Home » Entries posted by Shankar U (Page 51)
Entries posted by Shankar

டெம்போ வேனில் பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல்!

Comments Off on டெம்போ வேனில் பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அரியானா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற டெம்போ வேனில் பயணம் செய்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் முடிந்துள்ளது. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. […]

Continue reading …

ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

Comments Off on ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னால் எடப்பாடி பழனிச்சாமி கை காட்டுபவர் தான் பிரதமராக வருவார் என பேசியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அதனை அடுத்து பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஓரளவு வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணி அதிகபட்சமாக 5 தொகுதிகளில் தான் வெற்றி […]

Continue reading …

ஹரிஷ் கல்யாண் திரைப்படம் ஆஸ்கர் நூலத்தில் இடம்!

Comments Off on ஹரிஷ் கல்யாண் திரைப்படம் ஆஸ்கர் நூலத்தில் இடம்!

சமூக வலைதளத்தில் ஹரிஷ் கல்யாண் தான் நடித்த திரைப்படம் ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற கோரிக்கை விடப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் “பார்க்கிங்” திரைப்படம் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதாக அதில் ஒரு வெளிநாட்டு மொழி […]

Continue reading …

குற்றால அருவிகளில் குளிக்கலாம்!

Comments Off on குற்றால அருவிகளில் குளிக்கலாம்!

மாவட்ட ஆட்சித் தலைவர் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் இன்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி என தெரிவித்துள்ளார். இதையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைகளில் நல்ல மழை பெய்ததை அடுத்து குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, தேனருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்ததை அடுத்து திடீரென அருவியில் வெள்ளம் […]

Continue reading …

தமிழில் கால் பதிக்க பிளான் போடும் ராம் சரண்!

Comments Off on தமிழில் கால் பதிக்க பிளான் போடும் ராம் சரண்!

ராம்சரண் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். இவர் நடித்த சில தெலுங்கு படங்கள் தமிழ் டப்பிங்கிலும் வெளிவந்துள்ளன. தற்சமயம் இவர் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கும் திரைப்படம் “வாடிவாசல்.” எழுத்தாளர் சி.சு செல்லப்பா எழுத்தில் உருவான வாடிவாசல் நாவலை தழுவி இந்த படத்தை இயக்க இருக்கின்றனர். இதில் கதாநாயகர்கள் மாற போவதாக வெகு நாட்களாகவே பேச்சுக்கள் இருந்து வந்தன. […]

Continue reading …

பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை!

Comments Off on பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை!

முன்னாள் பிரதமரான தேவகவுடா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு தாத்தாவாகிய முன்னாள் பிரதமரான தேவகவுடா எச்சரிக்கையில், ‘சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பிரஜ்வால் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டி தீர்க்கிறார்கள், எல்லாம் என் கவனத்திற்கு வந்தது, பொறுமைக்கும் எல்லை உண்டு” என பேரனுக்கு […]

Continue reading …

ரேஷன் கடைபணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை எச்சரிக்கை!

Comments Off on ரேஷன் கடைபணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை எச்சரிக்கை!

கூட்டுறவுத்துறை எச்சரிக்கை நியாய விலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை, 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல், 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 […]

Continue reading …

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்!

Comments Off on மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்!

ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவர் திருநாள் விழா” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அதில், காவி உடையுடன் திருவள்ளுவரின் படம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த ஜனவரி மாதம் காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளப்பின. தற்போது மீண்டும் இதுபோன்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் “திருவள்ளுவர் […]

Continue reading …

அரசு பேருந்துகளுக்கு அபராதம்!

Comments Off on அரசு பேருந்துகளுக்கு அபராதம்!

‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த காவலர் ஒருவர், அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்தார். மேலும் டிக்கெட் எடுக்க சொன்ன பேருந்தின் நடத்துனரிடம் அந்த காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டிக்கெட் எடுக்க முடியாது என கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காவலர்கள் சீருடையில் நீதிமன்றம் உள்ளிட்ட நீண்ட தூரம் செல்லும் […]

Continue reading …

ஊபரின் புதிய அறிமுகம் ஏசி பேருந்து!

Comments Off on ஊபரின் புதிய அறிமுகம் ஏசி பேருந்து!

டெல்லியில் ஏசி பேருந்துகளை இயக்குவதற்கு மாநில அரசு ஊபர் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஊபர் நிறுவனம் இதுகுறித்து, “உள்ளூர் அளவில் செயல்பட்டு வரும் வாகன பார்ட்னர்களுடன் இந்த ஏசி பேருந்துகள் இயக்கப்படும், 19 முதல் 50 பயணிகள் வரை இந்த ஏசி பேருந்தில் பயணம் செய்ய முடியும். உபர் செயலின் மூலம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வழித்தடத்தையும் தேர்வு செய்து […]

Continue reading …