. தமிழக அரச வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள நியாய விலைக்கடைகளில் காதி பொருட்கள், பனைவெல்லம் ஆகிய பொருட்களை ஒரு மாதத்திற்கு மேல் கடைகளில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்ய வேண்டும். கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 15 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற நியாயவிலைக் கடைகளில் […]
Continue reading …
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தேமுதிக கட்சியில் உட் தேர்தல் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார். தேர்தல் நடத்துவதற்கு தேமுதிகவின் சட்ட விதிகளின் படி தேர்தல் பணி குழு அமைக்கப்படுகிறது. தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்த்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள். கழக அமைப்பு தேர்தல் குக்கிராமங்களில் உள்ள ஒன்றிய ஊராட்சி வாரியாக பூத் கிளை கழகங்கள் துவங்கி, ஊராட்சி கழகம், பேரூர் வார்டு கழகம், நகர வார்டு பூத் […]
Continue reading …
ஆயுத கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் பலியாகி உள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏமன் நாட்டின் தெற்கு மாகாணமான அபியனில் இருக்கும் ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏமனின் லாடர் நகரில் உள்ள பிரபலமான சந்தையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் அதிகாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்திற்கு விசுவாசமான படைகளால் இந்த நகரம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. […]
Continue reading …
ஈபிள் டவருக்கு ஒலிம்பிக் விளையாட்டையொட்டி வண்ணம் பூசுவதற்கு ரூ.200 கோடி செலவிடப்பட உள்ளது. பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிஸ் மிகப்பெரிய நகரம் மற்றும் சுற்றுலாத்தளதமாகும். இங்கு உள்ள ஈபிள் டவர் உலகின் மிக உயர்ந்த இரும்புக் கோபுரம். இதை காண லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். வரும் 2024ம் ஆண்டு இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈபிள் டவருக்கு பெயிண்ட் அடிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு ரூ.200 கோடி செலவு செய்யப்போகிறது அந்நாட்டு அரசு.
Continue reading …
காதலித்த பெண்ணையே காதலன் கத்தியால் குத்திய சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் அருகிலுள்ள குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்த 20வயதான சதீஷ்குமாரும், அதே பகுதியை சேர்ந்த 18வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இன்று திருவலம் பேருந்து நிலையத்தில் மாணவி பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த சதீஷ்குமார் மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். மாணவி […]
Continue reading …
“என்னை யாரும் அவமதிக்கவில்லை” என தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அவர் சமீபத்தில் சென்ற போது அவரை அவமதித்ததாக கூறப்பட்டது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதற்கு விளக்கமளித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன் “சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் அவமதிக்கவில்லை, நான் அவமதிக்கப்பட்டதால் வெளிவந்த தகவல் பொய்யானது. படியில் உட்காரக்கூடாது என்று ஒருவர் சொன்னார். அப்புறம் அவர் போய்விட்டார்” என்று கூறியுள்ளார்.
Continue reading …