Home » Entries posted by Shankar U (Page 506)
Entries posted by Shankar

லேப்டாப், கம்ப்யூட்டர்; முதலமைச்சர் அறிவிப்பு!

Comments Off on லேப்டாப், கம்ப்யூட்டர்; முதலமைச்சர் அறிவிப்பு!

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான வை.யெஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திர மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது. புதிய புதிய திட்டங்களை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து வருகிறார். அந்த வரிசையில், 8ம் வகுப்பு மாணவியருக்கு டேப்லெட் கம்யூட்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு டேப்லெட்டின் மதிப்பு ரூ.12 ஆயிரம் ஆகும். இவ்வாண்டு அரசுப் பள்ளிகளில் சுமார் […]

Continue reading …

மாஸ்க் போடவில்லையெனில் அபராதம் 500!

Comments Off on மாஸ்க் போடவில்லையெனில் அபராதம் 500!

நாளை முதல் மாஸ்க் போடவில்லை எனில் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயின் பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்புகள் 2500ஐ தாண்டியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்புகள் 1000க்கும் மேல் பதிவாகியுள்ளது. ஆகவே, சென்னையில் நாளை முதல் பொது இடங்களில் மாஸ்க் கண்டிப்பாக போட வேண்டும். அப்படி போடாவிடில் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர் கைது!

Comments Off on உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர் கைது!

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவரை சாமி படம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள பேப்பரில் இறைச்சியை மடித்து கொடுத்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் சாம்பல் பகுதியில் தலிப் ஹுசைன் என்பவர் கறிக்கடை மற்றும் மெஹாக் என்னும் உணவகத்தை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் விற்கப்படும் கறியை பார்சல் செய்வதற்கு திட்டமிட்டே இந்து கடவுள்கள் உள்ள நாளிதழ்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. பலரும் அவர் இந்து கடவுள் படம் உள்ள பேப்பரில் கறி மடிக்கும் போட்டோவை […]

Continue reading …

நாமக்கல்லில் பக்தர்கள் மகிழ்ச்சி!

Comments Off on நாமக்கல்லில் பக்தர்கள் மகிழ்ச்சி!

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவிலில் சுவாமியை தரிசனம் செய்வதற்கு இனிமேல் கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல்லில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில் மேற்கூரை அற்றது. இக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட மாநிலம் முழுவதுமிலிருந்து மக்கள் வருகின்றனர். தமிழகத்திலேயே 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை இங்குதான் அமைந்துள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருபவர்கள் தரிசிப்பதற்கு நபர் ஒருவருக்கு ரூ.20 தரிசன கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. பலர் […]

Continue reading …

அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம்!

Comments Off on அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம்!
அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. மாநிலம் முழுவதும் இன்று பாஜக திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கை கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இன்று பாஜக தனது […]

Continue reading …

ஆஸ்கர் கலைஞருக்கு கண்டனம்!

Comments Off on ஆஸ்கர் கலைஞருக்கு கண்டனம்!

ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண், ஆலியாபட் உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர்.” இத்திரைப்படம் “பாகுபலி” பட வசூல் சாதனையை முறியடித்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இத்திரைப்படம் குறித்து ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினீயர், எடிட்டர், ஆடியோ மிக்சர் என பன்முக திறமைக்கொண்ட ரசூல் பூக்குட்டி சர்ச்சைக்குரிய விமர்சனம் […]

Continue reading …

விரைவில் “கலைஞர் உணவகம்!”

Comments Off on விரைவில் “கலைஞர் உணவகம்!”

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விரைவில் தமிழகத்தில் ‘கலைஞர் உணவகம்‘ திறக்கப்படும்: என்று கூறியுள்ளார். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இவ்வுணவகம் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. அம்மா உணவகங்கள் ஒரு சில இடங்களில் மூடப்பட்டு வருவதாகவும் ஒரு சில இடங்களில் சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி […]

Continue reading …

ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள பேனா திருட்டு!

Comments Off on ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள பேனா திருட்டு!

ரூ.1.3 லட்சம் மதிப்புடைய எம்.பி. விஜய் வசந்த்தின் பேனா காணாமல் போனதாக போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. 1.3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேனா காணாமல் போனதாக காங்கிரஸ் கட்சியின் எம்பி விஜய் வசந்த் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கடந்த பல ஆண்டுகளாக ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள பேனாவை பயன்படுத்தி வருகிறார். அந்த பேனா திடீரென காணாமல் போய் விட்டதாக அவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கிண்டியில் உள்ள தனியார் […]

Continue reading …

பாஜக எம்.எல்.ஏ. பதிலடி!

Comments Off on பாஜக எம்.எல்.ஏ. பதிலடி!

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழ்நாட்டையே இரண்டாக பிரிப்போம் என்று கூறியுள்ளார். நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா “எங்களை தனித்தமிழ் கேட்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்” என்றார். ஆ ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். “தமிழ்நாட்டை தனியாக கேட்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள். என்றும் தனித்தமிழ்நாடு கேட்கும் நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்போம். தமிழ்நாட்டை இரண்டாக […]

Continue reading …

“கடைசி விவசாயி”திரைபடத்திற்கு அங்கீகாரம்!

Comments Off on “கடைசி விவசாயி”திரைபடத்திற்கு அங்கீகாரம்!

“கடைசி விவசாயி” திரைப்படத்திற்கு உலகளவில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. LetterBoxd எனும் தளம் உலகளவில் திரைப்படங்களை வரிசைப்படுத்தி அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் “கடைசி விவசாயி” திரைப்படம் முன்னணி வரிசையில் உள்ளது. இயக்குனர் மணிகண்டன் “ஆண்டவன் கட்டளை” படத்திற்குப் பிறகு 3 ஆண்டுகள் இடைவெளியில் “கடைசி விவசாயி” படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு இருவரும் கவ-ரவ வேடத்தில் நடித்திருந்தனர். முக்கியமான கதாபாத்திரத்தில் முருகேசன் என்ற வயதான தாத்தா நடித்திருந்தார். கடந்த பிப்ரவரி […]

Continue reading …